பேச்சு:வானிலையாலழிதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை. அழிதல் என்பதைக் காட்டிலும் சிதைவு என்றோ குன்றல் என்றோ இருந்தால் கூடுதல் பொருத்தமாக இருக்கும்போலத் தோன்றுகிறது. மற்ற பயனர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:58, 11 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வானிலையாலழிதல் என்பது இலங்கையிற்பொது வழக்கிலுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 08:27, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர், மதனாஹரன். இலங்கை பாடநூல்களில் வானிலையாலழிதல் பொதுப்பயன்பாட்டிலுள்ளது. தமிழ்நாட்டு வழக்கில் எப்பதம் இதற்கு சமானமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் அறிதல் அவசியம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:56, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
வழக்கில் பாடநூல்களில் இருந்தால் இந்தத் தலைப்பே இருக்கட்டும். தமிழ்நாட்டுப் பாடநூல்களில் எவ்வாறு உள்ளது எனத் தெரியவில்லை. அழிவு என்பது ஒரு முற்றான நிகழ்வு போலத் தோன்றியதாலேயே தயங்கினேன். -- சுந்தர் \பேச்சு 17:46, 16 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
  • காலநிலையால் சிதைவுறுதல் என உள்ளது மேலும் தட்பவெப்பநிலை என்ற பதமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அழிதல் என்பது இல்லாமல் செய்தல். சிதைதல் என்பது உருமாற்றம் போன்றது. எனவே வானிலையால் சிதைவுறுதல் அல்லது காலநிலையால் சிதைவுறுதல் என்பதாக அமைக்கலாம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:24, 18 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
பாறைச்சிதைவு என்று புவியியல் மேல்நிலை - முதலாம் ஆண்டுத் தமிழ் நாட்டுப் பாடநூலில் உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் சூழ்நிலைச்சிதைவு என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. சுந்தர் கூறியது போன்று வானிலையாலழிதல் என்பது பொருத்தமற்று இருப்பது போன்று தோன்றுகின்றது. (தொடுப்பு:http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-Geog-EM.pdf )--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:39, 18 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வானிலையாலழிதல் என்று பாடநூல்களில் இருந்தாலும், அது பொருத்தமற்றதாகவே தோன்றுகின்றது. வானிலையால் சிதைவுறல் அல்லது வானிலையால் சிதைவு என்பது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது. சிலவேளை தட்பவெப்பநிலை அல்லது காலநிலை தான் இந்த இடத்தில் பொருந்தி வருமோ என்றும் தோன்றுகின்றது. அப்படியானால் காலநிலையால் சிதைவு என இருக்கலாமோ?--கலை (பேச்சு) 14:30, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

தகவலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பார்வதி, செந்தி, கலை. ஏற்பு இருந்தால் வானிலையால் சிதைவுறுதல் அல்லது காலநிலையால் சிதைவுறுதல் என மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 12:13, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வானிலையாலழிதல் என்றுதான் நாம் கற்றோம். தலைப்பை மாற்றுவது, அப்படிக் கற்றவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகாதா?--பாஹிம் (பேச்சு) 12:48, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

மேற்கூறிய உரையாடலின்படி, பொருளைக் கொண்டு பார்க்கும்போது வானிலையால் சிதைவுறுதல் சரியென்றால், வானிலையாலழிதல் தலைப்பையும் வைத்துக் கொண்டே, வழிமாற்றியை ஏற்படுத்தி, புதிய தலைப்புக்கு கட்டுரையை நகர்த்தலாம். அப்படியானால் குழப்பம் ஏற்படாது என நினைக்கின்றேன். உரையாடி முடிவெடுங்கள்.--கலை (பேச்சு) 14:30, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஆம் வானிலையால் சிதைவுறுதல் வழிமாற்றை உருவாக்குவது சரியானது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:57, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வானிலையாலழிதல்&oldid=1194121" இலிருந்து மீள்விக்கப்பட்டது