மலமலசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலமலசர் என்போர் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலைப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இப்பகுதியில் மலமலசரைப் போன்று பதிமலசர் என்னும் இனத்தாரும் வாழ்கின்றனர். மலமலசர் மலைகளிலும் பதிமலசர் மலை அடிவாரத்திலும் வாழ்கின்றனர். [1]

மலமலசர் தாம் வாழுமிடத்தைப் பாடி என்றழைப்பர். இவர்கள் காட்டுக் கடவுளரை வழிபடுகின்றனர். நாட்டுத்தெய்வங்களைக் கும்பிடுவதில்லை. ஆசுத்திரேலிய இனத்தைச் சேர்ந்த இம்மக்கள் தடித்த உதடும் கருமையான மயிரும் குட்டையான உருவமும் கொண்டவர்கள். மலமலசர்க்கு தாடி அடர்த்தியாக வளர்வதில்லை. இவர்தம் பேச்சில் தாடி என்பதற்கு தனியான சொல்லை இல்லை. மீசையை மேல் மீசை என்றும் தாடியை கீழ் மீசை என்றும் அழைக்கின்றனர்.

இவர்கள் யாரும் அணுக இயலாதவாறு காட்டினுள்ளே குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். இவர்கள் பேசுவது தமிழின் கிளை மொழியாகும். இறந்தோரைப் புதைத்தல் இவ்வின மக்களின் வழக்கம்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலமலசர்&oldid=3790042" இலிருந்து மீள்விக்கப்பட்டது