பெ. நா. அப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. நா. அப்புசாமி (திசம்பர் 31,1891-மே 16,1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ் , ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்

படைப்புகள்[தொகு]

பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பேனா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார். இவர் 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[1]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

அறிவியல் நூல்கள் மட்டும் அல்லாது, பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.


1. சுதந்திரத் தியாகிகள் (ஹென்றி ஸ்டீல் காம்மெஜர்) (1965-ஜோதி நிலையம்)

இசைத் துறை[தொகு]

இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்

வெளியிணைப்புகள்/ உசாத்துணைகள்[தொகு]

பொதுத் தமிழ் மேல்நிலை- முதலாம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் -2018

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._நா._அப்புசாமி&oldid=3384024" இலிருந்து மீள்விக்கப்பட்டது