கீரந்தையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீரந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரன் தந்தை என்னும் சொற்கள் சேர்ந்தால் கீரந்தை என அமையும் என்பது தொல்காப்பிய நெறி. திருமாலைப் போற்றும் பரிபாடல் ஒன்று மட்டும் இவர் பாடலாக உள்ளது. அது பரிபால் நூலில் 2ஆம் பாடல்.

பாடலில் காணப்படும் செய்தி[தொகு]

இந்தப் பாடலின் தொடக்கத்தில் அடிகள் சிதைந்துள்ளன.

திருமால் கேழல்(பன்றி) உருவில் தோன்றிய ஊழி முதல்வன் என்று குறிப்பிடும்போது ஊழிகளை இப்பாடல் பட்டியலிடுகிறது. 1 விசும்பின் ஊழி - இந்த ஊழியில் பசும்பொன் உலகமும்(வானுலகம்) மண்ணுலகமும் பாழாயிற்று. 2 ஒன்றன் ஊழி - வானத்தில் நிசை தெரியாத ஊழி. 3 வளி ஊழி - காற்று தோன்றிற்று. 4 தீ ஊழி. 5 பனி ஊழி - பனியும் மழையும் பெய்தழித்த ஊழி. 6 வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த ஊழி. 7 நிலம் தோன்றிய ஊழி. 8 நீரில் நெய்தல், குவளை, ஆம்பல் பூத்து சங்குகள் மேய்ந்த ஊழி. இந்த ஊழியில்தான் திருமால் கேழல் உருவில் தோன்றினான்.

திருமால் ஆழி முதல்வன். சங்குநிற வாலியோன்(பலராமன்) திருமாலுக்கு அண்ணன். பனைக்கொடியோன் திருமாலுக்குத் தம்பி.[சான்று தேவை]

மேலும் அமிழ்தம் கடைந்தது போன்ற வரலாறுகளும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரந்தையார்&oldid=3087629" இலிருந்து மீள்விக்கப்பட்டது