நுண்நோக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத நுண்பொருட்கள், அமைப்புகள் மற்றும் விபரங்களை, நுண்நோக்கி மற்றும் வேறு உருப்பெருக்கும் கருவிகள் மூலம் கட்புலனாகக்கூடிய படிமங்களாக உருவாக்கும் நுட்பமே நுண்நோக்கியல் ஆகும். ஒளிசார் நுண்நோக்கியலில், எடுத்துக்கொண்ட பொருளினூடாகச் செல்கின்ற அல்லது அதிலிருந்து தெறித்து வருகின்ற ஒளியைப் பல கண்ணாடி வில்லைகளின் ஊடாகச் செலுத்துவதன் மூலம் உருப்பெருக்கிய விம்பம் பெறப்படுகிறது. இதை நேரடியாகக் கண்ணால் பார்க்கவோ அல்லது நிழற்படத் தகடுகள்மீது படமாகப் பதிக்கவோ முடியும். உருப்பெருக்குதிறன் ஒளியின் அலைநீளத்தில் தங்கியுள்ளது அறியப்பட்ட பின்னர், குறைந்த அலைநீளம் கொண்ட இலத்திரன் கற்றைகளைப் பயன்படுத்தும் இலத்திரன் நுண்நோக்கிகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் மிக உயர்ந்த உருப்பெருக்கத்தைப் பெறமுடிந்தது. 1940 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எக்ஸ் கதிர் நுண்நோக்கிகளும் விருத்தி செய்யப்பட்டன எனினும், இவை அதிகம் பயன்பாட்டில் இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்நோக்கியல்&oldid=2740406" இலிருந்து மீள்விக்கப்பட்டது