பண்ணை (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகளிர் நீரில் பாயும் விளையாட்டுக்குப் பண்ணை என்று பெயர்.

சங்க காலத்தில் ஆற்றங்கரையிலிருந்து மருத மரத்தில் ஏறி ஒருத்தி பண்ணை பாய்ந்தாளாம்.
அது வானத்திலிருந்து நிலத்துக்கு மயில் தன் தோகையை விரித்துக்கொண்டு இறங்குவது போல இருந்ததாம்.
அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயிலின் தோகையிலிருந்த வண்ணப்புள்ளிகள் போல நிழலொளி தந்தனவாம்.[1]

மரந்தை என்னும் ஊரில் சங்க கால மகளிர் கடலில் பாய்ந்து விளையாடினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த பூக்கள் கடலலையில் மிதந்துவந்தன. [2]

கம்பர் காட்டும் பண்ணை விளையாட்டு[தொகு]

இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும் மிதிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மகளிர் பந்து, பண்ணை ஆகிய விளையாட்டுகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே சென்றனர் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

பண்ணை என்பது மகளிர் ஆடும் ஒருவகை விளையாட்டு. பண்ணை ஆடும் மகளிர் கையில் கடகம், காதில் குழை, முலையில் பூண், மார்பில் ஆரம், இடையில் நூலாடை, அதனைக் கட்டும் வடகம் என்னும் ஒட்டியாணம் ஆகியவற்றை அணிந்திருப்பர். யாழிசை எழுப்புவோரின் பண்ணிசைக்கு ஏற்ப, பளிங்கால் ஆன சூதாட்ட நாய்க் கற்களைப் பந்தாடுவது போல் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுவர். உள்ளங்கையில் நாய்க்கல் இருக்கும்போது அது சிவப்பாகத் தோன்றும். இப்படி விளையாடுவோரைப் பார்த்துக்கொண்டே மூவரும் மிதிலை நகரத் தெருவில் சென்றனர். [3]

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1.  
    விசும்பிழி தோகை சீர் போன்றிசினே
    பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
    கரைசேர் மருதம் ஏறிப்
    பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே – ஐங்குறுநூறு 74.

  2.  
    ஓங்கற் புணரி பாய்தாடு மகளிர்
    அணிந்திடு பல்பூ மரீஇ ... கடல்கெழு மரந்தை – நற்றிணை 395

  3.  கடகமும், குழையும், பூணும், ஆரமும், கலிங்க நுண் நூல்
    வடகமும், மகர யாழும் வட்டினி கொடுத்து, வாசத்
    தொடையல் அம் கோதை சோர, பளிக்கு நாய் சிவப்பத் தொட்டு;
    படை நெடுங் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார். (1. பாலகாண்டம் 10. மிதிலைக் காட்சிப் படலம் 17)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணை_(விளையாட்டு)&oldid=3208488" இலிருந்து மீள்விக்கப்பட்டது