ஊர்ப்பெயர் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவாக ஊர்ப்பெயர்களின் அமைப்பு ஒரு ஒழுங்கு முறையில் இருப்பதை அவதானிக்கலாம். பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளன (எ.கா: மாமல்ல-புரம், மட்டக்-களப்பு). சென்னை, மாந்தை, முசிரி போன்று ஒற்றைச் சொல்லிலான ஊர்ப்பெயர்களும் உள்ளன. இரண்டு பகுதிகளைக் கொண்ட ஊர்ப்பெயர்களில், இறுதியில் வருவது பொதுக் கூறு எனவும், மற்றப்பகுதி சிறப்புக் கூறு எனவும் குறிப்பிடப்படுகின்றது. பொதுக்கூறு, குளம், மலை, ஆறு, பட்டி, பேட்டை, வலசு, பாளையம், பட்டினம், ஊர் என்பன போன்ற பொதுவான இடப்பெயர்களாகும். இப் பொதுக் கூறுகள் ஏராளமான இடப்பெயர்களிலே அமைந்திருக்கின்றன. இப் பகுதி ஊர்களின் பொதுப் பண்பைக் குறிக்கப் பயன்படுகிறது எனலாம். முதற்பகுதியான சிறப்புக்கூறு, இறுதியில் வரும் பொதுக் கூறுகளுக்கு அடைமொழியாக வருவதைக் காணலாம். இவை பொதுவான இடப்பெயர்களுக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன எனலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • சக்திவேல், சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்ப்பெயர்_அமைப்பு&oldid=2740716" இலிருந்து மீள்விக்கப்பட்டது