பேச்சு:மட்டக்களப்பு வாவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாவி என்றால் என்ன? அகராதிகளில் தடாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கட்டுரையில் இப்பொருள் பொருந்துவதாகத் தெரியவில்லை--சிவக்குமார் \பேச்சு 07:02, 25 ஏப்ரல் 2012 (UTC)

lagoon என்பதை இலங்கையில் வாவி என்கிறார்கள் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:43, 25 ஏப்ரல் 2012 (UTC)
களப்பு என்று இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. --சிவக்குமார் \பேச்சு 08:40, 25 ஏப்ரல் 2012 (UTC)

வாவி என்பது இலங்கையில் குளம் என்பதையே குறிக்கும். Lagoon என்பது களப்பு எனப்படும். ஆனால், மட்டக்களப்பு என்பதில் களப்பு எனும் சொல் சேர்ந்து வருவதால் மட்டக்களப்புக் களப்பு என்பதில்லை. மட்டக்களப்பு என்றே சொல்வதுண்டு. ஆகவே, தலைப்பை மட்டக்களப்பு (களப்பு) என்று நகர்த்தலாம் என்று நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 10:11, 25 ஏப்ரல் 2012 (UTC)

மதனாஹரன் சொல்வது சரி.Lagoon என்பது களப்பு எனப்படும். வாவி என்பது இயற்கையாய் அமைந்த நீர்த் தடாகம். குளம் மனிதன் அமைத்த நீர்த்தடாகம். இவற்றை செயற்கை நீர்நிலை எனவும் கூறலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:52, 25 ஏப்ரல் 2012 (UTC)

வாவி[தொகு]

அதனை வாவி என்றுதான் மட்டக்களப்பு மான்மியம் கூறிப்பிடுகின்றது. [பார்க்க]. பேச்சு வழக்கில் மட்டக்களப்பு ஆறு/ஏரி என்று குறிப்பிடப்படுவதுண்டு. தடாகம், குளம் என்ற சொற்கள் "pond" என்ற வகையைச் சேர்ந்தது என்று நினைக்கிறேன். கடற் காயல் என்பது வாவி கடலோடு கடக்கும் இடமாக இருக்க வேண்டும். வாவியின் ஒரு பகுதியான கடலோடு கடக்கும் பகுதி கடற் காயலாக இருக்கலாமோ? --Anton (பேச்சு) 10:53, 25 ஏப்ரல் 2012 (UTC)

ஆம் அன்ரன் இது ஆய்வுக்குரிய கூறு. மட்டக்களப்பு வாவி உவர்நீர்க் களப்பைத் தாண்டி தெற்கே கிட்டங்கி, பட்டிப்பளை ஆறு வரைச் செல்கிறது. அதன் நீட்சி வடக்குத் திசையிலும் உள்ளது. மேற்சொன்ன முடிவுகளில் இது உவர்நீராக இல்லை. இந்த நீண்ட வாவியைத்தான் "மீன்மகள் பாடிகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான பூமி அம்மா" எனப் பாடினர். அகன்ற மட்டக்களப்புத் தமிழகம் எனபது பொத்துவில்லிலிருந்து திருகோணமலைக் கல்லாறு வரையான நீண்ட பிரதேசம். ஆதலால் இது ஆய்வுக்குரிய ஒன்று என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 11:04, 25 ஏப்ரல் 2012 (UTC)

சஞ்சிவி சிவகுமாரின் விளக்கம் நன்று. நன்னீராக இருப்பதால் வாவியென்றும் கருதவுமிடமுண்டு. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கூடத் தவறிருக்கலாம். ஆகவே, இதனைப் பற்றி ஆராய்ந்தே முடிவெடுப்பது நன்று. --மதனாகரன் (பேச்சு) 11:08, 25 ஏப்ரல் 2012 (UTC)

மட்டக்களப்பு வாவி என்றே இது அறியப்படுகிறது. எனவே தலைப்பை மாற்றத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். வாவி, களப்பு இரண்டும் ஒன்றையே குறிப்பிடுகிறதா என்பதை ஈழத்தில் உள்ள வரலாற்றாளர்கள் அல்லது அறிஞர்களிடம் இருந்து அறிவது நல்லது. சஞ்சீவி சிவகுமார் இதனை ஆராய்ந்து கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --Kanags \உரையாடுக 11:11, 25 ஏப்ரல் 2012 (UTC)

மட்டக்களப்புத் தமிழகம் இது பற்றி (மட்டக்களப்பு வாவி) மேலும் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றது. --Anton (பேச்சு) 11:22, 25 ஏப்ரல் 2012 (UTC)

வாவி என்பது குளத்தையே குறிப்பிடுகின்றது (எ-டு: அபயவாவி, தீசவாவி). --மதனாகரன் (பேச்சு) 11:39, 25 ஏப்ரல் 2012 (UTC)

அபயவாவி, தீசவாவி என்பன மனிதரால் கட்டப்பட்ட குளங்கள். அவை வாவி என்று மொழிமாற்றப்பட்டிருப்பதற்கான வாவி என்பது குளம் எனும் முடிவுக்கு வரவேண்டியதில்லையே? 'Tissa Wewa', 'Abhaya Weva' என்பதிலுள்ள 'wewa' (වැව ) எனும் சிங்கள பதம் ஏரியை அல்லது குளத்தைக் குறிக்கப்பயன்படும். [பார்க்க] --Anton (பேச்சு) 12:14, 25 ஏப்ரல் 2012 (UTC)

அவ்வாறிருக்கவும் வாய்ப்புண்டு. --மதனாகரன் (பேச்சு) 12:35, 25 ஏப்ரல் 2012 (UTC)

சூளாமணியில் வரும் பகுதி:

சாவ நலிந்திடுந் தண்ணீர்ப் பிணிபெரி(து)
ஆவென் றலறு மவரையரு நஞ்சின்
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு
நாவு மழுக நரல்வ ரொருசார்.

தண்ணீர்ப்பிணி பெரிது - நீர் வேட்கையாலாய துன்பம் மிக்கது, ஆ - ஐயகோ, சாவ நலிந்திடும் என்று - எம்மை உயிர்போம்படி துன்புறுத்துகின்றதே என்று, அலறும் அவரை - அலறி அழுகின்ற அந்நரகரை, அருநஞ்சின் வாவிகள் காட்டலின் - மாற்றுதற்கு அரிதாகிய கொடிய நச்சுத்தன்மையுடைய குளங்களைக் காட்டுதலாலே, மண்டி - அந் நஞ்சுடைய குளங்களில் விரைந்து சென்று, மடுத்து உண்டு - ஆர்வத்தோடு அந்நீரை வாய்மடுத்துப் பருகி, நாவும் அழுக - தம் நாவுகளும் அழுகிவிட, ஒருசார் நரல்வ - ஒரு பக்கத்தே அழா நிற்பர். --Kanags \உரையாடுக 12:40, 25 ஏப்ரல் 2012 (UTC)