அலங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலங்காரம் அப்பியாசகானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் மிக மேலான இடத்தைப் பெற்றுள்ளது. இது ஸ்வரஸ்தான உறுதிப்பாட்டையும், லயஞான பலத்தையும் உண்டு பண்ணுவதுடன் ஸ்வரப்பிரத்தார முறைக்கும் வழி வகுக்கும். இவ்வுருப்படி ஸ்வரங்களினால் அலங்கரிக்கப்பட்டமையால் அலங்காரம் எனப்பட்டது.


ஆரம்ப அப்பியாசகான உருப்படிகளாகிய ஸ்வர வரிசைகள், இரட்டை வரிசைகள், மேல்ஸ்தாயி வரிசைகளை அடுத்து இப்பாடம் அமைந்துள்ளது. இவ் அலங்காரங்களை மூன்று காலங்களிலும், ஸரிக- ரிகம- கமப போன்ற அடுக்கு வரிசைகளாக சதுஸ்ர நடையில் நன்கு பாடவும், வாத்தியங்களில் வாசிக்கவும் பயின்ற பின்னரே வர்ணம், கீர்த்தனை போன்ற பாடங்களைப் பயில வேண்டும்.


அலங்காரம் 7 வகையாக அமைகின்றது.

  1. சதுஸ்ரஜாதி ஏக தாளம்
  2. சதுஸ்ரஜாதி ரூபக தாளம்
  3. திஸ்ரஜாதி திரிபுடை தாளம்
  4. மிஸ்ரஜாதி ஜம்பை தாளம்
  5. சதுஸ்ரஜாதி மட்டிய தாளம்
  6. கண்டஜாதி அட தாளம்
  7. சதுஸ்ரஜாதி துருவ தாளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காரம்&oldid=2986101" இலிருந்து மீள்விக்கப்பட்டது