பேச்சு:தமிழர் பொருளாதாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு சிக்கலான தலைப்பு. தற்போதைய நிலைமை ஒரு தொடக்க புள்ளி மட்டுமே. நன்றி. --Natkeeran 13:14, 30 மார்ச் 2008 (UTC)

குறிப்புகள்[தொகு]

  • பொருளாதார நிலைமை
  • தொழில் முனைவு
  • ஏற்றதாழ்வு
  • உலகமயமாதலும் தமிழர் பொருளாதாரமும்

தொழில் மதிப்பீடுகள்[தொகு]

இன்று தமிழர்கள் உயர் அறிவியில தொழில்நுட்பம் வேண்டிய துறைகளில் சிறப்பு பெறுகின்றார்கள்.

--Natkeeran 13:19, 30 மார்ச் 2008 (UTC)

தமிழர் பொருளாதாரத்தின் சில தனித்துவமான இயல்புகளின் பின்னணிகள் பற்றியும் ஆராய்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, குடியேற்றவாதக் காலத்தில் பெருமளவில் தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இதன் வரலாற்று அடிப்படைகள் என்ன? தமிழரின் மரபுவழித் தாயகப் பகுதிகளின் பெரும்பகுதி வரண்ட பகுதிகளாக இருப்பது அவர்கள் பொருளாதார அமைப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? நவீன பொருளாதாரச் சூழ்நிலைகளில் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தனித்துவமான போக்கு ஏதாவது உண்டா? தற்போதைய அவர்களுடைய பொருளாதார நிலைமைகளுக்கு அடிப்படையாக தமிழர்களுக்கே உரிய தனித்துவமான பண்புகள் ஏதாவது உள்ளனவா? போன்ற ஏராளமான விடயங்கள் ஆராயப்படலாம். மயூரநாதன் 15:45, 30 மார்ச் 2008 (UTC)

பெரும் பரப்பு[தொகு]

இது மிகவும் விரிவாக உடைத்து எழுதப்பட வேண்டிய கட்டுரை என நான் நினக்கிறேன். சங்ககாலம்,சோழர்,பாண்டியர் மற்றும் பின்வந்த நாயக்கர்,ஆங்கிலேயர்,சுதந்திரத்தின் பின்னர்,இலங்கை தமிழர்,புலம்பெயர்வு என பலகாலகட்டமும் தொட்டு செல்லல் நலம் என கருதுகின்றேன்--கலாநிதி 17:35, 31 மார்ச் 2008 (UTC).

ஆமாம், இது ஒரு தொகுப்புக் கட்டுரையாக இருக்கட்டும். பல தலைப்புகளில் தனிக் கட்டுரைகள் ஆக்கலாம். --Natkeeran 02:11, 2 ஏப்ரல் 2008 (UTC)

ஒரு பக்கச் சார்பான (POV) கருத்த்து[தொகு]

///எடுத்துக்காட்டாக முதலாம் உலக நாட்டை சேர்ந்த அனேக அமெரிகர் ஒரு தானுந்தாவது வைத்திருப்பார், ஆனால் பெரும்பால தமிழர்களிடம் அது இல்லை./// தானுந்து வைத்திருப்பதை ஒரு பொருளாதார மதிப்பீடாக கொடுப்பது ஒரு பக்கச் சார்பான (POV) கருத்தாகும். இதை விடுத்து வேறு வழிகளில் பொருளாதார தரத்தை அளவிட வேண்டும்.