மூதில் அருமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூதில் அருமன் சங்ககாலக் குநிலத் தலைவன். சிறுகுடி இவன் ஊர். இவ்வூர்ச் சூர் தெய்வத்துக்கு கருணை வெண்சோறு படையல் செய்வார்களாம். அதனைக் காக்கை தன் குஞ்சுகளுடன் வந்து உண்டு மகிழுமாம்.

இவ்வூரில் திருமணத்துக்கு வரும் இளமகளிர் கூந்தலில் குவளை மலரையும், முல்லை மலரையும் சேர்த்துக் கட்டிய கோதையைச் சூடிக்கோண்டு வருவார்களாம். சங்ககால நக்கீரர் பாடல் இதனைத் தெரிவிக்கிறது.[1]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பகுதியில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற ஊர் இது. சிறுகுடி சூடுசுமபரீசுரர் இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள சூர் எனத் தெரிகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. நற்றிணை 367
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதில்_அருமன்&oldid=909730" இலிருந்து மீள்விக்கப்பட்டது