விஜய் ஆம்ஸ்ட்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் ஆம்ஸ்ட்ராங் (born January 2, 1976) இந்தியத் திரைத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார்.

விஜய் ஆம்ஸ்ட்ராங்
பிறப்பு விஜய் ஆம்ஸ்ட்ராங்

ஜனவரி 2, 1976 (age 37) தேவதானம்பேட்டை, தமிழகம், இந்தியா

வாழ் நகரம் சென்னை, இந்தியா
தொழில் ஒளிப்பதிவாளர்
பணிக்காலம் 2002 -லிருந்து

வாழ்க்கைக் குறிப்பும், தொழிலும்[தொகு]

விஜய் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில், தேவதானம்பேட்டை எனும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே புகைப்படக்கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 2000 ஆம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்புப் படித்து முடித்தவர், முன்னதாக விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு புகைப்பட நிருபராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, ஒளிப்பதிவுத்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக 2002 ஆம் ஆண்டு முதல் விளம்பரத்துறையிலும், தமிழ்த் திரைத்துறையிலும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்கினார். பி. கண்ணன், சி. ஜே. ராஜ்குமார், துவாரகநாத், சித்தார்த் போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளராக இருந்தவர் 2009ல் ராஜேஷ் லிங்கம் இயக்கிய ‘புகைப்படம்’ எனும் திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளரானார்.

வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், அவரது வலைத்தளத்தில் சினிமா குறித்த அறிமுகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது, டிஜிட்டல் சினிமா குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இவரது சினிமா சார்ந்த கட்டுரைகள் தமிழர் கண்ணோட்டம் போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

தற்போதைய படங்கள்[தொகு]

புகைப்படத்தைத் தொடர்ந்து நந்தா பெரியசாமி இயக்கிய, ‘மாத்தி யோசி’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவ்விரண்டு படங்களும் ஒளிப்பதிவுக்காக, விமர்சகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றன. விரைவில் வெளியாகவிருக்கிற ஒண்டிப்புலி என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது கேபிள் சங்கர் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்ற படத்துக்கும், சார்லஸ் இயக்கத்தில் 'அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார்.

பணியாற்றிய படங்கள்[தொகு]

வருடம் படத்தின் பெயர் இயக்குநர் பணி குறிப்பு
2009 புகைப்படம் ராஜேஷ் லிங்கம் ஒளிப்பதிவாளர்
2010 மாத்தி யோசி நந்தா பெரியசாமி ஒளிப்பதிவாளர்
2013 அழகு குட்டி செல்லம் சார்லஸ் ஒளிப்பதிவாளர் பிற்தயாரிப்புப் பணியில்
2014 ஒண்டிப்புலி ராஜகுரு ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பில்
2014 தொட்டால் தொடரும் கேபிள் சங்கர் ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பில்

குறும்படங்களும் ஆவணப்படங்களும்[தொகு]

•‘செடியும் சிறுமியும்’- எடிட்டர் பி.லெனின் இயக்கிய குறும்படம் •‘எண்ட்லெஸ் லவ்’- ஜானகி விஸ்வநாதன் இயக்கிய ஆங்கிலக் குறும்படம் •I.L.O (International Labor Organization) எனும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய ஆவணப்படம்

விமர்சனங்கள்[தொகு]

புகைப்படம்[தொகு]

"Vijay Armstrong's camera work is commendable" - The Hindu

"One facet that uplifts the movie in many places is the great cinematography and wonderful depiction of beautiful Kodaikanal" - Galatta சினிமா

"Technically, the film top-notches with colorful visuals offering a pleasant touch to film’s ambience" - "What Works: Second half, Cinematography" - Top 10 Cinema

"Vijay Amstrong's camera captures Kodaikanal as pleasing as it could be" - IndiaGlitz

"விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு கொடைக்கானல் குளிரை அள்ளித் தெளிக்கிறது" - தமிழ் கூடல்.com

"Vijay Armstrong's lens beautifully captures the scenic beauty of Kodaikanal" - DC

"The camera has been handled very well, capturing the scenic beauty of the landscape" -Behing Woods

"Cinematography was top notch" - Bharatstudent.com

"Vijay Amstrong's camera captures Kodaikanal as pleasing as it could be" - IndiaGlitz

மாத்தியோசி[தொகு]

"Cinematographer Vijay Armstrong indulges in an interesting interplay of dark and light tones" - The Hindu

"கரடுமுரடான காடுமேடுகளில் தானும் ஒரு கதாப்பாத்திரமாக அலைஞ்சிருக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிராமத்தினுடைய அடர்ந்த வெளிகளிலும் நிரந்தரமாக பதிஞ்சுகிடக்கிற வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்" - Sun TV

"ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும் சரி சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-கிடம் இருக்கிறது" - ஹாசினி பேசும் படம்

மேற்கோள்[தொகு]

1.http://www.bharatstudent.com/cafebharat/movie_reviews_2-Tamil-Pugaipadam-Movie-Review-3,1021.php (Cinematography was top notch.)

2.http://www.indiaglitz.com/channels/tamil/moviegallery/11971.html

3.http://www.indiaglitz.com/channels/tamil/review/11971.html

4. http://entertainment.oneindia.in/tamil/movies/pugaipadam.html[தொடர்பிழந்த இணைப்பு]

5. http://www.tamiltwist.com/2010/03/pugaipadam-tamil-movie.html பரணிடப்பட்டது 2014-01-14 at the வந்தவழி இயந்திரம்

6. http://movies.sulekha.com/pugaipadam_tamil_movie.htm

7. http://spicyonion.com/movie/pugaipadam/

8. http://chennaionline.com/film/PhotoFeature/June09/Pugaipadam-gallery.aspx?page=1 பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம்

9. http://www.southdreamz.com/10028/pugaipadam-movie-preview-a-film-with-lot-of-newcomers/

10. http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-04/pugaipadam-27-05-08.html

11. http://www.indiaglitz.com/channels/tamil/moviegallery/11034.html

12. http://entertainment.oneindia.in/tamil/reviews/2010/mathiyosi-movie-review-170310.html பரணிடப்பட்டது 2013-12-21 at the வந்தவழி இயந்திரம்

13. http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/maathi-yosi-shammu.html

14. http://www.vijayarmstrong.com/content/profile.pdf பரணிடப்பட்டது 2014-01-02 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

இணைய தளம் வலைப்பூ

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_ஆம்ஸ்ட்ராங்&oldid=3591919" இலிருந்து மீள்விக்கப்பட்டது