மொனோகுளோனியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொனோகுளோனியஸ்
புதைபடிவம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரோப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னிதிஸ்ச்சியா
துணைவரிசை: மார்ஜினோசெஃபலியா
பெருங்குடும்பம்: செராடொப்சியா
குடும்பம்: செராடொப்சிடீ
பேரினம்: மொனோகுளோனியஸ்
கோப்பே, 1876

மொனோகுளோனியஸ் என்பது, ஐக்கிய அமெரிக்காவின் மொண்டானாவில் உள்ள ஜூடித் ஆற்று அமைவுப் பகுதியிலிருந்தும் கனடாவிலிருந்தும் அறியப்பட்ட பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த செராடொப்சிய தொன்மா ஆகும். இது அடிக்கடி செண்ட்ரோசோரஸ் என்னும் இதை ஒத்த தொன்மாவுடன் குழப்பத்தைத் தருவது உண்டு. சிலர் இவ்விரு பேரினங்களுமே ஒன்றே என்றும், குறிப்பிட்ட எச்சங்கள் வெவ்வேறு வயதுக்குரிய விலங்குகளினதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

மொனோகுளோனியஸ் எட்வார்ட் டிரிங்கர் கோப்பே என்பவரால் பெயரிடப்பட்ட மூன்றாவது செராடொப்சிய தொன்மா ஆகும். முதல் இரண்டும், ஆகாதூமாஸ், பாலியோனக்ஸ் என்பனவாகும். இதன் வகை மாதிரி 1876 ஆம் ஆண்டில், மொண்டானாவில், லிட்டில் பிக்ஹோர்ன் போர்க் களத்திலிருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கோப்பே, சில பகுதிகள் தவிர்ந்த விலங்கின் பெரும்பாலான எலும்புகளைக் கண்டுபிடித்தார். கால்கள் மட்டுமே முழுமையாகக் கிடைக்காதவையாகும். அக் காலத்தில் செராடொப்சியன்கள் பற்றி அறிந்திராததால், பெரும்பாலான மண்டையோட்டுத் துண்டுகள் குறித்து அவர் தெளிவற்று இருந்தார். 1889 இல், டிரைசெராடொப்ஸ் என்னும் தொன்மா இனம் ஓ. சி. மார்ஷ் என்பவரால் விபரிக்கப்பட்ட பின்னரே, மொனோகுளோனியஸ், ஆகாதூமஸ் என்பன பற்றி கோப்பேக்குத் தெளிவு கிடைத்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொனோகுளோனியஸ்&oldid=2741934" இலிருந்து மீள்விக்கப்பட்டது