தான்-தானின் வீனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்பொருளின் நிழற்படமொன்றைப் பார்த்து வரையப்பட்ட படம்.

தான் -தானின் வீனசு (Venus of Tan-Tan) என்பது, மொரோக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொல்பொருள் ஆகும். 6 சதமமீட்டர் குவாட்சைட்டுக் கல்லால் ஆன இது ஆணோ பெண்ணோ என்று அடையாளம் காண முடியாததும் முகம் அற்றதுமான ஒரு மனித உருவம் எனக் கருதப்படுகிறது. இது கிமு 300,000 ஆண்டுக்கும் 500,000 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என மதிப்பிடப் பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு செருமனியிலுள்ள எசே மாநிலத்தின் அரச தொல்லியலாளரான லுட்சு ஃபீட்லர் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார். இது மொரோக்கோவில் உள்ள தான்-தான் என்னும் நகரிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள டிரா ஆற்றின் வடக்குக் கரையில் கண்டெடுக்கப்பட்டது.


இதுவும் இதன் சம காலத்ததுமான பெரகாத் ராமின் வீனசும் இதுவரை கண்டறியப்பட்டவற்றுள் காலத்தால் முந்திய மனித உருவங்கள் எனக் கருதப்படுகின்றன.


சர்ச்சை[தொகு]

இதன் தோற்றத்தையும், தன்மையையும் குறித்துத் தொல்லியலாளரிடையே சர்ச்சை நிலவுகிறது. இதனைக் கண்டுபிடித்தவரும், ராபர்ட் பெட்னாரிக்[1] போன்றவர்களும் ஓரளவுக்கு மனித உருவம் போல் காணப்பட்ட கல்லை மனிதர்கள் கற்கருவிகளினால் மேலும் செப்பம் செய்துள்ளனர் என்றும், இதன் மீது காணப்படும் பூச்சு, மனிதர்களால் அழகூட்டுவதற்காகப் பூசப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால், இல்லினோயிசுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இசுட்டான்லி அம்புரோசு போன்றவர்கள் இது இயற்கையான மாற்றங்களால் உருவாகி ஓரளவுக்கு மனித உருவம் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளது என்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. See for instance:
    Robert G. Bednarik. 2003. A figurine from the African Acheulian. Current Anthropology 44(3): 405-13.
    Robert G. Bednarik. 2003. The earliest evidence of paleoart. Rock Art Research 20 (2): 89-135.
    Resources for the study of art history. Part 1 Prehistoric Art

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்-தானின்_வீனசு&oldid=2299767" இலிருந்து மீள்விக்கப்பட்டது