கவிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிரம் என்பது ஒரு கவாஅன்.

கவாஅன் என்னும் சொல் மலையிடைவெளிக் கணவாயைக் குறிக்கும். இந்த ஊர் தற்போதைய செங்கோட்டை நகராகும். இக்கவிரம் ஆய் ஆரசர்ககுக்கு கீழும் பாண்டியர் குடிகளில் ஒன்றான கவுரியர் மன்னர்களின் கீழும் இருந்திருக்கிறது. இக்கவிரத்தை ஆண்ட பாண்டியர் பிரிவினரே கவுரியர் என்று அழைக்கப்பட்டனர்.[1] இப்பிரிவில் ஒருவனே பெரும்பெயர் வழுதி ஆவான்.[2] ஆய் அரசன் ஆண்ட பொதிய மலையின் இரண்டு முகடுகள் இணையுமிடத்திலிருக்கும் மலைப்பிளவு ஒன்று கவிரம் எனப்பட்டது. இந்தக் கவிரம் மலைப்பிளவில் அழகிய மலர்கள் நிறைந்த ஒரு சுனை இருந்ததாம். அந்தச் சுனையில் சூர்மகள் வாழ்ந்தாளாம்.

(தலைவி ஒருத்தி இப்போது சிறுமியாக இல்லையாம். கவிரத்தில் உறையும் சூர்மகள் போன்று அழகாலும், பார்வையாலும் ஆண்களை மயக்கும் பருவம் கொண்டிருக்கிறாளாம்).[3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். 150. 
  2. புறநானூறு 3
  3. தெனாஅது ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உருகெழு கவாஅன் ஏர்மலர் நிறைசுனை உறையும் சூர்மகள் மாதோ – பரணர் பாடல் அகநானூறு 198.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிரம்&oldid=1327298" இலிருந்து மீள்விக்கப்பட்டது