அவிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவிடின்
core-streptavidin mutant d128a at ph 4.5
அடையாளங்கள்
குறியீடு Avidin
Pfam PF01382
InterPro IPR005468
PROSITE PDOC00499
SCOP 1slf

அவிடின் என்பது பயோட்டினுடன் இணையக்கூடிய, நான்கு துணை அலகுகளைக் கொண்ட நாற்படிப் புரதம் ஆகும். இது பறவைகள், ஊர்வன, ஈரூடக வாழிகள் போன்றனவற்றின் சூலகக்கானில் தொகுக்கப்பட்டு முட்டையின் வெள்ளைப் பகுதியில் சேர்க்கப்படுகின்றது. இப்புரதத்தின் ஒவ்வொரு துணை அலகும் பயோட்டினுடன் (உயிர்ச்சத்து பி 7, உயிர்ச்சத்து H) உயர் வலுக் கவர்ச்சிப் பிணைப்பு மூலம் இணையக்கூடியது. அவிடினின் பிரிகை மாறிலி KD ≈ 10−15 M ஆக இருப்பதன் மூலம் இது ஒரு வலுவான சமவலுப் பிணைப்பு அல்லாத சேர்க்கை என அறியக்கூடியதாக உள்ளது.

பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடினும் மஞ்சள் கருவில் பயோட்டினும் இயல்பு நிலையில் காணப்படுகின்றன. சமைக்காத பச்சை முட்டையின் வெண்கருவை மிகையாக நாளாந்தம் பெரியளவில் உட்கொண்டால் அவற்றில் காணப்படும் அவிடின், பயோட்டினுடன் சேர்ந்து வலுவான பிணைப்பை ஏற்படுத்த, ஈற்றில் பயோட்டின் அகத்துறிஞ்சல் தடைப்படும். முட்டையைச் சமைப்பதன் மூலம் அவிடினின் மூலக்கூறுகள் சிதைக்கப்படுகின்றன, எனவே முட்டையில் உள்ள பயோட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிடின்&oldid=2745312" இலிருந்து மீள்விக்கப்பட்டது