சீ. தம்பிராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீ. தம்பிராசா
பிறப்பு1924
பெரிய கல்லாறு மட்டக்களப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

பண்டிதர் சீ. தம்பிராசா (பிறப்பு: 1924) ஈழத்து தமிழறிஞர். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “தமிழ் ஒளி” விருது பெற்றவர். பல இலக்கியக் கட்டுரைகளை எழுதியவர். மேடைப் பேச்சாளர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பண்டிதர் தம்பிராசா 1924 இல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு கிராமத்தில் பிறந்தவர். 1951 முதல் 1971 வரையிலான 20 வருடங்கள் இவர் பெரிய கல்லாறு சைவ மகா சபையின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • இருபா இருபஃது (1993)
  • கதிர்காமம் (2002)
  • சங்க இலக்கிய சமுத்திர முத்துக்கள் (2005)
  • பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் தோத்திரப் பாடல்கள் (2007)
  • கல்லாற்றுக் கடல் நாச்சியார் துதி மலர் (2007)
  • பெரிய கல்லாறு மண்டபத்தடிப் பிள்ளையார் ஆலய வரலாறும் திருப்பொன்னூஞ்சலும் (2008)
  • எனது இலக்கியச் சிந்தனைகள் (2010)

விருதுகள்[தொகு]

இவரது சமய இலக்கிய பணிகளுக்காகப் பல்வேறு கெளரவங்களும், பரிசுகளும் பாராட்டுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.

  • தமிழ் மறைக் கழகம் நடத்திய “திருக்குறள்” கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு (1962) இதற்கான பரிசளிப்பு விழா 1962, மே 18 இல் வேலணையில் நடைபெற்றது. தில்லியிலிருந்து முனைவர் சாலை இளந்திரையன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றிய இவ்விழாவில் பண்டிதர் தம்பிராசாவுக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பட்டது.
  • இந்து சமய கலாசார திணைக்களம் ‘தமிழ் ஒளி’ விருதை இவருக்கு வழங்கியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._தம்பிராசா&oldid=3244878" இலிருந்து மீள்விக்கப்பட்டது