மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை
அமைவிடம்
சியம்பலாகஸ்கொட்டுவ,
இலங்கை
அமைவிடம்7.4923242, 80.1902282
தகவல்
வகைஇரு பாலார் பயிலும் பள்ளி
தொடக்கம்1954 சனவரி 5
பள்ளி மாவட்டம்குருநாகல் மாவட்டம்
கல்வி ஆணையம்இலங்கை கல்வி அமைச்சு
தலைமை ஆசிரியர்திரு. எம்.ஆர்.எம்.பாயிஸ்
தரங்கள்தரம் 1 முதல் 13 வரை
மாணவர்கள்சுமார் 2000

மதீனா தேசிய பாடசாலை (Madeena National School, Siyambalagaskotuwa) இலங்கை வடமேற்கு மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில், கிரியுள்ள வலயத்தில், நாரம்மல வாரியபொல பிரதான பாதையில் சியம்பலாகஸ்கொடுவை எனும் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலையாகும். இது, 1954 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலையாகும். அறுபது வருட குறுகிய கால வரலாற்றில் சகல வசதிகளையும் கொண்ட ஒரு தேசியப் பாடசாலையாக இது பரிணமித்துள்ளது. சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 140 க்கும் மேலான ஆசிரியர் குழாத்தையும் கொண்ட ஒரு கல்விக் கூடமாகத் திகழ்கிறது.

வரலாறு[தொகு]

60 வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் பாடசாலை இல்லாத ஒரு குறைபாடு இருந்த நிலையில், 1953 ஆம் ஆண்டளவில் இப்பகுதி கிராம விதானையாகக் கடமை புரிந்த குரீக்கொட்டுவையைச் சேர்ந்த முகந்திரம் சுலைமா லெப்பை அவர்களின் ஆலோசனையின் பேரில் அம்மயன்குளம் ஹமீது லெப்பை விதானை, பறகஹகொடுவ ஏ. அலித்தம்பி, ஏ. இப்றா லெப்பை, சியம்பலாகஸ்கொடுவ ஏ. சாலியா லெப்பை, கஹடகஹமட ஏ. அஹமது லெப்பை, ஏ. அப்துல் ஹமீது, அல்ஹாஜ் எம். ஏ. அப்துல் சமது ஆகியோரின் முயற்சியின் பயனாக பள்ளிவாயிலுக்குச் சொந்தமான காணியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கட்டிடத்தில் எந்த வித வேதனங்களும் பெறாத தொண்டாசிரியர்களான எச்.எல்.யு.எம். ஜூனைத், ஏ.எல்.எம். சுலைமாலெப்பை ஆகிய இருவரையும் ஆசிரியர்களாகக் கொண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது[1].

அரசாங்கப் பாடசாலை[தொகு]

தண்டகமுவ நாடாளுமன்ற உறுப்பினர் ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொல்ல அவர்களின் முயற்சியினால் 1954 ஆம் ஆண்டு சனவரி 5 ஆம் திகதி 104 மாணவர்களுடன் ஆர். ஜோசப் அவர்களை முதல் அதிபராகக் கொண்டு அரசாங்கப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வந்த அதிபர்கள்[தொகு]

  • ஏ.என்.தங்கதுறை
  • டபிள்யு.டீ.ரொட்ரிகோ
  • என்.ஏ.சமத்
  • கே.ஏ.ரஸல்
  • எம்.எச்.எம்.மஃருப்
  • யு.எம்.எம்.அஸ்ரப்
  • எஸ்.ஐ.இசட்.ஆப்தீன்
  • ஜனாப் ஏ.மீராசாஹிப்
  • ஏ.எச்.எம்.மவ்சுர்
  • ஏ.கே.எம்.ஏ.ஸலாம்
  • எம்.சீ.ஆதம்புள்ள
  • எம்.எல்.எம்.இஸ்மாயில் (1992-2006)
  • எம்.ரி.எம்.மொதம்மிர் (2006-2009)
  • ஏ.எல்.எம்.மன்ஸூர் (2009-2010)
  • எம்.எல்.எம்.ஏ.சத்தார் (2010)
  • எம்.ஜே.எம்.மன்சூர் (2010-2014)
  • எம்.ஆர்.எம்.சக்கரிய்யா (2014-2020)
  • எம்.ஆர்.எம்.பாயிஸ் (2020.08.24-2021.10.24)
  • ஐ.அப்துர் ரஹ்மான் (2021.10.25-2022.09.29)
  • எம்.எஸ்.எஸ்.முனவ்வரா மேடம் (2022.09.20-2023.02.24)
  • எஸ்.எம்.ஹைதர் அலி (2023.02.24 ஆம் திகதியிலிருந்து)

முன்னேற்றப்படிகள்[தொகு]

  • சனவரி 2, 1961 ல் க.பொ.த. (சா.த) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 100X20 அளவிலான கட்டிடமும், ஆசிரியர் விடுதியும் அமைக்கப்பட்டது.
  • கல்வி, கலாசார அமைச்சராக இருந்த ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல அவகளின் காலத்தில் தற்போதைய விளையாட்டு மைதானம் அமைந்துள்ள 2 ஏக்கர் காணி நிலம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
  • சனவரி 1, 1971 ல் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான திரு ஜீ.டப்லியு. சமரசிங்ஹ அவர்களினால் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற நிலையில் இருந்து மதீனா மகா வித்தியாலயம் என்ற பெயரோடு மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 80X20 அளவிலான பாடசாலைக் கட்டிடமும் 30X20 அளவிலான விவசாயக் கூடமும் பெற்றுத்தரப்பட்டது. இதேகாலகட்டத்தில் பழைய மாணவர்களதும், அரச உத்தியோகத்தர்களதும் உதவியினால் 40X20 அளவிலான தொழிற்பயிற்சிக் கூடமும் 60X20 அளவிலான விஞ்ஞான கூடமும் அமைக்கப்பட்டது.
  • க.பொ.த. (உ.த) வகுப்புக்கள் 1972ல் ஆரம்பிக்கப்பட்டன.
  • 1979 ஆம் ஆண்டில் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியார் அவர்களினால் ஆண்கள் விடுதி கட்டிக் கொடுக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் அன்றைய கல்விச் சேவைகள் அமைச்சர் லயனல் ஜயதிலக அவர்களினால் 80X20 அளவிலான ஒரு கட்டிடமும் 70X60 அளவிலான நன்னீர் மீன் வளர்ப்புத் தடாகமும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் 80X20 அளவிலான இருமாடிக் கட்டிடமும், பெண் மாணவியரின் வசதி கருதி அப்பாஸ் அன்ட் கம்பனி உரிமையாளரான யு.எல்.எம். சசீப் அவர்களின் உதவியால் கட்டப்பட்ட மகளிர் விடுதி, பெற்றோரின் உதவியினால் ஏற்படுத்தப்பட்ட மனையியல் கூடமும், வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வுகூடம் என்பனவும் அமைக்கப்பட்டன.
  • சூலை 13 1992 இல் '1 சீ' தரத்தில் இருந்த இப்பாடசாலை '1 ஏபி' தரத்துக்கு தரம் உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
  • மே 18 1994ல் தேசியபாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
  • சூன் 15, 2001 ல் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவினால் கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டது. இக் கூடத்தில் சுமார் 1200 பார்வையாளர்கள் ஒன்றுகூடலாம்.
  • 2002 முதல் தரம் 6ல் இருந்து ஆங்கில மொழிமூலமான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன

பாட இணைச் செயற்பாடுகள்[தொகு]

  • தேசிய கடெட் பிரிவு
  • சாரணர் இயக்கம்
  • சென்ட் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ்
  • விஞ்ஞான ஒன்றியம்
  • மனித உரிமை கற்கை நெறி (கொழும்புப் பல்கலைக்கழகம்)
  • மதி நா சஞ்சிகை
  • வர்த்தக மன்றம்
  • தமிழ் மன்றம்
  • மாணவர் வழிகாட்டலும் ஆலோசனையும்
  • ஆங்கிலக் கழகம்

வளர்ச்சிப் போக்கு[தொகு]

  • 1997 ல் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 19 ன் கீழ் உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
  • 1998 ல் நடைபெற்ற மைலோ கிண்ணத்துக்கான போட்டித் தொடரில் வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களில் முதலிடம் பெற்றது.
  • துடுப்பாட்ட அணி குருநாகல் சென்ட் ஆன்ஸ், வயம்ப ரோயல், கேகாலை மகாநாம, மற்றும் பொல்கஹவெல சென் பெனடிக்ட் ஆகிய அணிகளைத் தோல்வியுறச் செய்து முதலாம் சுற்று செம்பியனாகத் தெரிவாகியது.
  • குளியாபிடிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றது.
  • அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம், ஆங்கில தினப் போட்டிகளில் பல வெற்றிகளைக் கண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]