ஏறைக்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏறை என்பவர் பச்சை மலை மலைப்பகுதியில் உள்ள மலைகளை ஆட்சி செய்த எயின கூட்டத்தின் தலைவன்.

ஏறைக்கோன்: குறமகள் இளவெயினி என்னும் பெண்பாற்புலவர் ஏறைக்கோன் வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இந்தப் பாடலில் உள்ள மன்னரை இவர் பேணியிருக்கலாம்.

'பெருங்கல் நாடன்' என இவர் சிறப்பிக்கப்பட்டுள்ள ஏறைக்கோன்,

இவரது நான்கு பண்புகள் பாடலில் காணப்படுகின்றன,

  1. இவரைச் சேர்ந்தவர்கள் இவருக்குத் தீங்கிழைத்தால் அதனை இவர் பொறுத்துக்கொள்வாராம்,
  2. பிறர் தவறு செய்தால் அதற்காகத் தான் நாணுவாராம்,
  3. தான் போரிடும் படைக்குப் பழி வாராமல் போரிடும் வல்லமை பெற்றவராம்,
  4. வேந்தன் அவையில் பீடுடன் வீரநடை போடுவாராம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 157
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறைக்கோன்&oldid=3876197" இலிருந்து மீள்விக்கப்பட்டது