கு. கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கு. கிருஷ்ணன் (பிறப்பு மார்ச்சு 19 1936) மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் குகிணன் என்ற புனைப் பெயரால் நன்கு அறிமுகமானவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1951 தொடக்கம் எழுதிவரும் இவர் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என இலக்கியத்தின் பல வடிவங்களிலும் பங்களிப்பினை நல்கியுள்ளார். மேலும், பல மலேசியா இதழ்களில் நிருபராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. அத்துடன், மலேசிய கோலாலம்பூர் தமிழலக்கிய மன்றத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவராகவும் இவர் திகழ்கின்றார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._கிருஷ்ணன்&oldid=3699202" இலிருந்து மீள்விக்கப்பட்டது