பேச்சு:2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓடுதல், விரைவோட்டம் என்ன வேறுபாடு? ஓடுதலில் 100மீ பற்றி குறிப்பிட்டுள்ளேன், 200மீ எதை குறிக்கும்? ஓடுதல் (200மீ) , விரைவோட்டம் (200மீ) ?? 800மீ? --குறும்பன் (பேச்சு) 01:48, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

100,200,400 மீ தொலைவு வரை விரைவோட்டம் (Sprint) என்றும் 800,1500,3000 மீ தொலைவு ஓட்டப்பந்தயங்கள் இடைத்தொலைவு ஓட்டம் (middle distance racing) எனவும் 5000 மீ, 10,000 மீ ஆகியன தொலைதூர ஓட்டம் (long distance racing) எனவும் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துமே ஓடுதல் பகுப்பில் வரும். தமிழ் விக்கிப்பீடியாவில் இடைத்தொலைவு மற்றும் தொலைதூர ஓட்டங்களுக்கான கட்டுரைகள் ஆக்கப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 04:00, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, குறும்பன்! கட்டுரையின் வடிவத்தில் சில மாற்றங்களை செய்துள்ளேன்; சரிபார்க்கவும். மேலும் தெளிவடைய... 'Track and field' எனும் ஆங்கிலக் கட்டுரையின் பிற்பகுதியில் 'Events in the sport of athletics' எனும் சிறுபகுதியில் உள்ள பட்டியலைப் பார்க்கவும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

மணியன் தொலைதூர ஓட்டம் என்பது மாரத்தானை குறிக்காதா? --குறும்பன் (பேச்சு) 19:33, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

குறும்பன்... ‘மாரத்தான் ஓட்டம்’ என்பதனை தொலைதூர சாலை ஓட்டம் என கட்டுரையில் மாற்றம் செய்துள்ளேன். இது ஓரளவு பொருந்தும் என நம்புகிறேன். தொலைதூர ஓட்டம் என்பதன் கீழ் 5000 மீட்டர், 10000 ஆகியன வரும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:40, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]