மேலாண்மைக் கணக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மேலாண்மைக் கணக்கியல் அல்லது மேலாண் கணக்கியல் என்பது, நிறுவன மேலாளர்களுக்கு, அவர்கள் தங்கள் மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு தொடர்பான செயல்பாடுகளில் கூடுதல் சிறப்பாகச் செயல்பட உதவும் வகையில் சிறப்பான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான ஓர் அடிப்படையை வழங்குவதற்காக, அவர்களுக்கு கணக்கியல் தகவல்களை வழங்குதல் அல்லது பயன்படுத்துதல் தொடர்பானதாகும்.

நிதியியல் கணக்குப்பதிவியல் தகவலைப் போலன்றி, மேலாண்மைக் கணக்கியல் தகவல் என்பது:

  • நிறுவனத்திலுள்ள மேலாளர்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் நிதியியல் கணக்கியல் தகவலானது பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
  • வழக்கமாக, வெளிப்படையாக அறிக்கையிடப்படாமல் ரகசியத்தன்மை வாய்ந்ததாகவும் நிர்வாகத்தினால் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது;
  • வரலாற்றுத் தன்மை வாய்ந்ததாக இல்லாமல், முன்னோக்குத் தன்மை கொண்டதாக உள்ளது;
  • மேலாளர்களின் தேவைகளைப் பொறுத்த விதத்தில் கணக்கிடப்படுகிறது, பெரும்பாலும் மேலாண்மை தகவல் முறைகளைப் பயன்படுத்துகிறது, நிதியியல் கணக்கியல் தரநிலைகளைப் பொறுத்து கணக்கிடப்படுவதில்லை.

பல்வேறு வலியுறுத்தல்களே இதற்குக் காரணமாகும், அவை: மேலாண்மைக் கணக்கியல் தகவலானது ஒரு நிறுவனத்திற்குள்ளே, வழக்கமாக முடிவெடுத்தல் செயலுக்காக பயன்படுத்தப்படுகிறது.

வரையறை[தொகு]

பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்தின் (CIMA) வரையறையின் படி, மேலாண்மைக் கணக்கியல் என்பது, "நிர்வாகம் தனது அமைப்புக்குள் திட்டமிடுவதற்கு, மதிப்பீடு செய்வதற்கு மற்றும் கட்டுப்படுத்துவதற்கும், அதன் வளங்களின் சரியான பயன்பாட்டை உறுதிப்படுத்தவும், அதன் காரணகாரியத் தன்மையைப் பராமரிக்கவும், அது பயன்படுத்தும் தகவல்களைக் கண்டறிதல், அளவிடல், ஒருங்கே தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல், தயாரித்தல், புரிந்துகொள்ளல் மற்றும் அவை தொடர்பான தகவல்தொடர்பு ஆகியவை உள்ளிட்டச் செயலாகும். பங்குதாரர்கள், கடன் வழங்குபவர்கள், ஒழுங்குபடுத்து முகமைகள் மற்றும் வரி ஆணையங்கள் போன்ற மேலாண்மை அல்லாத குழுக்களுக்காக நிதி அறிக்கைகளைத் தயாரித்தலும் மேலாண்மைக் கணக்கியலில் அடங்கும் செயலாகும்" (CIMA அதிகாரப்பூர்வ சொல்லியல்).

நடைமுறையில் மேலாண்மைக் கணக்கியலானது பின்வரும் மூன்று பகுதிகளுக்கும் நீள்கிறது என, சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கியலாளர்களுக்கான அமெரிக்க நிறுவனம்(AICPA) குறிப்பிடுகிறது:

  • உத்தியியல் மேலாண்மை—மேலாண்மைக் கணக்கியலாளரின் பங்கை நிறுவனத்தின் உத்தியியல் கூட்டாளியாக உயர்த்துதல்.
  • செயல்திறன் மேலாண்மை—வணிக ரீதியிலான முடிவெடுத்தல் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை நிர்வகித்தல் ஆகியவை தொடர்பான நடைமுறைகளை மேம்படுத்தல்.
  • இடர் மேலாண்மை—நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவது தொடர்பாக உள்ள இடர்களைக் கண்டறிதல், அளவிடல், நிர்வகித்தல் மற்றும் அது தொடர்பான அறிக்கையிடல் ஆகியவற்றின் பணிச்சட்டகமைப்புகள் மற்றும் நடைமுறைகளுக்கான பங்களிப்பு.

"ஒரு மேலாண்மைக் கணக்கியலாளர், கொள்கை வடிவாக்கம் மற்றும் கையகப்படுத்தல் செயலிலான கட்டுப்பாடு ஆகியவற்றில் நிர்வாகத்திற்கு உதவும் வகையில் நிதியியல் மற்றும் பிற முடிவெடுத்தல் சார்ந்த தகவல்களைத் தயாரித்தல் மற்றும் வழங்கல் ஆகிய செயல்களில் தனது தொழில்முறை அறிவையும் திறனையும் பயன்படுத்துவார்" என சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்கியலாளர்கள் நிறுவனம் (ICMA), குறிப்பிடுகிறது. ஆகவே அனைத்து கணக்கியலாளர்களிடையேயும் மேலாண்மைக் கணக்கியலாளர்கள் "மதிப்பு-படைப்பாளிகளாகக்" கருதப்படுகின்றனர். அவர்கள் தொழிலின் வரலாற்றுப் பதிவுகள் மற்றும் இணக்கத் தன்மை (ஸ்கோர்கீப்பிங்) அம்சங்களைக் காட்டிலும், முன்னோக்கு மனப்பாங்கிலும் நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். ஆகவே மேலாண்மைக் கணக்கியல் அறிவு மற்றும் அனுபவம், தகவல் மேலாண்மை, கருவூலம், செயல்திறன் தணிக்கை, சந்தைப்படுத்தல், மதிப்பீட்டாக்கம், விலையிடல், சரக்கியல் போன்ற, நிறுவனத்தின் பல்வேறு துறைகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து பெறப்படலாம்.

பாரம்பரிய கணக்கியல் நடைமுறைகளுக்கு எதிராக புது முறை மேலாண்மைக் கணக்கியல் நடைமுறைகள்[தொகு]

1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், கணக்கியல் நடைமுறை செயல்படுத்துநர்களும் கல்வியாளர்களும், வணிக சூழலிலான முழுமையான மாற்றங்களுக்குப் பிறகும், முந்தைய 60 ஆண்டுகளாக சிறிதளவே மாற்றம் கண்டிருக்கும் மேலாண்மைக் கணக்கியல் நடைமுறைகளின் அடிப்படைகளைப் (மேலும் கணக்கியல் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் பாடத்திட்டங்களைப் பற்றியும் கூட) பற்றி தீவிரமாக விமர்சித்தனர். வணிக நிறுவனங்களில் மேலாண்மைக் கணக்கியலாளர்களுக்கு அளிக்கப்படும் மிதமிஞ்சிய முக்கியத்துவம் உடையவராக அறியப்படும் போக்கு அதிகரிப்பதைக் கண்டு தொழில்முறை கணக்கியல் நிறுவனங்கள் பயந்து, மேலாண்மைக் கணக்கியலாளர்களுக்கான புதிய திறன் அம்சங்களை உருவாக்குவதற்காக குறிப்பிடத்தக்க அளவு வழிதுறைகளை தீவிரமாக்குகின்றன.

'பாரம்பரிய' மற்றும் 'புதிய' மேலாண்மைக் கணக்கியல் நடைமுறைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை செலவுக் கட்டுப்பாட்டு உத்திகளைக் கொண்டு விளக்கலாம். செலவுக் கணக்கியல் என்பது மேலாண்மைக் கணக்கியலில் ஒரு மைய முறையாகும், மேலும் பாரம்பரியமாக மேலாண்மைக் கணக்கியலாளர்களின் முதன்மையான உத்தியாக இருந்துவந்தது மாற்றப் பகுப்பாய்வே ஆகும், அது உற்பத்திக் காலத்தின் போது பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களின் உண்மையான செலவு மற்றும் மதிப்பிடப்பட்ட செலவு ஆகியவற்றை ஒப்பிடுவதற்கான ஒரு முறையியல் அணுகுமுறையாகும்.

மாற்றப் பகுப்பாய்வின் சில வகைகள் இன்றும் உற்பத்தி நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இந்நிலையில் அதை வாழ்க்கைச் சுழற்சி செலவுப் பகுப்பாய்வு மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான செலவுக் கணக்கீடு போன்ற புதிய உத்திகளுடன் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். அவை தற்கால வணிகச் சூழலை மனதில் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டவையாகும். ஒரு தயாரிப்பின் வடிவமைப்பில் செய்யப்படும் சிறு மாற்றங்களால் அதை உற்பத்தி செய்யும் செலவில் குறிப்பிடத்தக்க சேமிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், வாழ்க்கைச் சுழற்சி செலவுக் கணக்கீட்டில் ஒரு தயாரிப்பின் வாழ்க்கைச் சுழற்சியின் வடிவமைப்பு நிலையில் இருக்கும்போதே, (அதாவது, வடிவமைப்பு இறுதி செய்யப்படும் முன்னர் மற்றும் உற்பத்தி துவங்கும் முன்பு) ஒரு தயாரிப்பின் உற்பத்தி செலவைப் பாதிக்கும் மேலாளரின் திறன் முக்கியமாகக் கருதப்படுகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான செலவுக் கணக்கீட்டில் (ABC), தற்கால தொழிற்சாலைகளில், பெரும்பாலான உற்பத்தி செலவுகள் 'செயல்பாடுகளின்' (எ.கா. ஒரு மாதத்திற்கான உற்பத்தி ஓட்டத்தின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி இயந்திரம் வீணே இருக்கும் நேரத்தின் அளவு) அளவினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் ஆகவே இந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது செயல்திறன் மிக்க செலவுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியமாகும் என்றும் கருதப்படுகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான கணக்கீடு என்பது காரண மற்றும் விளைவுக் கணக்கியல் என்றும் அழைக்கப்படுகிறது.

வாழ்க்கைச் சுழற்சி செலவுக் கணக்கீடு மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான செலவுக் கணக்கீடு ஆகிய இரண்டிலும், வழக்கமான தற்கால தொழிற்சாலையில், (இயந்திர செயலிழப்புகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு தோல்விகள் போன்ற) சிக்கல் தரும் நிகழ்வுகளைத் தவிர்த்தல் என்பது, (எடுத்துக்காட்டுக்கு) மூலப் பொருட்களின் செலவுகளைக் குறைப்பதை விட முக்கியமானதாகும் எனக் கருதப்படுகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான செலவுக் கணக்கீட்டில் நேரடி தொழிலாளர்களை ஒரு செலவாக்கியாக வலியுறுத்துவதைக் குறைத்து, அதற்கு மாறாக ஒரு தயாரிப்புக் கூறின் சேவை அல்லது உற்பத்திக்கான வழங்கல் போன்ற செலவை ஏற்படுத்தும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது.

கூட்டக நிறுவனத்திலான மேலாண்மைக் கணக்கியலாளர்களின் பங்கு[தொகு]

இன்றைய கூட்டக நிறுவனத்திலுள்ள மற்றவர்களின் பங்குகளுக்கு இசைவானதாக, மேலாண்மைக் கணக்கியலாளர்களுக்கும் இரட்டை அறிக்கையிடல் தொடர்பு உள்ளது. உத்தியியல் கூட்டாளியாகவும் முடிவெடுத்தல் அடிப்படையிலான நிதி மற்றும் செயல்பாட்டு தகவல் வழங்குனராகவும், வணிகக் குழுவை நிர்வகிப்பதும் அதே நேரத்தில் கூட்டக நிறுவனத்தின் நிதியியல் அமைப்புக்கு தொடர்புகளையும் பொறுப்புகளையும் அறிக்கையிடுவதும் மேலாண்மைக் கணக்கியலாளர்களின் பொறுப்பேயாகும்.

மேலாண்மை கணக்கியலாளர்கள் வழங்கும் செயல்பாடுகளிலடங்கும் தொலைநோக்குதல் மற்றும் திட்டமிடல், மாற்றப் பகுப்பாய்வு செய்தல், வணிகத்தின் உள்ளார்ந்த செலவுகளை மறுஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியசெயல்பாடுகள் நிதியியல் மற்றும் வணிகக் குழு ஆகிய இரு சாராருக்கும் விளக்கமளிக்கும் பொறுப்பை வழங்கும் இரட்டைப் பொறுப்புகளாகும். புதிய தயாரிப்பு உருவாக்க செலவுக் கணக்கு, செயல்பாட்டு ஆராய்ச்சி, வணிக இயக்கி சார்புகள், விற்பனை மேலாண்மை ஸ்கோர்கார்டிங் மற்றும் கிளையண்ட் இலாபத்தன்மைப் பகுப்பாய்வு ஆகியவற்றை, வணிக மேலாண்மைக் குழுவுக்கும் அதே சமயம் கூட்டக நிறுவன நிதித் துறைக்கும் முக்கியமான பொறுப்புகளை வழங்கும் செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். மாறாக, கூட்டக நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நிதியியல் தகவல்களைச் சேகரித்து ஒருங்கிணைத்துத் தொகுத்துக் கொடுக்கும் பணி கூட்டக நிறுவனத்தின் நிதிக் குழுவிற்குரியது என்பதால், சில குறிப்பிட்ட நிதியியல் அறிக்கைகளைத் தயாரித்தல், நிதியியல் தரவுகளை மூல அமைப்புகளுக்கு மீண்டும் இணைத்தமைத்தல், இடர் மற்றும் ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல் ஆகியவை கூட்டக நிறுவனத்தின் நிதிக் குழுவிற்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கும். நிதியியல் கணக்கியல் என்பது மேலாண்மைக் கணக்கியலுக்கு ஒரு படிக்கல்லாகும் என்பதே, கணக்கியல் மற்றும் நிதியியல் தொழில்வாழ்க்கையின் பாதையைப் பொறுத்தமட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. மதிப்புப் உருவாக்கம் நிலைத்ததாக உள்ள நிலையில், மேலாண்மைக் கணக்கியலாளர்கள் வணிகத்தின் வெற்றியை முன்செலுத்துவதில் உதவியாக உள்ளனர். அதே சம்யம் கண்டிப்புத்தன்மையுடனான நிதியியல் கணக்கியலானது இணக்கத்தன்மை மற்றும் வரலாற்று முயற்சிகளை முக்கியமாகக் கருதுவதாக உள்ளது.

வங்கிகள், வெளியீட்டு நிறுவனங்கள், தொலைத்தொடபு நிறுவனங்கள் மற்றும் இராணுவ ஒப்பந்ததாரர்கள் போன்று, தகவல் பொருளாதாரத்திலிருந்து அதிக இலாபமடையும் கூட்டக நிறுவனங்களில், தகவல் தொழில்நுட்பச் செலவுகளே, கட்டுப்படுத்த முடியாத குறிப்பிடத்தக்க செலவின மூலமாக உள்ளன, அது அளவினைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் கூட்டக நிறுவனங்களின் ஊதிய செலவுகள் மற்றும் சொத்து தொடர்பான செலவுகள் ஆகியன போக மீதமுள்ள பெரிய செலவாக இதுவே உள்ளது. தகவல் தொழில்நுட்ப செலவுகளிலான வெளிப்படைத் தன்மையை வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறையுடன் நெருக்கமாக இருந்து செயல்படுவதே இது போன்ற நிறுவனங்களிலான மேலாண்மைக் கணக்கியலின் செயல்பாடாகும்.[1]

மேலாண்மைக் கணக்கியல் பற்றிய மாற்றுக் கண்ணோட்டம்[தொகு]

இது நிறுவனங்களில் நடுநிலையான அல்லது தீங்கற்ற பாதிப்பு ஆகிய இரண்டு வகை பாதிப்புகளையும் வழங்குவதில்லை, மாறாக கூர்ந்த மேற்பார்வையின் மூலமாக மேலாண்மைக் கட்டுப்பாட்டுக்கான ஒரு செயலம்சமாகவே உள்ளது என்பதே மேலாண்மைக் கணக்கியலின், மிகவும் அரிதாகவே வெளிப்படுத்தப்படும் ஒரு மாற்றுக் கண்ணோட்டமாகும். இந்தக் கண்ணோட்டம் மேலாண்மைக் கணக்கியலை குறிப்பாக மேலாண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டில் வைத்தாளுகிறது. வேறு விதமாகக் கூறினால், மேலாண்மைக் கணக்கியல் தகவலானது, மேலாளர்களின் ஒரு நிறுவனத்திற்குள்ளான கட்டுப்பாட்டு செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள நிறுவனத்தின் ஒட்டுமொத்த அக கட்டமைப்பை ஒரு மேலோட்டப் பார்வையைப் பெறுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் இயங்கம்சமாக உள்ளது.

பிரத்யேக கருத்துகள்[தொகு]

Grenzplankostenrechnung (GPK)[தொகு]

Grenzplankostenrechnung (GPK) என்பது ஜெர்மானிய செலவுக் கணக்கு முறையாகும். அது 1940 ஆம் மற்றும் 1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது, அது மேலாண்மை செலவுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன மற்றும் ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கு அவை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்ற இசைவான மற்றும் துல்லியமான பயன்பாட்டை வழங்கு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் GPK எனக் குறிப்பிடப்படும் Grenzplankostenrechnung என்பதை, குறைந்தபட்ச திட்டமிடப்பட்ட செலவுக் கணக்கியல் [2] அல்லது நெகிழும் பகுப்பாய்வு செலவுத் திட்டமிடல் மற்றும் கணக்கியல் என மொழிபெயர்ப்பது சிறப்பாக இருக்கும்.[3]

GPK இன் தோற்றத்திற்கான பெருமை வாகன பொறியாளரான ஹான்ஸ் ஜியார்ஜ் ப்ளாட் (Hans George Plaut) மற்றும் கல்வியாளரான உல்ஃப்கேங் கில்கெர் (Wolfgang Kilger) ஆகியோரையே சேரும், அவர்கள் செலவுக் கணக்கியல் தகவல்களைத் திருத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நீடித்த முறையைக் கண்டறிவது மற்றும் வழங்குவது என்ற பரஸ்பர இலக்கை நோக்கி பணிபுரிந்தவர்களாவர். GPK செலவுக் கணக்கியல் பாடநூல்களில் வெளியிடப்படுகிறது, குறிப்பாக Flexible Plankostenrechnung und Deckungsbeitragsrechnung [4] ஐக் கூறலாம், மேலும் இன்று ஜெர்மன் பேசும் பல்கலைக்கழகங்களில் கற்றுத்தரப்படுகிறது.

சிக்கன கணக்கியல் (சிக்கன தொழில்களுக்கான கணக்கியல்)[தொகு]

1990 ஆம் ஆண்டுகளின் மத்தியப் பகுதி முதல் பிற்பகுதி வரை, சிக்கன தொழில்துறைகளிலான (டொயோட்டா ப்ரொடக்ஷன் சிஸ்டத்தின் கூறுகளைச் செயல்படுத்தும் நிறுவனங்கள்) கணக்கியலைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டன. சிக்கன கணக்கியல் என்ற சொல்லானது அந்த காலகட்டத்தில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. வழக்கமான கணக்கியல் முறைகள் மொத்த உற்பத்திக்கே பொருத்தமானவையாகும், ஆனால் அவை மிகக் குறுகிய கால உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான வணிக நடைமுறைகளுக்குப் பொருந்தாது என இந்தப் புத்தகங்கள் வாதிடுகின்றன. மிச்சிகனின் டியர்பார்னில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டுக்கான சிக்கன கணக்கியல் உச்சி மாநாட்டின் போது இவ்வியக்கம் ஒரு திருப்புமுனையை அடைந்தது. அதில் 320 பேர் பங்கேற்று, சிக்கன தொழிற்துறையிலான கணக்கியலுக்கான புதிய அணுகுமுறையின் நன்மைகளைப் பற்றி விவாதித்தனர். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் 520 பேர் கலந்துகொண்டனர்.

வள நுகர்வுக் கணக்கியல் (RCA)[தொகு]

வள நுகர்வுக் கணக்கியல் என்பது, மேலாளர்களுக்கு தொழிற்துறை மேம்படுத்தலுக்கான முடிவெடுத்தலுக்கு ஆதரவான தகவல்களை வழங்கக்கூடிய, செயல்மிகு, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தத்துவ அடிப்படை கொண்ட மற்றும் விரிவான மேலாண்மைக் கணக்கியல் அணுகுமுறை என முறையாக வரையறுக்கப்படுகிறது. 2000 மாவது ஆண்டுவாக்கில் ஒரு மேலாண்மைக் கணக்கியல் அணுகுமுறையாக RCA உருவானது, அதனையடுத்து, சர்வதேச மேம்பட்ட உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான CAM-I இன், செலவு மேலாண்மைப் பிரிவு RCA ஆர்வக் குழு பரணிடப்பட்டது 2017-10-07 at the வந்தவழி இயந்திரம் வால் 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் மேம்படுத்தப்பட்டது. அடுத்த ஏழு ஆண்டுகளை நடைமுறை நிகழ்வாய்வுகள் மற்றும் பிற ஆராய்ச்சிகளின் மூலமாக இந்த அணுகுமுறையை கவனமாக மேம்படுத்துவதிலும் நிரூபிப்பதிலும் செலவழித்த பின்னர், ஆர்வமுள்ள கல்வியாளர்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சியாளர்களின் ஒரு குழு, சந்தையில் RCA ஐ அறிமுகப்படுத்தவும் கல்வித்துறை ரீதியான பயிற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமாக மேலாண்மைக் கணக்கியல் அறிவின் தரத்தை உயர்த்தவும் RCA நிறுவனத்தை நிறுவியது.

செயல்வீத கணக்கியல்[தொகு]

மேலாண்மைக் கணக்கியலிலான மிகவும் குறிப்பிடத்தக்கதான, சமீபத்திய திசை செயல்வீத கணக்கியல் ஆகும்; அதில் தற்கால உற்பத்தி செயல்களின் இடை சார்புத் தன்மைகள் கருதப்படுகின்றன. கொடுக்கப்பட்ட ஒரு தயாரிப்புக்கு, வாடிக்கையாளருக்கு அல்லது வழங்குநருக்கு, அது ஓரலகு பயன்படுத்தப்பட்ட வளத்திற்கான பங்களிப்பை அளவிடுவதற்கான ஒரு கருவியாகும்.

மாற்ற விலையிடல்[தொகு]

பல்வேறு தொழிற்துறைகளில், மேலாண்மைக் கணக்கியல் ஒரு பயன்படு துறையாகும். பின்பற்றப்படும் பிரத்யேக செயல்பாடுகள் மற்றும் தத்துவங்கள் ஆகியவை, தொழிற்துறையைப் பொறுத்து வேறுபடலாம். வங்கியியலிலான மேலாண்மைக் கணக்கியல் தத்துவங்கள் சிறப்பாக்கம் பெற்றவை ஆனால் உற்பத்தி அல்லது சேவை சார்ந்த துறைகளில் பொதுவான அடிப்படைக் கருத்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மாற்ற விலையிடல் என்பது உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தாகும், ஆனால் வங்கியியலிலும் பயன்படுத்தப்படுகிறது. அது, பல்வேறு வணிக அலகுகளுக்கு மதிப்பையும் வருவாய் பண்புக்கூறையும் நிர்ணயிப்பதில் பயன்படுத்தப்படும் ஓர் அடிப்படைத் தத்துவமாகும். வங்கியியலிலான மாற்ற விலையிடலானது பல்வேறு நிதி மூலங்கள் மற்றும் தொழிற்துறையின் பயன்பாடு ஆகியவற்றுக்கான வங்கியின் வட்டிவீத இடரை நிர்ணயிக்கும் ஒரு முறையாகும். இதனால், வங்கியின் கூட்டக கருவூலத் துறையானது வணிக அலகுகள், கிளையண்ட்டுகளுக்கு கடன் வழங்கும்போது, அவற்றின் வங்கி வளப் பயன்பாட்டுக்கான நிதியளிப்புக் கட்டணங்களை நிர்ணயிக்கும். கருவூலத் துறையானது வங்கிக்கு வைப்புத்தொகை (வளங்கள்) செலுத்தும் வணிக அலகுகளுக்கான நிதி வரவுகளையும் நிர்ணயிக்கும். நிதிகள் மாற்ற விலையிடல் செயலாக்கமானது பிரதானமாக பல்வேறு வங்கி அலகுகளின் கடன்கள் மற்றும் வைப்புத் தொகைகளுக்கு பொருந்தக்கூடியது என்றாலும், இந்த விளைவு அம்சமானது வணிகக் கூறின் அனைத்து சொத்துகள் மற்றும் கடன்பொறுப்புகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். மாற்ற விலையிடலானது பயன்படுத்தப்பட்டு பிற மேலாண்மைக் கணக்கியல் உள்ளீடுகள் அல்லது சரிசெய்தல்கள் (வழக்கமாக இவை நினைவுக் கணக்குகளாக உள்ளன, மேலும் இவை சட்டப்பூர்வ அம்சங்களின் முடிவுகளில் பதிவு செய்யப்படுவதில்லை) பேரேட்டில் பதிவு செய்யப்பட்டவுடன், வணிக அலகுகளால் கூறு நிதியியல் முடிவுகளை உருவாக்க முடியும். அவை செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக அக மற்றும் புற பயனர்களால் பயன்படுத்தப்படக்கூடும்.

வளங்களும் தொடர்ச்சியான கற்றலும்[தொகு]

மேலாண்மைக் கணக்கியல் துறையின் நடப்பு அறிவுத்தளத்தைப் பராமரிக்கவும், தொடர்ந்து கட்டமைக்கவும் பல்வேறு வகையான வழிகள் உள்ளன. சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கியலாளரைப் போலவே சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்கியலாளர்களும் (CMAகள்) ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான கல்வி நேரத்தில் பங்களிக்க வேண்டும். ஒரு நிறுவனம், கூட்டக நிறுவனத்தின் நூலகங்களில் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தகவல் வளங்களையும் கொண்டிருக்கலாம். இது "ஃபார்ச்சுன் 500" நிறுவனங்களில் பொதுவானதாகும். அவற்றில் இவ்வகை பயிற்சி ஊடகத்திற்கு நிதியளிக்கும் வளங்கள் உள்ளன.

எண்ணற்ற இதழ்களும் ஆன்லைன் கட்டுரைகளும் வலைப்பதிவுகளும் கூட கிடைக்கின்றன. செலவு மேலாண்மை மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனங்களின் பரணிடப்பட்டது 2007-12-07 at the வந்தவழி இயந்திரம் (IMA) தளங்களிலும் மேலாண்மைக் கணக்கியல் காலாண்டு மற்றும் உத்தியியல் நிதி வெளியீடுகள் போன்ற தகவல் வளங்கள் கிடைக்கின்றன. உண்மையில், மேலாண்மைக் கணக்கியல் என்பது ஒரு நிறுவனத்தின் தேவையாகும்.

வழங்கப்படும் மேலாண்மைக் கணக்கியல் பணிகள்/ சேவைகள்[தொகு]

மேலாண்மைக் கணக்கியலாளர்களால் செய்யப்படும் பிரதான பணிகள்/ சேவைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகளைப் பொறுத்த சிக்கலான தன்மையின் அளவானது ஒரு தனிநபரின் அனுபவத்தின் அளவு மற்றும் திறன்களைச் சார்ந்ததாகும்.

  • மாற்றப் பகுப்பாய்வு
  • வீதம் & அளவுப் பகுப்பாய்வு
  • வணிக மெட்ரிக்ஸ் உருவாக்கம்
  • விலை மாதிரியாக்கம்
  • தயாரிப்பு இலாபத்தன்மை
  • புவியியல் கூறு அறிக்கையிடலும் தொழிற்துறை அல்லது கிளையண்ட் கூறு அறிக்கையிடலும்
  • விற்பனை மேலாண்மை ஸ்கோர்கார்டுகள்
  • செலவுப் பகுப்பாய்வு
  • செலவு இலாபப் பகுப்பாய்வு
  • செலவு-அளவு-இலாபப் பகுப்பாய்வு
  • வாழ்கைச் சுழற்சி செலவுப் பகுப்பாய்வு
  • கிளையண்ட் இலாபத்தன்மைப் பகுப்பாய்வு
  • IT செலவு வெளிப்படைத்தன்மை
  • மூலதன பணத்திட்டமிடல்
  • வாங்குதல் பகுப்பாய்வும் குத்தகைப் பகுப்பாய்வும்
  • உத்தி சார்ந்த திட்டமிடல்
  • உத்தியியல் மேலாண்மை அறிவுரை
  • அக நிதித்துறை விளக்க வழங்கல்களும் தகவல்தொடர்பும்
  • விற்பனை மற்றும் நிதியியல் முன்னனுமானம்
  • ஆண்டு பணத்திட்டமிடல்
  • செலவு ஒதுக்கீடு
  • வளங்கள் ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு

தொடர்புடைய தகுதிகள்[தொகு]

கணக்குப்பதிவியல் துறையில் பல தொடர்புடைய தொழில்முறை தகுதிகள் மற்றும் சான்றளிப்புகள் உள்ளன, அவற்றில் பின்வருவனவும் உள்ளடங்கும்:

  • மேலாண்மைக் கணக்குப்பதிவியல் தகுதிகள்
    • CIMA
    • ICMA
    • CMA
  • பிற தொழில்முறை கணக்குப்பதிவியல் தகுதிகள்
    • சான்றளிக்கப்பட்ட பட்டய கணக்கர் (ACCA)
    • பட்டய கணக்கர், (CA)
    • சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர் , (CPA)
      • அமெரிக்க சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர்களுக்கான கல்வி நிறுவனம்
    • சான்றளிக்கப்பட்ட நடைமுறைப் பயிற்சி கணக்கியலாளர் (CPA ஆஸ்திரேலியா)

முறைகள்[தொகு]

  • செயல்பாட்டு அடிப்படையிலான செலவுக் கணக்கியல்
  • Grenzplankostenrechnung (GPK)
  • சிக்கனக் கணக்குப்பதிவு
  • வள நுகர்வுக் கணக்கியல்
  • தரநிலையான செலவுக் கணக்கியல்
  • செயல்வீத கணக்கியல்
  • மாற்ற விலையிடல்

மேலும் காண்க[தொகு]

  • மேலாண்மைக் கணக்கியலுக்கும் நிதிக் கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள்
  • மேலாண்மை இடர் கணக்கியல்
  • IT செலவு வெளிப்படைத்தன்மை

குறிப்புதவிகள்[தொகு]

  1. * "டேக்கிப்க் கண்ட்ரோல் ஆஃப் IT காஸ்ட்ஸ்". நோக்ஸ், செபாஸ்டியன். லண்டன் (ஃபினான்ஷியல் டைம்ஸ் / ப்ரெண்டிஸ் ஹால்): மார்ச் 20, 2000. ISBN 978-0-273-64943-4
  2. Friedl, Gunther; Hans-Ulrich Kupper and Burkhard Pedell (2005). "Relevance Added: Combining ABC with German Cost Accounting". Strategic Finance (June): 56–61. 
  3. Sharman, Paul A. (2003). "Bring On German Cost Accounting". Strategic Finance (December): 2–9. 
  4. Kilger, Wolfgang (2002). Flexible Plankostenrechnung und Deckungsbeitragsrechnung. Updated by Kurt Vikas and Jochen Pampel (11th Edition ). Wiesbaden,Germany: Gabler GmbH. 

புற இணைப்புகள்[தொகு]

'

பகுப்பு:கணக்குப்பதிவியலின் வகைகள் பகுப்பு:மேலாண்மைக் கணக்கியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாண்மைக்_கணக்கியல்&oldid=3669789" இலிருந்து மீள்விக்கப்பட்டது