நிதிக்கூற்றுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதிக்கூற்றுக்கள் (Financial statements) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் நிதியியல் நடவடிக்கைகளின் தன்மை,விளைவுகளை எடுத்தியம்புகின்ற ஒர் முறைசார் பதிவுகளை உள்ளடக்கிய அறிக்கையாகும்.இக் கூற்றுக்கள் நிறுவனத்தின் நிதிநிலமையின் தன்மை பற்றிய முக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக காணப்படும்.இந் நிதிக்கூற்றுக்கள் 4 வகைப்படும் அவையாவன:

  1. ஐந்தொகை (Balance sheet) : நிதிக்கூற்று சமர்பிக்கப்பட்ட திகதியில் வணிக நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், உரிமையாளர் பங்கு என்பன பற்றிய தகவலினை தரும்.
  2. வருமானக் கூற்று (Income statement) : அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் வணிக செயற்பாட்டின் மூலம் அடைந்த பெறுபேற்றினை பற்றிய தகவலினைத் தரும்.இலாப நட்டக் கணக்கு (Profit or loss statement) என்றும் இது குறிப்பிடப்படும்.
  3. காசுப்பாய்ச்சல் கூற்று (Statement of cash flows) :அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் நிறுவன் மூதலீட்டு,நிதியியல்,வர்த்தக நடவடிக்கையின்போது இடப்பெற்ற காசின் உள்,வெளிபாய்ச்சல் பற்றிய தகவலினைத் தரும்.
  4. உரிமையாண்மை மாற்றக்கூற்று (Statement of Changes in Equity) : அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் நிறுவனத்தின் மூலதனத்தில் ஏற்படும் மாற்றத்தினைப் பற்றிய தகவலினைத் தரும்.

வணிகத்தின் தன்மை,நாடுகள்,கண்க்கீட்டுக் கொள்ளைகள்,சட்ட தேவைகள் என்பனவற்றிக் அமைவாக நிதிக்கூற்றுக்களின் வடிவங்கள் மாறுபடலாம்.

நிதிக்கூற்றின் முக்கிய குறிக்கோள்[தொகு]

வணிகத்தில் அக்கறையுடையோர் நிறுவனம் தொடர்பில் ஒர் தீர்மானத்தினை மேற்கொள்ள உதவுகின்ற வகையில் நிதியியல் உறுதித்தன்மை, செயற்பாடுகளின் விளைவுகள்,இலாபமீட்டும் தன்மை போன்ற தகவலினை வெளிப்படுத்தத்தக்கதாக இருப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். (The objective of financial statements is to provide information about the financial strength, performance and changes in financial position of an enterprise that is useful to a wide range of users in making economic decisions.)

இவ் நிதிக்கூற்றுக்கள் புரிந்து கொள்ளதக்கவகையிலும், பொருத்தப்பாடுள்ளதாகவும், ஒப்பிடக்கூடியதாகவும், உண்மையாகவும் நேரடியாக நிறுவன சொத்துகள் பொறுப்புகள் தொடர்பில் தகவலினை தரகூடியதாக அமைதல் வேண்டும்.

நிதிகூற்றுகளை உபயோகிப்போர்[தொகு]

உள்வாரி பயனாளர்கள் (Internal Users) :

  1. உரிமையாளர்கள்.(owners)
  2. முகாமையாளர்கள்
  3. ஊழியர்கள்

வெளிவாரி பயனாளர்கள் (External Users):

  1. முதலீட்டாளர்கள்
  2. கடன் வழங்குவோர்
  3. வங்கிகள்
  4. போட்டி நிறுவனங்கள்
  5. அரசாங்கம் (வரிக்காக)
  6. நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிக்கூற்றுக்கள்&oldid=1644844" இலிருந்து மீள்விக்கப்பட்டது