இடர் மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடர் மேலாண்மையின் எடுத்துக்காட்டு: சர்வதேச விண்வெளி நிலையத்தின் அதிக ஆபத்துத் தாக்கத்திற்குட்படும் பகுதிகள் குறித்த NASAவின் விளக்கங்கள்.

இடர் மேலாண்மை அல்லதுஇடர் முகாமைத்துவம் (Risk Management) என்பது, ஒரு நிறுவனம் திறம்பட செயலாற்றுவதற்கு இன்றியமையானதாகும். இடர் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வால் சாதகமான பயன் அல்லது பாதகமான பயனோ ஏற்படலாம். அந்த பயன் நிர்வாகத்திற்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நிர்வாகி ஆராய வேண்டும். இடர் என்பது, நிச்சயமற்ற தன்மையின் குறிக்கோள்களின் மீதான விளைவு (நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம்) என ISO 31000 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே 'இடர் மேலாண்மை' என்பதை இடர்களைக் கண்டறிதல், மதிப்பீடு செய்தல் மற்றும் முன்னுரிமையமைத்தல் ஆகிய செயலாக்கமாகக் கருதலாம், மேலும் இச்செயலாக்கத்தைத் தொடர்ந்து துரதிருஷ்டமான நிகழ்வுகளின் வாய்ப்பு மற்றும்/அல்லது தாக்கத்தைக் குறைக்க, கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த அல்லது சரி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் கூடிய வளங்களின் பொருளாதார பயன்பாடு நிகழ்த்தப்படும்[1]. இடர்கள் நிதி சந்தைகள், பணித்திட்டத் தோல்விகள், சட்ட ரீதியான பொறுப்புகள், கடன் இடர்கள், விபத்துகள், இயற்கைக் காரணங்கள் மற்றும் பேரழிவுகள் மற்றும் எதிரிகளால் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகிய பலவற்றிலுள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணங்களால் ஏற்படலாம். ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, காப்பீட்டுக் கணிப்பு சங்கங்கள் மற்றும் ISO தரநிலைகள் ஆகியவை உள்ளிட்ட பல இடர் மேலாண்மை தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.[2][3] இடர் மேலாண்மை என்பது, பணித்திட்ட மேலாண்மை, பாதுகாப்பு, பொறியியலாக்கம், தொழிற்துறை செயலாக்கங்கள், நிதி செயல்பாடுகள், புள்ளியியல் மதிப்பீடுகள் அல்லது பொது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் எந்த சூழலில் பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்து, முறைகள், வரையறைகள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவை பரவலாக வேறுபடுகின்றன.

இடரை மற்றொரு தரப்பினருக்கு மாற்றிவிடுதல், இடரைத் தவிர்த்தல், இடரின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடரின் அனைத்து அல்லது ஒரு சில விளைவுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இடரை நிர்வகிப்பதற்கான உத்திகளில் அடங்கும்.

பல இடர் மேலாண்மை தரநிலைகளின் சில குறிப்பிட்ட அம்சங்களின் மதிப்பீடு செய்தல் மற்றும் முடிவெடுத்தல்களிலான நம்பிக்கை அதிகரித்திருந்தாலும் அவை இடர் குறித்த அளவிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் கொண்டில்லலத காரணத்தால் விமர்சனத்துகு உள்ளாகியுள்ளன.[1]

இடரினால் வரும் பாதிப்புகள்[தொகு]

ஓரு இடர் பொதுவாக மூன்று வழியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை முறையே -

  1. செயல் கோப்பு மாற்றம் (Scope change)- செயல் கோப்பு மாற்றம் ஏற்படும்போது இருக்கின்ற செயல்களில் சில செயல்களை செய்யமுடியாமல் போகலாம்
  2. கால நிறை மாற்றம் (Schedule) - கால நிறை மாற்றத்தால் திட்டமிட்ட நேரத்தில் செயல்களை முடிக்கமுடியாமல் போகலாம்.
  3. பொருள்/பண மதிப்பு மாற்றம் (Cost)- மதிப்பு மாற்றத்தால் திட்டமிட்ட செலவிற்குள் முடிக்கமுடியாமல் போகலாம்.

இடரினால் வரும் பாதிப்பைச் சந்திக்கும் வழிகள்[தொகு]

இடரினால் வரும் பாதிப்பினை சந்திக்க நான்கு வழிகள் உள்ளன. அவை முறையே -

  1. இடர் ஏற்றல் (Risk Acceptance) - இடரை ஆமோதித்தலின் மூலமாக நாம் அந்த இடரின் பயனை ஏற்றுக்கொண்டு திட்டத்தையும், செயல்களையும் மாற்றியமைத்து முன்னேறுகிறோம்.
  2. இடர் மாற்றல் (Risk Transfer) - இடரை பிறருக்கு மாற்றுவதால் அதன் பாதிப்பிலிருந்து தப்புகின்றோம்.
  3. இடர் தவிர்த்தல் (Risk Avoidance) - இடரை தவிர்ப்பதால் அது நம்மை பாதிப்பதில்லை.
  4. இடர் சமாளித்தல் (Risk Mitigation) - இடரை பிற நிகழ்வுகளால் அதன் பாதிப்பினை தடுத்தல்.

இந்த நான்கில் ஏதேனும் ஒரு வழியின் மூலம் இடரின் பாதிப்பை அகற்ற வேண்டும். இடர் முகாமைத்துவத்துவத்தை கருத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும்.

முன்னுரை[தொகு]

இந்தப் பிரிவு இடர் மேலாண்மையின் கொள்கைகள் குறித்த அறிமுகத்தை வழங்குகிறது. இடர் மேலாண்மையின் சொல்லகராதி ISO வழிகாட்டி 73 இல் வரையறுக்கப்பட்டுள்ளது, "இடர் மேலாண்மை. சொல்லகராதி" [2].

இலட்சிய இடர் மேலாண்மையில், மிகப் பெரிய இழப்பு மற்றும் நிகழக்கூடிய நிகழ்தகவு அதிகமாக உள்ள இடர்கள் முதலில் கையாளப்படுகின்றன. இதற்காக முன்னுரிமையாக்க செயலாக்கம் பின்பற்றப்படுகிறது, மேலும் இதன் படி குறைந்த முன்னுரிமை உள்ள மற்றும் குறைவான இழப்பு உடைய இடர்கள் இறங்கு வரிசையில் கையாளப்படுகின்றன. நடைமுறையில், இந்தச் செயலாக்கம் மிகவும் கடினமானதாக இருக்கலாம். மேலும் குறைந்த இழப்பு மற்றும் அதிக நிகழ்தகவையும் அதிக இழப்பு மற்றும் குறைந்த நிகழ்தகவையும் கொண்டுள்ள இடர்கள் ஆகிய இரு வகை இடர்களுக்குத் தேவையான கையாள்வதில் உள்ள சமநிலை சில நேரம் தவறாக கையாளப்படுகிறது.

புலனாகா இடர் மேலாண்மையானது ஒரு புதிய வகை இடரைக் கண்டறிகிறது, அது நிகழ்வதற்கான நிகழ்தகவு 100% ஆக இருந்தும் நிறுவனம் அதைக் கண்டறிந்துகொள்ளும் திறனில்லாததால் அதைப் புறக்கணிக்கும் வகையிலான இடரே ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு சூழ்நிலைக்கு தேய்மான அறிவு பயன்படுத்தப்படும் போது, அங்கு ஒரு அறிவு இடர் உருவாகிறது. பொருத்தமற்ற கூட்டிணைவுகள் உருவாகும் போது தொடர்பு இடர் உருவாகிறது. செயல்திறனற்ற செயல்பாட்டு செயலாக்க முறைகளைப் பயன்படுத்தும்பட்சத்தில் செயலாக்க-ஈடுபாட்டு இடர் உருவாகலாம். இந்த இடர்கள் நேரடியாக அறிவு சார் பணியாளர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன. மேலும் விலைத்திறன் தன்மை, இலாபத் தன்மை, சேவை, தரம், மதிப்பு, வர்த்தக முத்திரை (ப்ராண்டு) மதிப்பு மற்றும் ஈட்டும் தரம் ஆகியவற்றைக் குறைக்கின்றன. புலப்படா இடர் மேலாண்மை என்பது, இடர் மேலாண்மையானது உற்பத்தித் திறனைக் குறைக்கக்கூடிய இடர்களைக் கண்டறிதல் மற்றும் குறைத்தலின் செயலாக்கத்தை அடுத்து உடனடி மதிப்புகளை உருவாக்க உதவியாக உள்ளது.

இடர் மேலாண்மை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிரமங்களையும் எதிர்கொள்கிறது. இதுவே வாய்ப்பு செலவு என்ற கருத்தாகும். இடர் மேலாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் வளங்கள் அதை விட அதிக இலாபத் தன்மை வாய்ந்த செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இலட்சிய இடர் மேலாண்மையானது, இடர்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும் செயல்திறனை அதிகரிக்கும் அதே வேளையில் செலவினங்களைக் குறைக்கவும் செய்கிறது.

முறை[தொகு]

பெரும்பாலும், இந்த முறைகள் பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை ஏறத்தாழ பின்வரும் வரிசையிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

  1. அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், இயல்புகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் மதிப்பீடு செய்தல்
  2. முக்கிய சொத்துகள் குறிப்பிட்ட அச்சுறுத்தல்களுக்கு உரியனவாக இருக்கும் தன்மையை மதிப்பீடு செய்தல்
  3. இடரைத் தீர்மானித்தல் (அதாவது குறிப்பிட்ட வகை சொத்துகளின் மீதான தாக்குதல்களின் எதிர்நோக்கும் விளைவுகள்)
  4. அந்த இடர்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிதல்
  5. உத்தியைப் பயன்படுத்தி இடர் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கல்

இடர் மேலாண்மையின் தத்துவங்கள்[தொகு]

சர்வதேச தரநிர்ணய அமைப்பு பின்வரும் இடர் மேலாண்மைத் தத்துவங்களைக் கண்டறிந்துள்ளது:[4]

இடர் மேலாண்மையானது...

  • மதிப்பை உருவாக்க வேண்டும்.
  • நிறுவன செயலாக்கங்களின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்.
  • முடிவெடுத்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • நிச்சயமற்ற தன்மையினை வெளிப்படையாக அணுக வேண்டும்.
  • முறையானதாகவும் கட்டமைப்புக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • கிடைக்கக்கூடிய சிறந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • திருத்தியமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • மனிதக் காரணிகளைக் கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.
  • வெளிப்படையானதாகவும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • செயல் தன்மை கொண்டதாகவும் மீண்டும் செயல்படுத்தக்கூடிய மறுபயன்பாட்டுத் தன்மை கொண்டதாகவும் மாற்றங்களுக்கு ஏற்ற தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்கான திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

செயலாக்கம்[தொகு]

"ரிஸ்க் மேனேஜ்மெண்ட் -- ப்ரின்சிப்ள்ஸ் அண்ட் இம்ப்ளிமெண்ட்டேஷன்" என்னும் ISO 31000 தரநிலையின் படி[3], இடர் மேலாண்மையின் செயலாக்கமானது பின்வரும் பல படிகளைக் கொண்டது:

சூழலை நிறுவுதல்[தொகு]

சூழலை நிறுவுதல் என்பதில் பின்வருவன உள்ளடங்கும்

  1. குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள இடரைக் கண்டறிதல்
  2. செயலாக்கத்தின் மீதமுள்ள பகுதிக்கான திட்டமிடல் .
  3. பின்வருவனவற்றைத் தெளிந்தறிதல் :
    • இடர் மேலாண்மையின் சமூக ரீதியான நோக்கம்
    • நடுநிலை முதலீட்டாளர்களின் அடையாளம் மற்றும் இலக்குகள்
    • இடர்கள் மதிப்பீடு செய்யப்படுவதற்கான அடிப்படையான அம்சங்கள் மற்றும் தாக்க விளைவுகள்.
  4. செயல்பாட்டுக்கான பணிச்சட்டகத்தையும் கண்டறிதலுக்கான செயல்திட்ட நிரலையும் வரையறுத்தல்.
  5. செயலாக்கத்தில் சம்பந்தப்பட்ட இடர்களைப் பற்றிய பகுப்பாய்வை உருவாக்குதல் .
  6. கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், மனித மற்றும் நிறுவன வளங்களைப் பயன்படுத்தி இடர்களைத் தணித்தல் .

கண்டறிதல்[தொகு]

சூழலை நிறுவிய பின்னர், சாத்தியமுள்ள இடர்களைக் கண்டறிதலே இடர் மேலாண்மை செயலாக்கத்தின் அடுத்தபடியாகும். குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பின்னர் சிக்கல் உருவானால், அவையே இடர்கள் என்பவையாகும். ஆகவே, இடர் கண்டறிதல் என்பது சிக்கல்களின் மூலம் அல்லது சிக்கல்களைக் கொண்டே தொடங்குகிறது.

  • மூலப் பகுப்பாய்வு[சான்று தேவை] இடர் மூலம் என்பது இடர் மேலாண்மையின் இலக்கான அமைப்புக்குள்ளேயே இருக்கும் ஒன்றாகவோ அல்லது புற மூலமாகவோ இருக்கலாம்.

இடர் மூலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: ஒரு பணித்திட்டத்தின் நடுநிலை முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் அல்லது விமான நிலையத்தின் வானிலை ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

  • சிக்கல் பகுப்பாய்வு[சான்று தேவை] இடர்கள் கண்டறியப்பட்ட அச்சுறுத்தல்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு: பணத்தை இழப்பதற்கான அச்சுறுத்தல், அந்தரங்கத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான அச்சுறுத்தல் அல்லது விபத்துகள் காயங்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள். இந்த அச்சுறுத்தல்கள் பல்வேறு விதங்களுடன் இணைந்ததாக இருக்கலாம், பெரும்பாலும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்கம் போன்ற சட்டமியற்றல் ஆணையங்கள் ஆகியவற்றுடனே இது முக்கியமாக தொடர்புடையதாக உள்ளது.

சிக்கலுக்கான மூலம் அல்லது சிக்கல் கண்டறியப்பட்டதும், இந்த மூலங்கள் ஏற்படக் காரணமான நிகழ்வுகள் அல்லது ஒரு சிக்கலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியனவற்றை ஆய்வு செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு: ஒரு பணித்திட்டம் செயலில் இருக்கும் போது நடுநிலை முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப்பெறுவது அந்தப் பணித்திட்டத்திற்கு ஆபத்தாக முடியலாம். மூடிய ஒரு வலைப்பின்னலைப்பிலேயே கூட பணியாளர்களால் அந்தரங்கத் தகவல்கள் திருடப்படலாம். போயிங் 747 விமானம் புறப்படும்போது அதை மின்னல் தாக்கினால் அதிலுள்ள அத்தனை பயணிகளும் காயமடையலாம்.

இடர்களைக் கண்டறிவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் கலாச்சாரம், தொழிற்துறை நடைமுறை வழக்கங்கள் மற்றும் இணக்கத் தன்மை ஆகியவற்றைச் சார்ந்திருக்கலாம். கண்டறிதல் முறைகள் வார்ப்புருக்கள் அல்லது மூலம், சிக்கல் அல்லது நிகழ்வைக் கண்டறிவதற்கான வார்ப்புருவை மேம்படுத்தல் ஆகிய செயல்களினால் உருவாக்கப்படலாம். பொதுவான இடர் கண்டறிதல் முறைகளாவன:

  • குறிக்கோள்-அடிப்படையிலான இடர் கண்டறிதல்[சான்று தேவை] நிறுவனங்கள் அல்லது பணித்திட்டக் குழுக்களுக்கு குறிக்கோள்கள் உள்ளன. ஒரு குறிக்கோளை அடைவதை முழுவதுமோ அல்லது பகுதியளவிலோ ஆபத்துக்குட்படுத்தக்கூடிய எந்த ஒரு நிகழ்வும் இடர் என அடையாளப்படுத்தப்பட்டு கண்டறியப்படுகிறது.
  • நிகழ்வுக் கற்பனைகள்-அடிப்படையிலான இடர் கண்டறிதல் நிகழ்வுக் கற்பனைகள் பகுப்பாய்வில் பல்வேறு நிகழ்வுக் கற்பனைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுக் கற்பனைகள் என்பவை குறிக்கோளை அடைவதற்கான மாற்று வழிகளாக இருக்கலாம், அல்லது சந்தை அல்லது போர் போன்றவற்றில் உள்ள சக்திகளின் குறுக்கீட்டு செயல்களின் பகுப்பாய்வாக இருக்கலாம். விரும்பத்தகாத ஒரு நிகழ்வுக் கற்பனையை வழங்கக்கூடிய எந்த இரு நிகழ்வும் இடர் என அறியப்படலாம் - எதிர்காலவியலாளர்களால் பயன்படுத்தப்படும் முறைகளுக்கான எதிர்கால ஆய்வுகள் என்பதைக் காண்க.
  • வகைப்பாட்டு-அடிப்படையிலான இடர் கண்டறிதல் வகைப்பாடு-அடிப்படையிலான வகைப்பாடு என்பது சாத்தியமுள்ள இடர் மூலங்களைப் பகுப்பதாகும். வகைப்பாடாக்கம் மற்றும் சிறந்த நடைமுறை வழக்கங்கள் தொடர்பான அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கேள்வியமைப்பு தொகுக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இடர்களின் அளவை நிர்ணயிக்கின்றன. மென்பொருள் தொழிற்துறையிலுள்ள வகைப்பாடாக்க அடிப்படையிலான இடர் கண்டறிதலானது CMU/SEI-93-TR-6 இல் காணப்படலாம்.
  • பொதுவான-இடர் சோதித்தல் {{citation}}: Empty citation (help) அறியப்பட்ட இடர்களின் பட்டியல்கள், பல தொழிற்துறைகளில் கிடைக்கின்றன. பட்டியலில் உள்ள ஒவ்வொரு இடரையும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பயன்படுத்துவதற்காக சோதித்துக்கொள்ளலாம். மென்பொருள் தொழிற்துறையில் அறியப்பட்ட இடர்களுக்கான எடுத்துக்காட்டு பொதுவான பாதிப்புத் தன்மை மற்றும் தாக்கங்களுக்குட்படுத்தும் தன்மை இங்கு கிடைக்கும் http://cve.mitre.org.
  • இடர் விளக்கப்பட அமைப்பு {க்ராக்ஃபோர்டு, என்., "அன் இண்ட்ரடக்ஷன் டு ரிஸ்க் மேனேஜ்மெண்ட், கேம்ப்ரிட்ஜ், யூ.கே., உட்ஹெட்-ஃபாக்னர் 2ஆம் பதிப்பு 1986 ப. 18} மேலே விவரிக்கப்பட்ட அணுகுமுறைகளை ஒருங்கே கொண்டதே இம்முறையாகும், அது இடரில் உள்ள வளங்கள், இடரை அதிகரிக்க அல்லது குறைக்கக்கூடிய அந்த வள மாற்றக் காரணிகளுக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விளைவுகள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது. இந்த தலைப்புகளின் கீழான ஓர் அணியை உருவாக்குவதனால் பல்வேறு அணுகுமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன. முதலில் ஒருவர் வளங்களைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றைக் கருத்திலெடுக்கலாம். மாற்றாக, ஒருவர் அச்சுறுத்தல்களை முதலில் கருத்தில் கொண்டு, அவை எந்த வளங்களைப் பாதிக்கக்கூடும் என்று ஆய்வு செய்யலாம் அல்லது விளைவுகளைக் கருத்தில் கொண்டு அவற்றை உருவாக்க எந்த அச்சுறுத்தல்களும் வளங்களும் காரணமாக அமையலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

மதிப்பீடு செய்தல்[தொகு]

இடர் கண்டறியப்பட்டதும், அவை ஏற்படுத்த சாத்தியமுள்ள இழப்புகளின் தீவிரத் தன்மை மற்றும் அவை நிகழ்வதற்கான நிகழ்தகவு ஆகியவற்றினைத் தீர்மானிக்க அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த அளவுகள், இழக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பீடு போன்ற நிகழ்வுகளில் எளிதாக அளவிடக்கூடியனவாகவோ அல்லது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நிகழக்கூடிய நிகழ்தகவின் சந்தர்ப்பத்தில் அதை உறுதியாகக் கூறுவது சாத்தியமற்றதாகவோ இருக்கலாம். ஆகவே, மதிப்பீட்டு செயலாக்கத்தில், இடர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தலுக்கு முறையாக முன்னுரிமையமைக்க, கூடுமானவரை சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட யூகங்களைச் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த கால நிகழ்வுகள் அனைத்துக்குமான புள்ளியியல் விவரங்கள் கிடைப்பதில்லை என்பதால் நிகழ்வு வீதத்தை நிர்ணயிப்பது என்பது இடர் மதிப்பீடு செய்தலில் உள்ள அடிப்படை சிரமமாகும். மேலும், விளைவுகளின் (தாக்கங்களின்) தீவிரத் தன்மையை மதிப்பீடு செய்வது என்பதும் பொருளல்லாத சொத்துகளுக்கு என்ற நிலையில் மிகவும் கடினமானதாகவே உள்ளது. சொத்து மதிப்பீடு என்பதும் அணுகப்பட வேண்டிய மற்றொரு கேள்வியாகும். இதனால், சிறந்த மேம்படுத்தப்பட்ட கருத்துகள் மற்றும் கிடைக்கத்தக்க புள்ளியியல் விவரங்கள் ஆகியவையே தகவல்களுக்கான பிரதான மூலங்களாகும். இருப்பினும், பிரதான இடர்கள் புரிந்துகொள்ள எளிதானவையாக இருப்பதால் இடர் மதிப்பீடானது இத்தகைய தகவல்களை மேலாண்மைக்காக உருவாக்க வேண்டும், மேலும் இதைக் கொண்டு இடர் மேலாண்மை முடிவுகள் முன்னுரிமையமைக்கப்படக் கூடும். இவ்வாறு, இடர்களை அளவிடுவதற்கான பல கோட்பாடுகளும் முயற்சிகளும் இருந்து வருகின்றன. எண்ணற்ற வெவ்வேறு இடர் சூத்திரங்கள் உள்ளன, ஆனால் இடர் அளவீட்டுக்கான சிறப்பான சூத்திரமாக பின்வரும் ஒன்றே இருக்கக்கூடும்:

நிகழ்வு வீதம் மற்றும் நிகழ்வின் தாக்கம் ஆகிய இரண்டின் பெருக்கற்பலனே இடர் ஆகும்

பிற்கால ஆராய்ச்சி[சான்று தேவை] இடர் மேலாண்மையின் நிதி தொடர்பான நன்மைகளானவை பயன்படுத்தப்படும் சூத்திரத்தை சிறிதளவே சார்ந்துள்ளது, ஆனால் இடர் மதிப்பீட்டின் நிகழ்வதிர்வெண் மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதையே அதிகமாக சார்ந்துள்ளது எனக் காண்பித்தது.

வணிகத்தில், இடர் மதிப்பீடுகளின் கண்டறிதல்களை நிதிக் கூறுகளின் வடிவில் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. ராபர்ட் கோர்ட்னீ ஜூனியர். (Robert Courtney Jr.) (IBM, 1970) ஒரு சூத்திரத்தை முன்மொழிந்தார், அது இடர்களை நிதியியல் கூறுகளாக விளக்கியது[5]. கோர்ட்னியின் சூத்திரம், அமெரிக்க அரசாங்க முகமைகளின் அதிகாரப்பூர்வ இடர் பகுப்பாய்வு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சூத்திரமானது ALE (ஆண்டிற்கான இழப்பு எதிர்நோக்கு) இன் கணக்கீட்டை முன்மொழிகிறது, மேலும் அது பங்குகளால் கட்டுப்பாட்டு செயல்படுத்தல் செலவுகளுடன் ஒப்பிடப்படுகிறது (விலைத்திறன் இலாபத்தன்மை பகுப்பாய்வு).

சாத்தியமுள்ள இடர் பரிகாரங்கள்[தொகு]

இடர்களைக் கண்டறிந்து மதிப்பீடு செய்தவுடன் இடரை நிர்வகிக்கத் தேவையான அனைத்து நுட்பங்களும் பின்வரும் நான்கு வகைகளில் அடங்குகின்றன:[6]

  • தவிர்த்தல் (நீக்குதல்)
  • குறைப்பு (தணித்தல்)
  • பகிர்தல் (அயலாக்கம் அல்லது காப்பீடு செய்தல்)
  • தக்கவைத்துக்கொள்ளல் (ஏற்று பணத்திட்டமிடல்)

இந்த உத்திகளின் இலட்சியப் பயனானது சாத்தியமானதாக இல்லாமல் போகலாம். இவற்றில் சில, நிறுவனம் அல்லது இடர் மேலாண்மை முடிவுகளை எடுக்கும் நபர் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகக்கூடிய வர்த்தகப் பரிமாற்ற சமாதானங்களைக் கொண்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறை, டிஃபென்ஸ் அக்விசஷன் யுனிவெர்சிட்டி ஆகியவற்றிலிருந்து கிடைத்த மற்றொரு ஆதாரத்தின் படி, இந்த வகைகள் ACAT , தவிர்த்தல், கட்டுப்படுத்தல், ஏற்றல் அல்லது மாற்றுதல் என அழைக்கப்படுகின்றன. ACAT சுருக்கப்பெயரைப் பயன்படுத்துவது மற்றொரு ACAT (கையகப்படுத்தல் வகைக்கான சுருக்கம்) ஐ நினைவுபடுத்தக்கூடும். அது அமெரிக்க இராணுவ தொழிற்துறை கையகப்படுத்தல்களில் வழக்கத்திலுள்ள சுருக்கமாகும், இதில் இடர் மேலாண்மையானது முடிவெடுத்தல் மற்றும் திட்டமிடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இடர் தவிர்த்தல்[தொகு]

இதில் இடர் வருவிக்கும் விதமான செயல்களைச் செய்யாதிருத்தல் என்பது வழிமுறையாகிறது. ஒரு சொத்து அல்லது வணிகத்தை வாங்குவதால் வரக்கூடிய கடன் பொறுப்புகளை வராமல் காப்பதற்காக அவற்றை வாங்காமல் தவிர்த்தலை இதற்கான எடுத்துக்காட்டாகக் கூறலாம். விமானம் கடத்தப்படக்கூடும் என்ற நிலையில் அதில் பயணம் செய்யாமல் இருத்தல் மற்றொரு எடுத்துக்காட்டாகும். அனைத்து இடர்களுக்குமே தவிர்த்தல் என்பது ஒரு தீர்வாகத் தோன்றலாம், ஆனால் இடரைத் தவிர்ப்பது என்பதிலும், இடரை ஏற்றுக்கொண்டிருந்தால் (தக்கவைத்துக்கொள்ளல்) சாத்தியமாகியிருக்கக்கூடிய இலாபங்களைத் தவறவிடும் இழப்பும் உள்ளது. இழப்புகளைத் தவிர்ப்பதற்காக ஒரு வணிகத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பதால் அதில் வரக்கூடிய இலாபங்களையும் தவறவிடக்கூடும்.

தீங்குத் தடுப்பு[தொகு]

தீங்குத் தடுப்பு என்பது ஓர் அவசரக்காலத்தில் இடர்களைத் தடுப்பதைக் குறிக்கிறது. முதல் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட தீங்குத் தடுப்பு உத்தி தீங்குகளை நீக்குவதாகும். இதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொண்டால், மிகவும் செலவு மிக்கதாக இருந்தால் அல்லது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருந்தால் இதற்கு அடுத்துள்ள நிலை தணித்தல் ஆகும். நிகழும் தீங்குள்ள நிகழ்வுகளைத் தடுப்பதே தணித்தலாகும்

இடர் குறைப்பு[தொகு]

இது, ஏற்படக்கூடிய இழப்புகளின் தீவிரத்தன்மை அல்லது இழப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பைக் குறைக்கும் முறைகளைப் பயன்படுத்துகின்றது. எடுத்துக்காட்டுக்கு, தீயினால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைப்பதற்காக தீயை அணைப்பதற்காக ஸ்ப்ரிங்க்ளர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையானது நீர் சேதாரத்தினால் மிக அதிக இழப்பை ஏற்படுத்தலாம், ஆகவே பொருத்தமானதாக இருக்காமல் போக வாய்ப்புள்ளது. ஹாலோன் தீக்கட்டுப்படுத்தி அமைப்புகள் இந்த இடரைத் தணிக்கக்கூடும், ஆனால் ஓர் உத்தியாகப் பார்க்கையில் இதன் செலவு மிக அதிகமாகும்.

நவீன மென்பொருள் உருவாக்க முறையியல்கள் மென்பொருளை உருவாக்கி வழங்கும் அதிகரிக்கப்பட்ட திறனால் இடர்களை அதிகமாகக் குறைத்துள்ளன. முற்கால முறையியல்கள், அவற்றின் மேம்பாட்டின் இறுதிக்கட்டத்தில் மட்டுமே அவை மென்பொருளை வழங்கின என்ற ஓர் உண்மையினால் பாதிக்கப்பட்டன. இவற்றில் முந்தைய கட்டப் பணிகளில் ஏதேனும் ஒரு சிக்கல் நேர்ந்தால் அது மிக செலவுமிக்க மறு வேலையை ஏற்படுத்தலாம் அல்லது ஒட்டுமொத்த பணித்திட்டத்திற்கே தீங்காக அமையலாம். மீண்டும் பயன்படுத்தக்கூடிய பகுதிகளாக மென்பொருளை உருவாக்குவதனால், மென்பொருள் பணித்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட பிழையைச் சரிசெய்ய தேவைப்படும் சிரத்தையின் அளவைக் குறைத்துள்ளன.

இடர்களை நிர்வகிப்பதில் ஒரு அயலாக்கத் தரப்பினர் மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவார் என்று தெரியும் போது அவரிடம் அப்பொறுப்பை விட்டுவிடுவதே அயலாக்கமாகும். இது இடர் குறைப்புக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.[7]. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நிறுவனம் அதன் மென்பொருள் உருவாக்கம், கடினமான பொருள்கள் அல்லது வாடிக்கையாளர் ஆதரவு தேவைகள் ஆகிய பணிகளை மட்டும் அயலாக்கம் செய்யலாம், அதே நேரம் வணிக மேலாண்மையை மட்டும் தானாகவே நிர்வகிக்கலாம். இவ்விதமாக, ஒரு நிறுவனம் உற்பத்தி செயலாக்கம், உருவாக்கக் குழுவை நிர்வகித்தல் அல்லது கால் செண்டருக்கான இடத்தைத் தேடுதல் போன்ற செயல்களுக்காகக் கவலைப்படுவதை விடுத்து வணிக மேம்பாட்டில் அதிகமாக கவனம் செலுத்த முடியும்.

இடர் தக்கவைப்பு[தொகு]

இதில் இழப்புகள் ஏற்படும் போது அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மெய் சுயக் காப்பீடு என்பது இந்த வகையின் கீழ் வரக்கூடியதாகும். இடர் தக்கவைப்பு என்பது சிறு இடர்களுக்கான செயல்படுத்தக்கூடிய தன்மை கொண்ட உத்தியாகும், இதில் தக்கவைத்துக்கொள்ளப்பட்ட மொத்த இழப்புகளைக் காட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்குட்பட்டு இடர் குறித்த காப்பீட்டுக்கு ஆகும் செலவு குறைவே ஆகும். அனைத்து இடர்களும் இயல்பாகவே தவிர்க்கப்படுவதோ மாற்றிவிடப்படுவதோ இல்லை. இதில் எதிராகக் காப்பீடு செய்ய முடியாத அல்லது அதற்கான பிரீமியங்கள் மிக அதிகத் தொகையாக இருக்கக்கூடிய மிகப் பெரிய அல்லது அதிக அழிவுத்தன்மை கொண்ட இடர்களும் அடங்கும். பெரும்பாலான சொத்து மற்றும் இடர்கள் போருக்கு எதிராக காப்பீடு செய்யப்படுவதில்லை, ஆகவே போரினால் ஏற்படும் இழப்புகளைக் காப்பீடு செய்தவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதால், போர் இதற்கான எடுத்துக்காட்டாகும். மேலும், காப்பீடு செய்யப்பட்ட அளவைத் தாண்டிய சாத்தியமுள்ள இழப்பின் (இடர்) ஏதேனும் அளவே தக்கவைத்துக்கொண்ட இடராகும். மிகப் பெரிய இழப்பின் வாய்ப்பு சிறிதளவே என இருந்தால் அல்லது அதிக காப்பு தரக்கூடிய காப்பீடு தொகைகள் நிறுவனம் தனது குறிக்கோள்களை அடைவதற்கு குறிப்பிடத்தக்க தடைகளாக விளங்கக்கூடும் என்ற நிலையிலும் இது ஏற்கக்கூடியதாக இருக்கும்.

இடர் பகிர்தல்[தொகு]

'இடர் மாற்றம்' என்ற சொல்லானது பெரும்பாலும், காப்பீடு அல்லது அயலாக்கம் போன்றவற்றின் மூலம் ஓர் இடரை நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு மாற்றிவிட முடியும் என்று தவறாகக் கருதிய பிழையினால் இடர் பகிர்தல் நிகழ்வும் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. நடைமுறையில் காப்பீட்டு நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் திவாலானால் அல்லது நீதிமன்ற முடிவுக்கு செல்ல நேர்ந்தால் இடரானது முதல் தரப்பினருக்கே திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. நடைமுறை செயல்படுத்துநர்கள் மற்றும் கல்வியலாளர்களின் சொல்லியலில் உள்ளது போன்று, காப்பீட்டு ஒப்பந்தத்தின் வாங்குதலானது "இடர் மாற்றம்" என விவரிக்கப்படுகிறது. இருப்பினும், நுட்ப ரீதியாகக் கூறுகையில், ஒப்பந்தத்தை வாங்குபவர் பொதுவாக "மாற்றிவிடப்பட்ட" இழப்புகளுக்கான சட்ட ரீதியான பொறுப்பைக் கொண்டிருப்பவராவார், அதாவது காப்பீடு என்பதை நிகழ்வுக்குப் பிந்தைய இயங்கம்சம் என மேலும் துல்லியமாக விவரிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு தனிப்பட்ட காயத் தாக்குதல் பாலிசியானது ஒரு கார் விபத்தின் இடர் இழப்பை காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிவிடுவதில்லை. இடரானது பாலிசிதாரருக்கானதாகவே உள்ளது, அதாவது விபத்தில் சிக்கிய மனிதர். காப்பீட்டு பாலிசியானது, ஒரு விபத்து (நிகழ்வு) பாலிசிதாரருக்கு நிகழ்ந்தால், பாலிசிதாரருக்கு அதற்கான குறிப்பிட்ட மதிப்பு கொண்ட இழப்பீட்டை அளிக்கலாம், அது அந்த பாதிப்பு/சேதரத்தை ஈடு செய்யும் அளவில் இருக்கக்கூடும் என்பதையே வழங்குகிறது.

இடர் மேலாண்மையின் வழிகள் பல வகைகளாக உள்ளன. இடர் தக்கவைப்பு அம்சமானது தொழில்நுட்ப ரீதியாக குழுவிற்கான இடரைத் தாங்கிக்கொள்கிறது, ஆனால் அதை குழு முழுவதற்கும் பங்கிடுதல் என்பது அது குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒருவருக்கொருவரிடையே மாற்றிக்கொள்வதுடன் தொடர்புடையதாகும். இது வழக்கமான காப்பீட்டில் இருந்து வேறுபட்டது, அதாவது இதில் உறுப்பினர்களுக்கிடையே காப்பீட்டு பிரீமியமானது பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக குழுவின் அனைத்து உறுப்பினருக்கும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஓர் இடர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குதல்[தொகு]

ஒவ்வொரு இடரையும் அளக்க சரியான மற்றும் ஏற்ற கட்டுப்பாடுகள் அல்லது எதிர் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தல். இடர் தணித்தல் என்பதற்கு மேலாண்மையின் சரியான மட்டத்திலுள்ள அதிகாரிகளின் ஒப்புதல் அவசியமாகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நிறுவனத்தின் மதிப்பு மரியாதை தொடர்பான ஓர் இடர் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அதன் உயர் மட்ட மேலாண்மை இடம்பெறும். அதே கணினி வைரஸ் தொடர்பான இடரைக் குறித்த விவகாரங்களில் IT மேலாண்மை அதிகாரிகளே முடிவெடுக்கலாம்.

இடர் மேலாண்மை திட்டமானது இடர்களை நிர்வகிப்பதற்கான பயன்படுத்தக்கூடியதும் செயல்திறன் மிக்கதுமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை முன்மொழிவதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கணினி வைரஸ்களினால் அதிகமான இடர் ஏற்படும் சூழ்நிலையில், அந்த இடரை ஆண்டி வைரஸ் மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமாக தணிக்கலாம். ஒரு சிறந்த இடர் மேலாண்மைத் திட்டம் என்பது கட்டுப்பாடு செயல்படுத்தல்களுக்கான செயலட்டவணையையும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற விவரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

ISO/IEC 27001 இன் படி, இடர் மதிப்பீடு செய்தல் கட்டத்திற்கு அடுத்த முதல் நிலையில், இடர் தீர்த்தல் திட்டத்தைத் தயாரித்தலே ஆகும், கண்டறியப்பட்ட ஒவ்வொரு இடரையும் எவ்வாறு கையாளவேண்டும் என்பதைப் பற்றிய முடிவுகள் ஆவணமாக்கப்பட்டு அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். இடர்களைத் தணித்தல் என்பது பெரும்பாலும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் தேர்ந்தெடுத்தலையே குறிக்கிறது. இது பயன்படுத்தத்தக்க தன்மையின் அறிக்கையில் ஆவணமாக்கப்பட வேண்டும், மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட தரநிலைகளிலிருந்து எந்த குறிப்பிட்ட கட்டுப்பாட்டு குறிக்கோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன மற்றும் அவை ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதைக் கண்டறிய வேண்டும்.

செயல்படுத்தல்[தொகு]

இடர்களின் விளைவுகளைத் தணிக்க, திட்டமிடப்பட்ட அனைத்து முறைகளையும் பயன்படுத்துதல். ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிவிட தேர்ந்தெடுக்கப்பட்ட இடர்களுக்காக காப்பீடு பாலிசிகளை வாங்குதல், நிறுவனத்தின் குறிக்கோள்களைத் தியாகம் செய்யாமல் தவிர்க்கக்கூடிய அனைத்து இடர்களையும் தவிர்த்தல், மற்றவற்றைக் குறைத்தல் மற்றும் மீதமுள்ளவற்றை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலடங்கும்.

திட்டத்தின் மறுஆய்வு மற்றும் மதிப்பாய்வு[தொகு]

தொடக்க இடர் மேலாண்மைத் திட்டங்கள் ஒருபோதும் முழுமையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்காது. பயிற்சி, அனுபவம் மற்றும் உண்மையான இழப்பின் விளைவு முடிவுகள் ஆகியவை திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்ற நிலையை வழங்கும். மேலும் இவை எதிர்கொள்ளப்படும் இடர்களைக் கையாள்வதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சாத்தியமுள்ள உதவிக்கான தகவல்களை வழங்கும்.

இடர் பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் மேலாண்மைத் திட்டங்கள் வழக்கமாக புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:

  1. முன்னர் தேர்ந்தெடுத்திருந்த கட்டுப்பாடுகள் இன்னும் பயன்படுத்தத்தக்கதாகவும் செயல்திறன் மிக்கவையாகவும் உள்ளனவா என்பதை மதிப்பாய்வு செய்வது மற்றும்
  2. வணிகச் சூழலில் சாத்தியமுள்ள இடர் அளவு மாற்றங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகியவையாகும். எடுத்துக்காட்டுக்கு, விரைவாக மாறிக்கொண்டுவரும் வணிகச் சூழலுக்கு தகவல் இடர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குறைபாடுகள்[தொகு]

இடர்கள் தவறாக மதிப்பீடு செய்யப்பட்டு முன்னுரிமையமைக்கப்பட்டால், நிகழ வாய்ப்பில்லாத இடர்களைக் கையாள்வது அவற்றுக்காக சிரத்தையெடுத்துக்கொள்வது போன்ற செயல்களில் நேரம் வீணாகக்கூடும். நிகழ வாய்ப்பில்லாத இடர்களை மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரத்தை செலவழித்தல் மற்றும் அவற்றுக்கான மேலாண்மை செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றால் இன்னும் இலாபத் தன்மை மிக்க வழிகளில் பயன்பட்டிருக்கக்கூடிய வளங்களை வழிமாறிப் பயன்படுத்தி அவை வீணாகலாம். நிகழ வாய்ப்பில்லாத நிகழ்வுகள் நிகழக்கூடும், ஆனால் நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள இடர் ஒன்று இருப்பின், அதை ஏற்றுக்கொண்டு அதனால் இழப்பு ஏற்பட்டால், அந்த விளைவைக் கையாள்வது சிறந்ததாகும். பண்பறி இடர் மதிப்பீடு என்பது பொருள் சார்ந்ததாகவும் இசைவுத் தன்மை குறைவானதாகவும் உள்ளது. முறையான பிரதான இடர் மதிப்பீட்டு செயலாக்கம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரக் கட்டுப்பாடுகள் ரீதியானதுமாகும்.

இடர் மேலாண்மை செயலாக்கங்களின் முன்னுரிமையமைத்தல் என்பது ஒரு நிறுவனம் தனது பணித்திட்டத்தை முடிப்பதற்கும் அல்லது தொடங்குவதற்கும் கூட மிகவும் உதவிகரமானதாக இருக்கக்கூடும். இடர் மேலாண்மை செயலாக்கம் முழுவதுமாக முடியும் வரை பிற பணிகளை நிறுத்திவைத்தால் மட்டுமே இது உண்மையாகும்.

இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நினைவில் கொள்வதும் முக்கியமானதாகும். இடரை தாக்கங்கள் x நிகழ்தகவு என்ற கணக்கீட்டில் அளவிட முடியும்.

இடர் மேலாண்மையின் பகுதிகள்[தொகு]

பெருநிறுவன நிதியியலில் பயன்படுத்துகையில், இடர் மேலாண்மையானது ஒரு நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பிலான நிதியியல் அல்லது செயல்பாட்டியல் இடரை அளவிடுதல், கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒரு நுட்பமாகும். இடரின் மதிப்பு என்பதைக் காண்க.

பேசல் II பணிச்சட்டகமைப்பு இடர்களை சந்தை இடர் (விலை இடர்), கடன் இடர் மற்றும் செயல்பாட்டியல் இடர் எனப் பிரிக்கிறது. மேலும் இந்த ஒவ்வொரு கூறுக்குமான மூலதனத் தேவைகளையும் குறிப்பிடுகிறது.

தொழிற்துறை இடர் மேலாண்மை[தொகு]

தொழிற்துறை இடர் மேலாண்மையில், ஓர் இடர் என்பது, நிறுவனம் ஒன்றின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த சாத்தியமுள்ள ஒரு நிகழ்வாக அல்லது சூழ்நிலையாக வரையறுக்கப்படுகிறது. அதன் தாக்கமானது வளங்கள் (மனிதர்கள் மற்றும் மூலதனம்), தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைத்தின் மீதானதுமாகவும் இருக்கலாம் மற்றும் சமூகம், சந்தைகள் அல்லது சூழலின் மீது ஏற்படக்கூடிய புறத் தாக்கங்களாகவும் இருக்கலாம். ஒரு நிதியியல் அமைப்பில், தொழிற்துறை இடர் மேலாண்மை என்பது வழக்கமாக கடன் இடர், வட்டி வீத இடர் சொத்து கடன் பொறுப்பு மேலாண்மை, சந்தை இடர் மற்றும் செயல்பாட்டியல் இடர் ஆகியவற்றின் சேர்க்கையாகவே கருதப்படுகிறது.

மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், நிகழக்கூடிய வாய்ப்புள்ள எந்த இடரும், அதன் சாத்தியமுள்ள விளைவுகளைக் கையாள்வதற்கான (அந்த இடர் ஒரு கடன் பொறுப்பாக மாறும் என்றபட்சத்தில் அதன் நிகழும் தன்மை யை உறுதிப்படுத்துவதற்கு) ஒரு முன் சூத்திரமாக்கப்பட்ட திட்டத்தைக் கொண்டிருக்கலாம்.

மேலே உள்ள தகவல் மற்றும் ஒரு பணியாளருக்கான ஆண்டு சராசரி செலவு அல்லது செலவு உண்மை விகிதம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பணித்திட்ட மேலாளர் பின்வருவனவற்றை மதிப்பிட முடியும்:

  • இடர் நேர்ந்தால், அதனுடன் தொடர்புடைய செலவு - இது ஓரலகு நேரத்திற்கான பணியாளர் செலவின் மதிப்பை மதிப்பிடப்பட்ட நேர இழப்பினால் பெருக்கி (செலவுத் தாக்கம் , C இதில் C = செலவு உண்மை விகிதம் * S ) கணக்கிடப்படுகிறது.
  • ஓர் இடருடன் தொடர்புடைய காலத்தின் சாத்தியமுள்ள அதிகரிப்பு (இடரினால் செயல்திட்டத்தில் ஏற்படும் மாற்றம் , Rs இங்கு Rs = P * S):
    • இந்த மதிப்பை வரிசைப்படுத்தினால், அதிக தீவிரத் தன்மையுள்ள இடரானது செயல்திட்டத்தில் முதலிடத்தில் இடம்பெறும். பணித்திட்டத்திற்கு நிகழ இருக்கும் மிகப் பெரிய இடர்கள் முதலில் அணுகப்பட்டு அவற்றை கூடுமான விரைவில் சரிசெய்யக்கூடிய வாய்ப்பை வழங்கும் நோக்கத்திலேயே இம்முறை உருவாக்கப்பட்டுள்ளது.
    • செயல்திட்ட மாற்றங்கள் அதிக P மதிப்பு மற்றும் குறைந்த S மதிப்பு மற்றும் இதே போல் எதிர்த்திசையில் அமையும்பட்சத்தில் இரண்டின் விளைவு மதிப்பும் சமமாக இருப்பதில்லை என்பதால் இது சிறிதளவு தவறான கருத்தாக்கத்திற்கு வழிவகுக்கிறது. (RMS டைட்டானிக் மூழ்கியதன் இடரையும் பயணிகளுக்கான உணவு சிறிது தவறான நேரத்தில் வழங்கப்பட்டதையும் ஒப்பிட முடியாது).
  • இடருடன் தொடர்புடைய செலவின் சாத்தியமுள்ள அதிகரிப்பு (இடரினால் ஏற்படும் செலவு மாற்றம் , Rc இதில் Rc = P*C = P*CAR*S = P*S*CAR)
    • இந்த மதிப்புகளை வரிசைப்படுத்தும் போது, பெரிய இடர்கள் பணத்திட்டத்தின் வரிசையில் முதலில் இடம்பெறுகின்றன.
    • இது மேலே விளக்கப்பட்ட சமன்பாட்டிலுள்ளது போன்று செயல்திட்ட மாற்றத்தின் ஒரு சார்பாக இருப்பதால், செயல்திட்ட மாற்றம் தொடர்பான விவகாரங்களைக் காண்க.

ஒரு பணித்திட்டம் அல்லது செயலாக்கத்திலுள்ள இடருக்கு சிறப்புக் காரண மாற்றம் அல்லது பொதுக் காரண மாற்றம் ஆகியவை காரணமாக இருக்கலாம். மேலும் அதற்கேற்ற சரியான தீர்வு முறை தேவைப்படலாம். அதாவது மேலே உள்ள பட்டியலில் சமமாக இல்லாத புற நிகழ்வுகள் பற்றிய விவகாரங்களை மீண்டும் செயல்படுத்துதல்.

பணித்திட்ட மேலாண்மையில் பயன்படுத்தப்படும் இடர்-மேலாண்மை செயல்பாடுகள்[தொகு]

பணித்திட்ட மேலாண்மையில், இடர் மேலாண்மை என்பது பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்:

  • ஒரு குறிப்பிட்ட பணித்திட்டத்தில் இடரை எவ்வாறு நிர்வகிப்பது எனத் திட்டமிடல். இந்தத் திட்டத்தில் இடர் மேலாண்மை பணிகள், பொறுப்புகள், செயல்பாடுகள் மற்றும் பணத்திட்டம் ஆகியவை அடங்கியிருக்க வேண்டும்.
  • இடர் அதிகாரியைப் பணியமர்த்தல் - பணித்திட்ட மேலாளரல்லாத ஒரு குழு உறுப்பினர். சாத்தியக்கூறுள்ள பணித்திட்ட சிக்கல்களை முன்கணிக்கும் பொறுப்பு இவருக்கானதாகும். வழக்கமாக, நலன் சார்ந்த சந்தேகப்படும் குணம் என்பது இடர் அதிகாரியின் சிறப்பியல்பாகும்.
  • நிகழ் நேர பணித்திட்ட இடர் தரவுத்தளத்தைப் பராமரித்தல். ஒவ்வொரு இடரும் பின்வரும் பண்புருக்களைக் கொண்டிருக்க வேண்டும்: தொடக்க தேதி, தலைப்பு, சுருக்கமான விளக்கம், முக்கியத்துவத்தின் நிகழ்தகவு. இதற்கு மாற்று விருப்பமாக, ஒரு இடருக்கு என தனியாக ஒரு நபர் நியமிக்கப்பட்டிருக்கலாம், அவர் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த இடரைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கானதாக இருக்கும்.
  • பெயரில்லா இடர் அறிக்கையிடல் வழியை உருவாக்குதல். அணியின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒரு பணித்திட்டத்திற்கு நிகழ இருக்க சாத்தியமுள்ள இடர் பற்றி ஏதேனும் அவர்கள் அறிந்திருந்தால் உடனடியாக அதைத் தெரிவிக்க வசதி இருக்க வேண்டும்.
  • தணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட இடர்களுக்கான தணித்தல் திட்டங்களைத் தயாரித்தல். இந்தக் குறிப்பிட்ட இடர் எவ்வாறு கையாளப்படும் என்பதை விவரிப்பதே தணித்தல் திட்டத்தின் நோக்கம் ஆகும் – என்ன, எப்போது, யாரால் இது செய்யப்படும் மற்றும் அதைத் தவிர்க்க அல்லது அது ஒரு பொறுப்பாக நிகழ்ந்துவிடும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு குறைப்பது என்பது போன்ற விவரங்கள்.
  • திட்டமிடப்பட்ட மற்றும் எதிர்கொள்ளப்பட்ட இடர்கள், தணித்தல் செயல்பாடுகளின் விளைவுத்திறன் மற்றும் இடர் மேலாண்மைக்காக எடுக்கப்படும் சிரத்தைகள் ஆகியவற்றின் விவரங்களை சுருக்கமாகத் தொகுத்தல்.

இடர் மேலாண்மையும் வணிகத் தொடர்ச்சியும்[தொகு]

இடர் மேலாண்மை என்பது நிறுவனத்திற்குள்ள அச்சுறுத்தல் உணரப்பட்ட விளைவுகளைக் குறைப்பதற்கான செலவுத்திறன் மிக்க அணுகுமுறைகளை முறையாகத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையே ஆகும். அனைத்து இடர்களும் வெறுமென முழுவதுமாகத் தவிர்க்கப்பட முடியாது அல்லது தணிக்கப்பட முடியாது, ஏனெனில் இதில் நிதியியல் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. ஆகவே அனைத்து நிறுவனங்களும் மீதமுள்ள இடர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இடர் மேலாண்மை முன் தடுப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்பட்சத்தில், வணிகத் தொடர்ச்சி திட்டமிடல் (BCP) உணரப்பட்ட மீதமுள்ள இடர்களைக் கையாள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டது. போதிய நேரம் கிடைக்கும்பட்சத்தில் நிகழ வாய்ப்பு குறைவான இடரும் கூட நேர்ந்துவிடக்கூடும் என்பதால், BCP இருக்க வேண்டியதன் அவசியம் எழுகிறது. இடர் மேலாண்மை மற்றும் BCP ஆகியவை பெரும்பாலும் போட்டியிடும் அல்லது மேற்பொருந்தும் அம்சங்களாக தவறாகக் கருதப்படுகின்றன. உண்மையில், இந்தப் பிரிவினை செயற்கையானது எனக் கருதும் விதத்தில் இந்த செயலாக்கங்கள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, இடர் மேலாண்மை செயலாக்கம் BCP க்கான முக்கியமான உள்ளீடுகளை (சொத்துகள், தாக்க மதிப்பீடுகள், செலவு மதிப்பீடுகள்) உருவாக்குகிறது. இடர் மேலாண்மை கண்டறியப்பட்ட இடர்களுக்கான பயன்படுத்தத்தக்க கட்டுப்பாடுகளையும் முன்மொழிகிறது. ஆகவே, இடர் மேலாண்மை BCP செயலாக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சில பகுதிகளையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. இருப்பினும், BCP செயலாக்கமானது இடர் மேலாண்மையின் முன் தடுப்பு அணுகுமுறைக்கும் அப்பால் சென்று, பேரழிவானது ஏதேனும் ஒரு புள்ளியில் உணரப்படக் கூடும் என்ற கருத்து முன்னம்பிக்கையில் நகர்கிறது.

இடர் தககவல்தொடர்பு[தொகு]

இடர் தகவல்தொடர்பு என்பது சிக்கலான துறைகள் பலவற்றுடன் தொடர்புடைய கல்வித் துறையாக உள்ளது. இடர் தகவல்தொடர்புக்கான சிக்கல்களில், நோக்கத்தில் உள்ள நேயர்களை எவ்வாறு அடைவது, இடர்களை பிற இடர்களுடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் தொடர்புடையனவாகவும் எவ்வாறு மாற்றுவது, இடர் தொடர்பான நேயர்களின் மதிப்புமிக்க பதில்களுக்கு சரியான மரியாதையை எவ்வாறு வழங்குவது, தகவல்தொடர்புக்கான நேயர்களின் பதில்களை எவ்வாறு முன்கணிப்பது போன்ற பல அம்சங்கள் அடங்குகின்றன. ஒன்றிணைந்த அல்லது தனிநபரின் முடிவெடுத்தல் செயலினை மேம்படுத்துவது என்பது இடர் தகவல்தொடர்பின் ஒரு முக்கியக் குறிக்கோளாகும். இடர் தகவல்தொடர்பு என்பது சிக்கல் தகவல்தொடர்புடன் ஓரளவு தொடர்புடையதாக உள்ளது.

இடர் தகவல்தொடர்பின் நடைமுறைப் பயிற்சிக்கான முக்கியமான ஏழு விதிகள்[தொகு]

(முதலில் இது அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை மற்றும் அந்தத் துறையின் பல பிற நிறுவுநர்களினால் வெளியிடப்பட்டது)

  • பொதுமக்களை சட்டப்பூர்வமான கூட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளவும் ஈடுபடுத்தவும் வேண்டும்.
  • உங்கள் சிரத்தைகளை கவனமாக திட்டமிடவும் மதிப்பீடு செய்யவும் வேண்டும்.
  • பொதுமக்களின் குறிப்பிட்ட சிக்கல்களுக்கு கவனமளிக்க வேண்டும்.
  • நேர்மையாகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருக்க வேண்டும்.
  • பிற நம்பகமான மூலங்களுடன் கூட்டிணைந்தும் சேர்ந்தும் செயல்பட வேண்டும்.
  • ஊடகத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தெளிவாகவும் பணிவாகவும் பேச வேண்டும்.

மூலம்: செவன் கார்டினல் ரூல்ஸ் ஆஃப் ரிஸ்க் கம்யூனிகேஷன். பேம்ப்ளெட் வின்செண்ட் டி. கோவெல்லோ மற்றும் ஃப்ரெட்ரிக் எச். ஆலன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, வாஷிங்டன், DC, ஏப்ரல்1988, OPA-87-020.

மேலும் காண்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. 1.0 1.1 டக்லஸ் ஹப்பார்டு "த ஃபெயிலியர் அஃப் ரிஸ்க் மேனேஜ்மெண்ட்: ஒய் இட்ஸ் ப்ரோக்கென் அண்ட் ஹௌ டு ஃபிக்ஸ் இட்" பக்கம். 46, ஜான் வில்லி & சன்ஸ், 2009
  2. 2.0 2.1 ISO/IEC Guide 73:2009 (2009). Risk management — Vocabulary. International Organization for Standardization. http://www.iso.org/iso/iso_catalogue/catalogue_ics/catalogue_detail_ics.htm?csnumber=44651. 
  3. 3.0 3.1 ISO/DIS 31000 (2009). Risk management — Principles and guidelines on implementation. International Organization for Standardization. http://www.iso.org/iso/iso_catalogue/catalogue_tc/catalogue_detail.htm?csnumber=43170. 
  4. "Committee Draft of ISO 31000 Risk management" (PDF). International Organization for Standardization இம் மூலத்தில் இருந்து 2009-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090325160441/http://www.nsai.ie/uploads/file/N047_Committee_Draft_of_ISO_31000.pdf. 
  5. டிஸாஸ்டர் ரிகவரி ஜர்னல்
  6. Dorfman, Mark S. (2007). Introduction to Risk Management and Insurance (9th Edition). Englewood Cliffs, N.J: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-224227-3. 
  7. ரோஹெரிங், பி (2006) பெட் ஆன் கவர்னென்ஸ் டு மேனேஜ் அவுட்சோர்சிங் ரிஸ்க் பரணிடப்பட்டது 2018-09-01 at the வந்தவழி இயந்திரம். பிசினஸ் ட்ரெண்ட்ஸ் குவார்டெர்லி

கூடுதல் வாசிப்பு[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Risk management
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இடர்_மேலாண்மை&oldid=3915054" இலிருந்து மீள்விக்கப்பட்டது