பேச்சு:பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரா. வி.கே., நீங்கள் கொற்கோள் என்பது Lemma என்பதைத்தானே? அதனை மெய்க்கோள் அல்லது துணைமெய்க்கோள் கூறலாமா? கொற்கோள் என்பது (உண்மையென்று) கொள்ளும் கோள் என்று நீங்கள் ஆக்கியிருப்பது போல் தெரிகின்றது. கொள்ளப்படுவது கோள், ஆனால் அடியாகக் கொள்ளுவதை அடிக்கோள் எனலாம். மேற்கோள் என்பதும் அடிபப்டையாக மேற்கொள்வது மேற்கோள். கொற்கோள் என்பதை விட வேறு ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றுகின்றது. இச்சொல்லை நீங்கள் தேர்ந்து எடுத்ததற்கு வேறு கரணியங்கள் இருந்தால் விளக்கித் தெளிவிக்க வேண்டுகிறேன். முதல் வரியை சற்றே மாற்றி அமைக்க இருக்கின்றேன்.--செல்வா 15:49, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா, முதல் சில வரிகளை மாற்றியமைத்தமைக்கு நன்றி. நான் 'கொற்கோள்' என்ற சொல்லை இணையப் பல்கலைக் கழகக் கலைச் சொற்களிலிருந்து எடுத்தேன்.--Profvk 16:23, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
மறுமொழிக்கு நன்றி. பர்ன்ஸைட் என்னும் பெயரை பர்ன்சைடு என்றும், ஃப்ரொபீனியஸ் என்பதை ஃபிரொபீனியசு என்று மாற்றலாமா? கடைசி சு என்பதை ஸ் என்றும் கொள்ளலாம். அதாவது அதிகம் கிரந்த எழுத்துக்கள் வந்தால் படிக்க மிரட்சியாய் பலரும் உணருகின்றனர். சிறு திரிபுகள் இருந்தாலும் பரவாயில்லை. அவை மொழிக்கு மொழி ஏற்படுவதுதான். அடைப்புக் குறிகளுக்குள் ரோமன் எழுத்தில் எழுதிக்காட்டலாம். என்னுடைய முறையில் இதனை ˚பர்ன்சை˚ட் என்றும் ˚வ்ரொபீனிய˘ச் என்றும் குறிப்பேன். முதல் பகரம் மெலிந்து இருப்பதை ˚ப என்றும், கடைசி ட் வல்லின T அல்ல, மெலிந்த D என்றும் குறிக்க ˚ட் என்றும் குறிப்பேன்(தமிழில் டு என்று குற்றியலுகரமாக குறிப்பது D என்னும் ஒலியை சற்றேறக்குறைய தரும், ஆனால் சற்று உகரம் இருக்கும்). இதே போல Fகரத்திற்கு ˚வ என்று வகரத் திரிபாகக் குறிப்பேன்.--செல்வா 20:40, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
மாற்றலாம். பர்ன்சைடு என்றும் ஃபிரொபீனியஸ் என்றும் மாற்றிவிடலாம். ஆமாம், ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ், சாக்ரட்டீஸ் என்ற பெயர்கள் எப்படி எழுதப்படுகின்றன?
நீங்கள் எழுதியவாறே எழுதலாம்! அப்படித்தான் மிகப்பலரும் எழுதிகின்றனர். தமிழில் G,J,D,Dh,B ஆகிய ஐந்து ஒலிகளும் இருந்தாலும், அவை தமிழ் முறைப்படி சில இடங்களில்தான் வரும், சில இடங்களில் வர இயலாது. F, Sh (ஷ்), S (ஸ்) முதலான ஒலிகளும் கிடையாது. வடமொழியில் உஷா என்னும் சொல்லில் வரும் வலிந்த ஷகரமும (ष) கிடையாது. தமிழில் எழுத்துக்களைப் பெருக்குவதற்கு மாறாக, பல உலக மொழிகளில் இருப்பதைப் போல ஒலித்திரிபு காட்டும் குறிகளை இடுவதை நான் முன் மொழிந்துள்ளேன் (இது இங்கு த.வியில் ஆள்வதில்லை). ஸ்பானிஷ் மொழியை அவர்கள் español (எஸ்பொன்யால்) என்று அழைக்கிறார்கள், அதில் உள்ள n க்கு மேல் இருக்கும் ஒலித்திரிபுக் குறியைப் பாருங்கள்--> ñ. அது போல G,J,D,Dh,B ஆகிய ஒலிப்புகளை, தமிழ் மரபில் இருந்து மாறி வரும் இடங்களில் மட்டும் முறையே 'க, 'ச, 'ட, 'த, 'ப என்று குறிக்கலாம். மேற்கோள் குறியுடன் முரணும் எனில், முன் புள்ளி இட்டு ˚க, ˚ச, ˚ட,˚த, ˚ப, என்றும் Fகரத்தை ˚வ என்றும் எழுதலாம். ஜூலியஸ் சீசர் என்பதை ˚சூலியசு சீசர் என்றோ ˚சூலிய˘ச் சீசர் என்றோ எழுதலாம். ஆக்டேவியஸ் என்பதை ஆக்டேவியசு அல்லது ஆக்டேவிய˘ச் என்றும், சாக்ரட்டீஸ் என்பதை சாக்ரட்டீசு என்றோ சாக்ரட்டீ˘ச் என்றோ எழுதலாம். அதாவது கூடுதல் எழுத்துக்கள் இல்லாமல் 2-3 சிறு ஒலித்திரிபுக் குறியீடுகள் மட்டுமே கொண்டு 10க்கும் அதிகமான எழுத்தொலிகளையும், நூற்றுக்கும் அதிகமான உயிர்மெய் எழுத்துக்களையும் குறிக்கலாம். அதாவது மொழி முதலில் வரும் B, G முதலியவற்றைக் குறிக்க வேண்டிய தேவை (இன்றைய சூழலில்) இருப்பதால், புதிய எழுத்துக்களையும் அதற்கான உயிர்மெய் எழுத்துக்களையும் புகுத்தாமல் ஒரு எளிய முறை இருந்தால் நன்றாக இருக்குமே என்னும் நோக்கில் முன்மொழிந்துள்ளேன். தமிழாசிரியர்கள் சகன்னாதன், இராமானுசன் என்பதை நான் 'சகன்னாதன், ராமானு'சன் என்றோ ˚சகன்னாதன் ராமானு˚சன் என்றோ எழுதலாம் என்று நினைக்கிறேன் (என் தனிப்பட்ட குறிப்புகளில் நான் இப்படித்தான் எழுதி வருகிறேன்). என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவை நீங்கள் பார்க்கலாம்: http://tamilveli.blogspot.com/ --செல்வா 23:05, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]