பேச்சு:நாற்காலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் பொதுவாக நாற்காலி, முக்காலி என்று காரணப்பெயர்களை சொல்லி ஒப்பேற்றி விடுகிறார்கள். கதிரை ஈழத் தமிழ் வழக்கு என்று நினைக்கிறேன். இந்த சொல்லின் மூலம் ஏதும் இருந்தால் அறிய ஆவல். தமிழ்ச் சொல்லாக இருக்கும்பட்சத்தில் இதையே முதன்மைத் தலைப்பாக கொள்ளலாம்--Ravidreams 20:03, 4 மார்ச் 2007 (UTC)

நாற்காலி, முக்காலி - இவை எல்லாவற்றையுமே இருக்கை என்று சொல்லலாம் என்று இப்பொழுது தான் நினைவு வந்தது :) பெரிதும் புழக்கத்திலும் உள்ள சொல். இதை முதன்மைப்படுத்தலாமா? இருக்கை seat என்ற பொருளுக்குத் தான் பெரிதும் பொருந்துமா என்பதும் உரையாடத்தக்கது--Ravidreams 21:13, 4 மார்ச் 2007 (UTC)

பின்னால் உள்ள சாய்வுத் தளம் chairஐ வரையறைக்கும் முக்கிய ஒன்றாக இருப்பதை இன்று தான் கவனித்தேன். வெறும் நான்கு கால்களுடன் stoolகளும் (தமிழில் என்ன?) இருக்க முடியும் ! புட்டுவம் என்பதும் புதுச் சொல். இலங்கை வழக்கா? இருக்கை, seat என்பதைக் குறிக்கவே மிகவும் பொருந்துவது போல் தோன்றுகிறது. --ரவி 13:43, 13 ஏப்ரல் 2007 (UTC)

stool என்பதற்கு மொட்டல் என்று தேவநேயப் பாவாணர் பரிந்துரைத்ததாக நினைவு. இருக்கை நல்ல பயன்பாடெனினும் சீட் என்பதற்குப் பொருந்தும். மேசை, பீங்கான் போன்றவை போர்த்துகீச மொழியிலிருந்து பெறப்பட்டவை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கதிரை எப்படி எனத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 08:42, 28 ஜூன் 2007 (UTC)

புட்டுவம்[தொகு]

புட்டுவம் என்னும் சொல் சிங்களவர்களாலேயே பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் எவரும் இதனைப் பாவித்தது நானறியேன். குறிப்பாக வடகிழக்கில் இச்சொல் பாவனையில் இல்லை. கொழும்பில் சிங்களவர்களுடன் கலந்த சில தமிழர் இப்படிச் சொல்லலாம். ஆனால் இது கட்டாயம் தமிழ்ச் சொல்லல்ல. மற்றும் நாற்காலி என்பதும் ஈழத்தில் (குறைந்தது எழுத்தில்) பாவனையில் உள்ளது. கதிரை என்பதன் மூலாம் தெரியவில்லை. நாற்காலி என்பதை முதன்மைப் படுத்தலாம் என்பதே என் கருத்து.--Kanags 08:31, 28 ஜூன் 2007 (UTC)

--Kanags 08:31, 28 ஜூன் 2007 (UTC)

சிறீதரின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். எனது குடும்பத்தில் அப்பா அம்மாவைவிட அப்பாவின் அப்பாவிற்கோ அம்மாவின் அப்பாவிற்க்கோ யாரிற்கும் சிங்களம் தெரியாது. புட்டுவம் என்பதை எத்தனை இலங்கைத் தமிழர்களுக்கு விளங்கும் என்பதை நானறியேன். தவிர சிங்களம் போன்றல்லாமல் தமிழ் இலங்கையில் மாத்திரம் பாவிக்கப்படும் மொழியும் அல்ல. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் புட்டுவம் என்று எழுதினால் விளங்கிக் கொள்வார்கள்?. நாற்காலி சரியோ பிழையோ இலங்கையில் பாவனையில் உள்ளது. கூகிள் தேடுபொறியில் சென்றபோது சுவாரஸ்யமான விவாதம் ஒன்று கிடைத்தது பார்க்க: தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும் யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து. --Umapathy 13:07, 28 ஜூன் 2007 (UTC)
கதிரை சப்பாத்து (= செருப்பு), முதலியன கட்டாயம் வேற்றுமொழிச்சொற்கள். 'டச் (நெதர்லாந்தர், ஒல்லாந்தர்) அல்லது போர்ச்சுகீசியர் சொல் என்பது என் நினைவு. தமிழல்ல. அறிந்தவர்கள் எம்மொழிச்சொல் என்று கூறவும். --செல்வா 23:30, 29 ஜூன் 2007 (UTC)--செல்வா 23:31, 29 ஜூன் 2007 (UTC)

கதிரை[தொகு]

இங்கு பெயரிட்டிருப்பது போர்ச்சுகீசிய ஒலிப்பு அடிப்படையில் மட்டுமே. ஆனால், தமிழின் கதிரை பல்பொருள் ஒரு மொழியாகும்.

  1. ஒரு நுட்ப அளவு
    (எ.கா) கதிரெழுதுக ளெண்மூன்று கசாக்கிரகந் தானாகும் (கந்தபுராணம் அண்டகோ. 5).
  2. கதிர் காமம் (நூல்நூற்குங் கருவி, தட்டார்கருவிவகை, முருகத்தலம்)
  3. கதிரை- ஊர்பெயர். கூட்டழற் கதிரை யூர்கோள் வளைத்தவா (சீவக சிந்தாமணி 1136]]).

எனவே, இத்தலைப்பு தமிழல்ல. இத்தலைப்பு அகற்றப்பட வேண்டும். நாற்காலி என்பது சிறப்பானச் சொல். ஒப்பேற்றுவதற்காக, தமிழில் உருவாக்கப்பட்ட சொல்லல்ல. வணக்கம்.07:04, 5 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


நாற்காலி என்பது எப்படிச் சிறப்பான சொல்லாகும்? ஆட்டுக்கும் நான்கு கால்கள், மாட்டுக்கும் நான்கு கால்கள். அவையும் நாற்காலிகள் தாமா? மூன்று கால்கள் உள்ள அல்லது தற்காலத்தில் போன்று ஆறு கால்கள் அல்லது நீண்டு படுப்பது போன்று இரண்டு கால்கள் உள்ள கதிரைகள் உள்ளனவே. அவற்றையும் ஒரு சிலர் கூறுவது போன்று காரணப் பெயர்(?) கூறி நாற்காலி என்றாற் சரியா?--பாஹிம் (பேச்சு) 02:47, 10 மே 2012 (UTC)[பதிலளி]

நாற்காலி என்ற சொல்லைக்குறித்து, எனது எண்ணங்கள் வருமாறு:-
  1. இக்கட்டுரை உயிரற்ற பொருளை விவரிப்பதால், நாற்காலி என்ற சொல், எனக்கு பொருத்தமாகவேப் படுகிறது. மேலும், நான் தமிழகத்தில் வசிப்பதால், இப்பெயர் குறித்து, வேறெங்கும் எவ்வித பொருள் மயக்கத்தையும் கேட்டறிந்ததில்லை. நாற்காலி என்ற சொல், பதவி என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.(எ.கா) நாற்காலி சண்டை, கட்சிக்குள் உட்புசலை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் கூறுவது போல, உட்காருவதற்கு 2,3,4,6 கால்கள் உடைய பொருள்களும் உள்ளன. நீண்டு படுப்பது போன்று கால்களே இல்லாத வசதியமைப்புகளும் உள்ளன. இவை தொடருந்துகளில் பயனாகிறது. கால்கள் இருந்தால், பயணிகள் தங்களை பொருட்களை இருக்கைகளுக்கு அடியில் வைத்து எடுப்பது சிரமமாக இருக்கும் என்பதால், கால்களே இல்லாத இருக்கையமைப்புகள் தொடருந்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
  2. உயிருள்ளவைகளைப் பொருத்தமட்டில், உயிரின வகைப்பாட்டியலில் இச்சொல், இரு வேறுபட்ட வகைகளில் (Quadrupeds ,Tetrapod) சில நூற்றாண்டுகளாகப் பயன்பட்டே வருகிறது. ஆடு,மாடு, மனிதன் அனைவரும் பாலூட்டிகளே. மனிதனைக் குறித்த புதிய கண்டுபிடிப்பில்(Üner Tan syndrome) இது மரபியல் நோயாகக் கருதப்படுகிறது.
  3. BigDog என்ற எந்திரனும் நாற்காலிகள் வகையாகக் குறிப்பிடப்படுகிறது.வணக்கம். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாற்காலி&oldid=1105158" இலிருந்து மீள்விக்கப்பட்டது