பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்க அறிமுகம்[தொகு]

வணக்கம் சூர்ய பிரகாசு. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சூர்ய பிரகாசு பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 20:34, 17 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
கண்டிப்பாகத் தருகிறேன் அண்ணா!

/*தனிக் கோரிக்கை*/ (Personal Request) ஒரு மிகப்பெரிய அமைப்பின் முகப்புப் பக்கத்தில் இச்சிறுவனைப் பற்றிய தகவல்கள் இடம்பெறப் போகிறது என்பதை எண்ணி என் உள்ளம் பூரிப்படைகிறது. என்னை இதற்குத் தேர்ந்தெடுத்ததற்கு முதலில் நன்றி. வெளியிட்ட பின் என் நண்பர்களுக்குக் கூற வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அதனால் வெளியிட்ட பின் எனக்கொரு மின்னஞ்சல் தட்டி விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் அண்ணா!

உங்கள் அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:01, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வணக்கம், சூர்ய பிரகாசு. விக்கி மாரத்தான் அன்று உங்களைப் போன்றவர்களைச் சந்தித்தது தமிழ் விக்கியின் எதிர்காலம் பற்றி மிகுந்த நம்பிக்கையை அளித்தது. தொடர்ந்து ஊக்கத்துடன் பங்களிப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். நாங்கள் படித்தபோது (2003) அழகப்பா கல்லூரியில் வளர்தமிழ் என்று ஒரு தமிழ் மன்றம் இருக்கும். இப்போது அண்ணா பல்கலையில் அத்தகைய மன்றங்கள் உயிர்ப்புடன் இருந்தால், நீங்கள் தமிழ் விக்கி பற்றி அறிமுகப்படுத்தலாம். அல்லது, ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சேர்ந்து அத்தகைய மன்றத்தை உருவாக்கலாம்.

உங்கள் அறிமுகத்தைச் சற்றுத் திருத்தி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளேன். ஓரிரு மாதத்தில் முதற்பக்கத்தில் வரும். அப்போது உங்கள் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கிறோம். அப்புறம், தமிழ் விக்கியில் அனைவரும் தோழர்களே. எனவே, அனைவரையும் பெயர் சொல்லி உரிமையுடன் அழைத்துப் பணியாற்றலாம். நன்றி--இரவி 18:50, 21 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களைப் பற்றிய அறிமுகத்தை, அடுத்த இரு வாரங்களுக்கு முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம்.--இரவி 04:01, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்!!--மணியன் 04:56, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
எனது வாழ்த்துக்களும்..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:22, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் நன்றி!
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 09:24, 17 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

குருத்தணு கட்டுரை[தொகு]

குருத்தணு கட்டுரையில் மேற்கோள்களை நீக்கியிருந்தீர்கள். அவை மேற்கோளில் தெரியாமைக்கு காரணம் அதற்குரிய வார்ப்புரு சேர்க்கப்படாமையே. அதனை சேர்க்க முன்னர் நீங்கள் மேற்கோள்களை நீக்கி விட்டீர்கள் :). மேற்கோள்களை கட்டுரையிலிருந்து நீக்காமல், அவை கட்டுரையில் தெரிவதற்கான வார்ப்புருவை நீங்களேகூட அங்கே சேர்த்து விடலாம்.--கலை 13:38, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பொருத்தருளவும். அதனை இச்சிறுவன் அறிகிலன். எனவே தாங்கள் அதற்கான முயற்சி எடுப்பின் யான் மகிழ்வேன். இப்படிக்கு உங்கள் அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 13:42, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் கட்டுரையில் இணைத்திருந்தால், அவை கீழே காட்டப்படுவதற்கு, இணைக்கப்பட வேண்டிய வார்ப்புரு {{reflist}} என்பதாகும். எனவே கட்டுரையின் முடிவில், ==மேற்கோள்கள்== என்று போட்டுவிட்டு, அதன் கீழே {{reflist}} என்ற வார்ப்புருவை போட்டீர்கள் என்றால், மேற்கோள்கள் தாமாக இணைக்கப்பட்டு விடும். ஒரு கட்டுரையில் தொகுவில் போய்ப் பார்த்தால் எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். --கலை 14:32, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்[தொகு]

சூர்யா, புதுப்பயனர் வார்ப்புருவை பயனர் பேச்சுப்பக்கத்தில் இட்டால் மட்டும் போதும் பயனர் பக்கத்தில் இட வேண்டாம். ஒருவரின் பயனர் பக்கத்தில் பிறர் தொகுப்பதில்லை என்பது ஒரு மரபு.

மேலும், என்னைப்பற்றி விக்கியர் சந்திப்பில் பேசினீர்களா? என்ன பேசினீர்கள். இவனை பிடித்து உதைக்க வேண்டுமென்று யாரும் சொல்லவில்லையே :-). அண்ணா பல்கலைகழகத்தில் படிக்கிறீர்கள் என்று உங்கள் பயனர் பக்கத்தில் பார்த்தேன். என்கே கிண்டியிலா?--சோடாபாட்டில் 13:15, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆமாம்! நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்து வருகிறேன். இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் வழிப் பொறியியலில் இயந்திரவியல் துறை தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறேன். நீங்கள் செங்கைப் பொதுவன் ஐயா தட்டச்சு செய்து வைத்திருந்த புலவர்களின் பெயர்களை அகர வரிசையில் அடுக்கியதைக் குறித்து அவர் கூறினார். மேலும் இரவி சங்கர் அண்ணன் நீங்கள் 'பனகல் அரசர்' போன்ற தனித்தன்மை (Unique) வாய்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறீர் என்று கூறினார்.
நான் எழுதியுள்ள கட்டுரைகளை நீங்கள் படித்ததுண்டா அண்ணா?

--சூர்ய பிரகாசு.ச.அ. 13:28, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

முதலில் ஒரு வேண்டுகோள். என்னை அண்ணா என வேண்டாம். (அதற்காக மாமா/தாத்தா என்று நக்கலடிக்கக் கூடாது :-)) பெயர் சொல்லியே அழையுங்கள். ஏன்னா நாங்களும் யூத்து தான் :-). இன்னும் முதல் செம் தானே? எந்த பாட்ச்சில் இருக்கிறீர்கள்? நானும் சி ஈ. ஜி தான். 2002 இல் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறையில் குப்பை கொட்டி.. er.. படித்து முடித்தேன். நீங்கள் எழுதியுள்ள கணிணியல் கட்டுரைகளை படித்துள்ளேன் (புரிந்த வரை, நான் முன்னாள் நிரலெழுதி, இப்போது துறையில் இல்லை.) எனக்குப் புரிந்த வரை நன்றாக எழுதிவருகிறீர்கள் கடினமான துறைசார் தொடர்களை இலகு தமிழில் எழுதி வருவது மிக நன்று.
பனகல் அரசர் கட்டுரை என் சொந்த சரக்கன்று மொழிபெயர்ப்பு. தேவையான ஆய்வைச் செய்து, ஆங்கில விக்கியில் எழுதியவர் ரவிசந்தர் (சந்திப்பில் அவரும் இருந்தார் என்று நினைக்கிறேன்). நான் செய்தது மொழிபெயர்ப்பு மட்டும். ரவி ஆ. விக்கியில் 19ம் 20ம் நூற்றாண்டு தமிழக வரலாறைப் பற்றி நூற்றுக்கணக்கில் கட்டுரைகள் எழுதிக் குவித்துள்ளார். அவற்றுள் சில பத்துக்கள் மட்டும் நான் தமிழாக்கம் செய்துள்ளேன்.

--சோடாபாட்டில் 13:40, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சரி சோடாபாட்டில். நான் Q-பிரிவு. (புதிதாக எங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டதென நினைக்கிறேன்). "இலகு தமிழில் கலைச்சொல்லாக்கம் இருந்தால்தான் அச்சொல் நிலைக்கும்!" என்ற பேராசிரியர் திரு. மா. நன்னன் அவர்களின் கூற்றை ஒப்புபவன் நான்.

//உங்கள் மெய்ப்பெயர் யாதோ?  :) :) :)

பாராட்டுகள்[தொகு]

//நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்து வருகிறேன். இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் வழிப் பொறியியலில் இயந்திரவியல் துறை தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறேன்.// என்று நீங்கள் குறிப்பிட்டதைக் கண்டு நான் மிக மிக மகிழ்ந்தேன். டிரான்சிசிட்டர் (இதனை நாங்கள் திரிதடையம் என்கிறோம்) முதன் நானோ தொழில்நுட்பம் வரை அனைத்தையும் நல்ல தமிழில் மிக ஆழப் பயிலலாம். வேண்டிய உதவிகள் செய்ய அணியமாக உள்ளேன். ஆங்கிலமும், பிற வளர்ந்த மொழிகளும் நமக்கு எதிரிகள் அல்ல, நம் நெருங்கிய நண்பர்கள். இருமொழிப் புலமை மும்மொழி புலமை என்று இருப்பது மிகவும் நல்லதே, ஆனால் கல்வி என்பது தம் தாய்மொழியில் இருப்பதே நல்லது (எல்லா நிலைகளிலும்). இது என் தனிக்கருத்தே ஆயினும், பொதுவாக பல அறிஞர்களும் ஒப்பும் கருத்து. நீங்கள் சொல்வதைக் கேட்டு நாளையே கிண்டி பொறியியல் கல்லூரியில் வந்து பாடம் நடத்த வேண்டும் என்னும் துடிப்பு ஏற்படுகின்றது :) உங்கள் கூற்று என் வாழ்நாளைக் கூட்டியது போலவே உணர்கிறேன்! எத்தனை மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் தமிழ்வழி பயில்கிறார்கள் என்று தெரிந்தால் எழுதுங்கள். மாணவராகிய நீங்கள் எழுதிய கட்டுரைகள் எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கின்றது!! வாழ்க! --செல்வா 15:06, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சூர்ய பிரகாசு, உங்கள் அறிமுகம் வழியாகவே தமிழில் பொறியியற் படிப்புக்கு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு குறித்து அறிந்தேன். மகிழ்ச்சி. செல்வா கேட்டுக்கொண்டது போல தமிழ்வழிக் கல்வி குறித்து மேலும் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கட்டுரைகள் சிலவற்றை மட்டுமே பார்த்திருக்கிறேன். நன்றாக, நல்ல கலைச்சொற்களோடு ஆக்கி இருக்கிறீர்கள். தொடர்ந்து பார்ப்பேன். வாழ்த்துக்கள். --இரா. செல்வராசு 00:48, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் தமிழ் வழி இயந்திரவியல் பொறியியல் படிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:09, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றி திரு. செல்வா அவர்களே! நான் எம்மொழியையும் எதிரியாகக் கருதியது இல்லை! ஆனால் தமிழ் தான் அனைத்தினும் சிறந்தது என்ற ஒரு உயர்வு மனப்பான்மை (Superiority Complex) உடையவன். என் கட்டுரைகளில் ஒரு வித தமிழ்த் திணிப்பு இருப்பதை நானே உணர்வேன். அதற்கு என் மனப்பாங்கே காரணம். நான் தமிழ் வழிப் பொறியியல் தேர்ந்தெடுத்ததற்கும் அம்மனப்பாங்கே காரணம்.

இப்படிக்கு உங்கள் அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 09:57, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியில் தமிழில் கட்டுரை எழுதுவது, நிச்சியம் தமிழ் திணிப்பு இல்லை. எமது மொழியை நாம் பேசினால், பயன்படுத்திலால், அதை தமிழ் மொழி திணிப்பு, மொழி வெறி என்று பச்சைகுத்தும் நிலைமை தமிழ்நாட்டில் இருப்பது கண்டு வருத்தம்.
மொழியே உயிர், முதலாவது.
முடிவாவது அதுவே.
முடியாது-
அதை விடவா
சமர் முரசே அறை தமிழா
விழியே மொழி
ஒரு போதிலும்
மிதிகாலிடல் சகியோம்

- முருகையன்

--Natkeeran 05:37, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பாராட்டு + உதவி[தொகு]

உங்களை சென்னை சந்திப்பில் பார்க்காமல் விட்டுவிட்டேன். உங்கள் FLOPS கட்டுரையை படித்தேன், சிறப்பாக எழுதியிருந்தீர்கள். சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி மாதம் ஒரு நாள் மாணவர்களுக்கு விக்கிப் பட்டறை நடத்தக்கோரி எனக்கு ஓர் அழைப்பு வந்துது. அதில் நீங்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.(மாணவர்களுக்கு மாணவரே சொல்லிக்கொடுத்தால் அது ஒரு உற்சாகத்தை அளிக்கும்). மேலும் விவரங்கள் தெரிய வர ஆலமரத்தடியில் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. ஸ்ரீகாந்த் 08:36, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

என்னால் முடிந்த வரை கலந்து கொள்ளப் பார்க்கிறேன். உங்கள் அழைப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 07:40, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

புதுப் பயனர்களை வரவேற்றல்[தொகு]

புதுப் பயனர்களை வரவேற்க நீங்கள் முழு பந்தியையும் ஒத்தி ஒட்டுவதைக் கண்டேன். இதற்குப் பதிலேக வெறும் வார்ப்புருவை இடுவதனால் இந்த செயலை இலகுவாக நிறைவேற்றலாம்.

பின்வரும் வார்ப்புருவைப் பயனபடுத்தவும். {{newuser}}

நிருவாகத்தில் உதவி செய்வதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். விக்கியை வளர்ப்போம். நன்றி --ஜெ.மயூரேசன் 10:35, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நான் நகலெடுத்து ஒட்டவில்லை! (ஒத்தி ஒட்டல்) {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவைத்தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் தங்கள் சுட்டலுக்கு நன்றி.
ஐயா நான் எழுதிய கட்டுரைகளைப் நீவிர் படித்ததுண்டோ? எனது பயனர் பக்கத்தில் நான் எழுதிய கட்டுரைகள் உள! படித்துப் பார்த்து கருத்து கூறவும் ஐயா!

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 10:53, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சூரியப்பிரகாசு, புதுப் பயனர்களை வரவேற்பதற்கு {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துவதே முறையானது.--Kanags \உரையாடுக 10:55, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
நான் அதைத் தான் பயன்படுத்துகிறேன். ஆனால் திரு. மயூரேசன் {{newuser}} இவ்வார்ப்புருவைக் கூறுகிறார்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 11:02, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

அதாவது, விக்கிநடை தெரியாத ஒருவர் பயனராக இணையும் போது {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவையும், விக்கிநடை தெரிந்த ஒருவர் (எ-கா: ஆங்கில விக்கியின் பயனர் ஒருவர் தமிழ் விக்கியில் புதிய கணக்குத் தொடங்கும் போது) வெறுமனே {{புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.--Kanags \உரையாடுக 11:40, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஒரே வார்ப்புருவை பல பக்கங்களில் இட்டால் தள வழங்கிக்குச் சுமை ஏற்படலாம் என்பதால், முன்பு, subst சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டது. இப்போது இது தேவையில்லை என்று நினைக்கிறேன் (உறுதிப்படுத்த வேண்டும்). மற்றபடி, பயனர் எங்கிருந்து வருகிறார், விக்கிக்குறி புரியுமா இல்லையா என்பதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை--இரவி 13:46, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சூரியப் பிரகாசு. இரவி உறுதிப் படுத்தட்டும். நான் தொடரந்தும் {{புதுப்பயனர்}} வார்ப்புருவையே பயன்படுத்தி வந்தேன். --ஜெ.மயூரேசன் 04:58, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

படம்[தொகு]

முதல்பக்கத்தில் கட்டுரையை இட படம் கட்டாயமாக வேண்டும். தியான்கெ -1 க்கு படம் ஒன்றைச் சேருங்கள்--சோடாபாட்டில் 11:54, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தியான்கே-1 -க்கான படங்கள் அனைத்து காப்புரிமை உடையவை. எம்மொழி விக்கியிலும் அக்கட்டுரைக்குப் படம் இல்லை. எனவேதான் நானும் சேர்க்கவில்லை. மொத்தமே அக்கணினியின் படங்கள் கூகுளில் 50க்கும் குறைவாகத்தான் சிக்கின. அவற்றிலும் அக்கணினி குறித்த படங்கள் 5 மட்டுமே. அவ்வைந்தும் ஒரு இணைய தளத்திற்கு உரியன. அவ்விணையதளத்தின் அடியில் "இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள படங்களும் நிகழ்படங்களும் காப்புரிமை உடையவை (Reserved)" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரை அண்மைய அறிவியலை விளக்குவதாய் உள்ளதால்தான் சேர்த்தேன். தமிழ் விக்கிக்கு வருவோர் முதற்பக்கத்தில் அதுபோன்ற தொழில்நுட்பக் கட்டுரைகளைக் காணும்போது வியப்படைவர். (அக்கட்டுரையில் கலைச் சொற்களும் அதிகம்) எனவேதான் சேர்த்தேன்.
இறுதி முடிவு உங்களுடையது.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:14, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

tough luck :-). முதற்பக்க கட்டுரை யெனில் படம் கட்டாயம் வேண்டும். பொறுத்துப் பார்போம், ஓரிரு வருடங்களுள் ஏதேனும் தொழில்நுட்ப பத்திரிக்கையில் படம் சிக்கக் கூடும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அமைப்புக்கு எழுதிக் கேளுங்களேன். கிடைத்தாலும் கிடைக்கும்.--சோடாபாட்டில் 12:19, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:32, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

படம் சேர்த்துள்ளேன். பார்க்கவும்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 17:11, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பிரீஜா[தொகு]

பிரீஜா படம்? சொந்த ஆக்கம் என்று உள்ளதே. எப்போது பீஜிங் போனீங்க. :-). மேலும் வாழும் மாந்தரின் படங்களை நியாயப் பயன்பாட்டில் பயன்படுத்த முடியாது (அமெரிக்கக் காப்புரிமைச் சட்டம் அனுமதிக்காது, விக்கிமீடியா அமெரிக்காவில் உள்ளதால், இங்கும் பயன்படுத்த முடியாது). அதனை நீக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில் 06:27, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்[தொகு]

உங்கள் கட்டுரை தியான்கே-1 இப்பொழுது சில நாட்களாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து பாராட்டுகிறேன். தொடர்ந்து நல்லாக்கங்கள் நல்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 18:21, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா!
அன்பு விக்கியன் -- --சூர்ய பிரகாசு.ச.அ. 09:39, 13 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]