சிக்கல் சிற்றூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிக்கல் சிற்றூர் அல்லது சிக்கல் கிராமம் (problem village) என்பது இந்திய நடுவணரசால் நான்காம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற சிற்றூர்களை அடையாளப்படுத்திட உருவாக்கப்பட்ட ஒரு வரையறை ஆகும்.

வரையறை[தொகு]

  • பாதுகாப்பான குடிநீர் மூலம் எதுவும் இல்லாத இடம் (அல்லது)
  • பாதுகாப்பான குடிநீர் மூலம் 1.6 கிலோமீட்டர் தூரத்தில் தான் கிடைக்கிறது (அல்லது)
  • பாதுகாப்பான குடிநீர் 15 மீட்டர் ஆழத்திற்கும் கீழ் தான் கிடைக்கிறது (அல்லது)
  • குடிநீர் அதிக உவர்ப்புத்தன்மை, அதிக இரும்பு, ஃபுளூரின், அல்லது இதர நச்சுப்பொருட்கள் கொண்டு இருத்தல் (அல்லது)
  • குடிநீரில் நோய்க்கிருமிகள் கலந்திருத்தல்

போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ கொண்ட சிற்றூர் சிக்கல் சிற்றூர் ஆகும்.

ஒன்றிய அரசின் நூறு விழுக்காட்டு உதவி[தொகு]

சிக்கல் சிற்றூர்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்து தர ஒன்றிய அரசு துரிதப்படுத்தப்பட்ட ஊர்ப்புறக் குடிநீர் விநியோகத் திட்டம் (1972-1973) (Accelerated Rural Water Supply Programme) மூலம் மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பிரதேசப் பகுதிகளுக்கு நூறு விழுக்காட்டு மானியம் வழங்கியது. இத்திட்டம் 1974 வரை தொடர்ந்தது. 1977 -1978 இல் மறுபடியும் செயல்படுத்தப்பட்டது.

வெளியிணைப்பு[தொகு]

  1. குடிநீர்த் திட்டங்களின் பிண்ணணியை விளக்கும் கோப்பு பரணிடப்பட்டது 2011-11-27 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கல்_சிற்றூர்&oldid=3243949" இலிருந்து மீள்விக்கப்பட்டது