யோவான் மத்சாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோவான் மத்சாக்கர், டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் நாயகம். யாக்கூப் யான்சு கூமன் வரைந்த ஓவியம்

யோவான் மத்சாக்கர் (Joan Maetsuycker) (1606 அக்டோபர் 14 அம்சுட்டர்டாம் - 1678 சனவரி 24 பத்தாவியா) 1653 ஆன் ஆண்டு முதல் 1678 ஆம் ஆண்டு வரை டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் நாயகமாகப் பதவியில் இருந்தார். மத்சாக்கர் லேவன் நகரில் சட்டம் படித்து முதலில் ஹேக் நகரத்திலும் பின்னர் அம்சுட்டர்டாமிலும் சட்ட வல்லுனராகப் பணியாற்றினார். 1636 ஆம் ஆண்டிலிருந்து இவர் டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளில் வாழ்ந்தார். 1646 ஆம் ஆண்டில் இவர் அக் காலத்தில் சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையின் ஆளுனர் நாயகமானார். இப்பதவியை ஏழு ஆண்டுகள் வகித்த பின்னர், 1653 ஆம் ஆண்டில் டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் நாயகமாக உயர்ந்தார். 25 ஆண்டுகள் இப்பதவியில் இருந்து, மிகக் கூடிய காலம் இப் பதவியில் இருந்தவர் என்ற பெயரையும் பெற்றார். இவர் காலத்திலேயே இலங்கையின் போத்துக்கேயரிடம் இருந்த பகுதிகள் முழுவதும் ஒல்லாந்தர் வசமாகின (1658). இந்தியாவின் "கோரமண்டல்" கரை (1658), மலபார் (1663) என்பவற்றையும் ஒல்லாந்தர் கைப்பற்றினர். சுமாத்திராவின் மேற்குக் கரையையும் கைப்பற்றியதுடன், சாவகத் தீவின் உட்பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கிலான முதலாவது படையெடுப்பும் இடம்பெற்றது.

அரசு பதவிகள்
முன்னர்
காரெல் ரெனியர்சு
டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் நாயகம்
1653–1678
பின்னர்
ரிக்லாவ் வொன் கூன்சு
அரசு பதவிகள்
முன்னர்
யான் தைசென்சு பயார்ட்
இலங்கையின் ஆளுனர் நாயகம்
1646–1650
பின்னர்
யாக்கூப் வொன் கிட்டன்ஸ்டேன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவான்_மத்சாக்கர்&oldid=3118432" இலிருந்து மீள்விக்கப்பட்டது