பேச்சு:கொட்டாவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொட்டாவி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கொட்டாவி பற்றி இவ்வளவு விளக்கமாக வேறு யாரும் எழுதி இருபார்களா? ...அஃப்...--Natkeeran 14:16, 12 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

:-) -- சுந்தர் \பேச்சு 06:43, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இதைப் பார்த்தால் பொறாமை வருகிறதே. -- சுந்தர் \பேச்சு 07:12, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
தமிழில் இவ்வளவு அழகாக, நீளமாக கொட்டாவி விட்டது நீங்கள் தான் சுந்தர் :) --செல்வா 15:17, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
:))--சிவக்குமார் \பேச்சு 16:12, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
:) -- சுந்தர் \பேச்சு 04:37, 17 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

குமர்[தொகு]

உமாபதி, குமர் என்பதன் பொருள் என்ன?--சிவக்குமார் \பேச்சு 19:00, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

குமர் - குமர்ப் பெண் (கன்னிப் பெண்) virgin??--உமாபதி \பேச்சு 19:07, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
ஓ, நன்று உமாபதி. தமிழகத்தில் குமரிப் பெண் என்பர்--சிவக்குமார் \பேச்சு 19:16, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
தமிழில் பேச்சு வழக்கில் கொமரன், கொமரி என்பர். குமரன், குமரி என்பதன் பேச்சு வடிவங்கள் அவை. கன்னி என்பதன் பொருள் திரு்மணம் ஆகாத இளம் பெண் என்னும் பொருளைப் பலரும் பரவலாக அறிந்திருந்தாலும், கன்னி என்பதன் பொருள் அழியாமை என்பதாகும். ஆங்கிலத்திலும் virgin forest என்று சொல்லும் பொழுது வரும் பொருள் (அழித்து கெடுக்கப்படாத, புதுமை மாறாத என்னும் பொருள்) தமிழுக்கும் உண்டு. அழியா, முதல், என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்னும் பொருள்கள் உண்டு. கன்னிப் போர் என்றால் முதன் முதல் பங்கு கொள்ளும் போர். கன்னி முயற்சி என்றால், முதல் செய்யும் முயற்சி. கன்னியப்பன் என்றால் அழியா முதலப்பன் (கடவுளின் பெயர்களுள் ஒன்று). கன்னியம்மாள் என்றாலும் அதே பொருள்தான் ஆனால் பெண் வடிவாக இருப்பது. --செல்வா 19:36, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

குரட்டைப்பழமொழி[தொகு]

"கொட்டாவி, நெட்டி, குரட்டை, பெருமூச்சு ,கெட்டாருக்குள்ள செயல்" என்றொரு பழமொழியும் வழக்கில் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 07:14, 8 ஜூலை 2010 (UTC)

கட்டுரைப் பக்கத்தில் ஆங்கிலத்தமிழில் எழுதப்பட்டது[தொகு]

Tamizhil neengal thiruthikkollavum Oruvar Than udal sorvin kaaranamaga Kottavi Vidum bozhuthu Thannai sutriulla athigapadiyan Oxygen kaatrai ullizhukirar meendum athai veli vidum bozhuthu corbon di oxydaga veli etrugiraar ippadi oru seyal nadakkum bozhuthu antha nabarai sutri iruppavargalaukku oxygen patraa kurai erpadugirathu athanaal avargalum athe seyalai seikindranar

மேற்கொண்ட வாசகம் 59.97.96.118 என்பவரால் கட்டுரைப்பக்கத்தில் எழுதப்பட்டது, விக்கிபீடியா நடைமுறைகளுக்கு ஒவ்வாததால் நீக்கி உள்ளேன்.--சி. செந்தி 12:11, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

தகவல் சட்டக வார்ப்புரு அறுபட்டுள்ளது. இணைத்து உதவுக!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:08, 12 மே 2018 (UTC)

Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 08:36, 15 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொட்டாவி&oldid=2524228" இலிருந்து மீள்விக்கப்பட்டது