இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
நூல் பெயர்:இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
ஆசிரியர்(கள்):முனைவர்.துரை.மணிகண்டன்
வகை:தமிழ்
துறை:கணினி மற்றும் இணையம்
இடம்:2, சத்தியவதி நகர் முதல் தெரு,
பாடி,
சென்னை 600 050
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:கௌதம் பதிப்பகம்]
பதிப்பு:சூன்' 2010
ஆக்க அனுமதி:பதிப்பகத்தார்க்கு

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் எனும் இந்த நூல் சர்வதேசப் புத்தகக் குறியீட்டு எண் ISBN 978-81-909669-5-5 கொண்டு 96 பக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியர் முனைவர்.துரை மணிகண்டன் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சிராப்பள்ளி, லால்குடி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் கவுரவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் "இணையமும் தமிழும்" எனும் பெயரில் ஏற்கனவே ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அணிந்துரை[தொகு]

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் இராதா செல்லப்பன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

வாழ்த்துரை[தொகு]

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி)யின் தமிழ்த்துறை பேருரையாளர் முனைவர்.மு.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

இந்நூலில்

  1. வலைப்பூ -ஓர் அறிமுகம்
  2. வலைப்பூக்களின் வகைப்பாடுகள்
  3. இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள்
  4. பக்தி, ஆன்மீகம் சார்ந்த வலைப்பூக்கள்
  5. அறிவியல் (கணிப்பொறி) வலைப்பூக்கள்
  6. பொதுவான (பல்சுவை) வலைப்பூக்கள்
  7. வலைப்பூவை உருவாக்கும் முறை
  8. எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்தல்
  9. வலைப்பதிவுகளின் திரட்டிகள்
  10. வலைப்பூவின் நன்மைகள்

எனும் 10 தலைப்புகளில் தமிழ் வலைப்பூக்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.

பரிசு[தொகு]

  • இந்நூல் திருச்சிராப்பள்ளி, முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது.