சங்ககிரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககிரி வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சங்ககிரி நகரத்தில் உள்ளது. சங்ககிரி வருவாய் வட்டம் 52 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2] சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 241,783 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 125,250 ஆண்களும், 116,533 பெண்களும் உள்ளனர்.66,453 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 54.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 67.75% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 930 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22203 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 879 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 35,000 மற்றும் 1,049 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 98.02%, இசுலாமியர்கள் 0.82% , கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
  2. சங்ககிரி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. சங்ககிரி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககிரி_வட்டம்&oldid=3552580" இலிருந்து மீள்விக்கப்பட்டது