தூதன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூதன் இலங்கையில் கொழும்பு நகரத்திலிருந்து மாதாந்தம் வெளிவந்த ஒரு இதழாகக் காணப்படுகின்றது.

ஆசிரியர்[தொகு]

  • உ. அப்துல் மஜீத்.

வெளியீடு[தொகு]

  • இலங்கை அகமதியா இயக்கம்.

அகமதியா இயக்கத்தின் பிரசார இதழாக இது காணப்பட்டது. 1917ல் இலங்கையில் அகமதியா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அகமதியா இயக்கத்துக்கு நிதி திரட்டும் முகமாக 'தூதன்' எனும் தமிழ் இதழும், 'மெசேஜ்' எனும் ஆங்கில இதழும் ஆரம்பிக்கப்பட்டதுடன், சொந்த அச்சகம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் அச்சகமொன்றில் பணியாற்றியவரே தூதன் ஆசிரியர் மஜீத். அகமதியா இயக்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு இயக்கத்தின் இதழ் என்ற வகையில் இயக்கத்தின் கொள்கைப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அகமதியா இயக்கம் பஞ்சாப்பிலுள்ள 'காதியான்' என்ற சிற்றூரில் பிறந்த மீர்சா குலாம் அகமது என்பவரால் 1889ல் தொடங்கப்பட்டுள்ளது. அகமதியா இயக்கம் அவரது பெயரையே கொண்டிருந்தது. அவர் பிறந்த ஊரின் பெயரால் 'காதியானி இயக்கம்' என்றும் கூறப்படுகின்றது. 1947ல் இந்திய விடுதலையின் பின் இப்பகுதி பாக்கித்தானுக்கு மாறியது. 1974ல் பாக்கித்தான் நாடாளுமன்றம் அகமதியர் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என அறிவித்தது. 1984ல் அகமதியா இயக்கத்துக்கெதிராக பாக்கித்தானில் சட்டம் இயற்றப்பட்டது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூதன்_(சிற்றிதழ்)&oldid=1292172" இலிருந்து மீள்விக்கப்பட்டது