விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 2, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பராக் உசேன் ஒபாமா (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961), அமெரிக்காவின் 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மக்களாட்சிக் கட்சி வேட்பாளராவார். தற்போது இவர் மேலவையிலும் இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராக உள்ளார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


ஜான் மெக்கெய்ன் (பிறப்பு: ஆகஸ்ட் 29, 1936) அரிசோனா மக்களின் சார்பான ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மூத்த உறுப்பினர். 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவிடம் தோற்றார். முன்னாள் படைத்துறை வீரர், போர் வானூர்தி ஓட்டுநர். மெக்கெயின் வியட்நாம் போரில் பங்கு கொண்டார். அக்டோபர் 1967 இல் வியட்நாம் தலைநகரம் ஹனோய் மேல் வான் தாக்குதல் மேற்கொண்ட போது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து வடக்கு வியட்நாமியர்களால் போர் கைதியாக சிக்கினார். 1973 வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.


உங்களுக்குத் தெரியுமா