பயனர் பேச்சு:Srkris

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Archive
Archives


வாருங்கள், Srkris!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 04:06, 24 மே 2008 (UTC)[பதிலளி]

விகுதிகளுடன் வழிமாற்றுகள்[தொகு]

தமிழ் விக்கியில் சொற்களின் அனைத்து விகுதி உருவங்களுக்கு வழிமாற்றுகள் உருவாக்குவதில்லை (தமிழக, வேதாந்த போன்றவை). எனவே [[தமிழகம்|தமிழக]] முறையை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 07:10, 11 மே 2011 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

உங்கள் கவனத்திற்கு[தொகு]

கட்டுரைகளின் தலைப்புகளை உங்கள் விரும்பம்போல நகர்த்தக்கூடாது. ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டுமானால் அதுகுறித்து கட்டுரையின் பேச்சுப்பகத்தில் குறிப்பிடுவதும், அதற்கான வார்ப்புருவை கட்டுரையில் இடுவதுமே முறையாகும்.--கு. அருளரசன் (பேச்சு) 15:10, 4 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

November 2022[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். ஶா போன்ற தமிழல்லாத எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டாம் Kanags \உரையாடுக 21:46, 4 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஆக்கநோக்கில் அமையவில்லை என்று எப்படி நிர்ணயித்தீர்கள்?
"ஶா போன்ற தமிழல்லாத எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டாம்" - அப்படியென்றால் என்ன? ஶ என்பது தமிழ் யூனிகோடில் உள்ள எழுத்து தான். 'ஶ' வேறு எழுத்து 'ஸ' வேறு எழுத்து ச வேறு எழுத்து ஷ வேறு எழுத்து. இவையெல்லாம் பொதுவாக தமிழில் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் தான்.
ஶ் ஷ் ஸ் ஹ் ஜ் போன்றவை தமிழில் உள்ள எழுத்துக்கள் தானே? ஶ்+ரீ = ஸ்ரீ . ஆனால் இவைதனித்தமிழ் எழுத்துக்கள் அல்ல. பிறமொழி சொற்களை தமிழில் எழுத உபயோகப்படும் எழுத்துக்கள் அவை. விக்கிபீடியாவிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளின் பெயர்களில் இதுபோன்று உள்ள எழுத்துக்களை காணலாம். உதாரணமாக ஹஜ் , ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி , ஸ்ரீகாளஹஸ்தி , ஶ்ரீ சின்மயி , ஸ்டீவன் ஹாக்கிங், ஜெயமோகன் , ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) , ஜிகாத் , ஜார்ஜ் பெர்னாட் ஷா , ஜாகுவார் , ஷ்வாஸ், ஷில்பா ஷெட்டி , ஸ்டாலின் (2006 திரைப்படம்), ஸ்கோடா ஆட்டோ , ஸ்கோலியோசிஸ், ஸ்டீவ் வா, ஹதீஸ், ஹோலி, ஹெலன் கெல்லர் இப்படி முடிவில்லாமல் உதாரணங்கள் காட்டமுடியும். ஆகவே உங்கள் நோக்கம் தான் என்ன? நான் திருத்திய பெயர்களில் உண்மையாகவே தவறுகள் இருந்தன, அவற்றை நான் எழுதியபோல் எழுதுவதே சரி, அவை தமிழ் பெயர்கள் அல்லவே. உங்கள் நடவடிக்கை ஆக்கப்பூர்வமாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? Srkris (பேச்சு) 22:39, 11 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
ஶ போன்ற எழுத்துகள் பரவலான பயன்பாட்டில் உள்ளதா? எடுத்துக்காட்டு தாருங்கள். யூனிக்கோடில் இருந்தாலும் அதனைக் கட்டுரைகளில் பயன்படுத்த என்றும் அனுமதிக்கப்பட மாட்டாது. தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தினால் உங்களைத் தடை செய்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை. சி, ஸி ஆகிய ஒலிப்புகளில் வேறுபாடுகள் உள்ளனவா? இருந்தால் அந்த வேறுபாட்டை ஒலிக்கோப்பாக உருவாக்கி இங்கு தரவேற்றுங்கள். அறிய ஆவல்.--Kanags \உரையாடுக 22:55, 11 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
பரவலான உபயோகம் இல்லாமல் எப்படி தமிழ் யூனிகோடில் வரும்? யூனிகோட் என்பது ஒருவர் உருவாக்குவது அல்ல அது சர்வதேச அளவில் பயன்பாடுகளை கருதி உருவாக்கப்படுவது. இதோ https://unicode.org/charts/PDF/U0B80.pdf
தமிழ் எழுத்தாக தமிழர்களால் பலநூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் எழுத்துக்களை தான் யூனிகோடில் தமிழ் எழுத்துமுறையாக சேர்க்கமுடியும். இதையெல்லாம் நான் நிரூபிக்க தேவையே இல்லை. தமிழ் எழுத்துருவில் இருக்கும் எழுத்துக்களை மட்டுமே உபயோகப்படுத்தினேன்.
நான் மேலே உதாரணங்களாக பல தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை கொடுத்துள்ளேன், மேலும் ஆயிரக்கணக்கான தமிழ் விக்கி கட்டுரைகளே இவ்வெழுத்துக்களுடன் இருக்கின்றன.
"யூனிக்கோடில் இருந்தாலும் அதனைக் கட்டுரைகளில் பயன்படுத்த என்றும் அனுமதிக்கப்பட மாட்டாது." என்கிறீர்கள்.
தமிழ் எழுத்துக்களை கொண்டு நான் எழுதக்கூடாது (தனித்தமிழ் எழுத்தை மட்டுமே எழுதலாம்) என்று எனக்கு உத்தரவு போட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
சி ஸி என்பதற்கு வேறுபாடு உள்ளதே உங்களுக்கு தெரியாதா? யாராவது ஒரே ஒலிக்கு இரு எழுத்துக்கள் வைப்பார்களா? அதை நான் உங்களுக்கு புரியவைத்தால் மட்டுமே நீங்க என் உரிமையை எனக்கே அன்பளிப்பாக கொடுக்கப்போகிறீர்களா? நல்ல நியாயம். Srkris (பேச்சு) 23:53, 11 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srkris&oldid=3602601" இலிருந்து மீள்விக்கப்பட்டது