பேச்சு:புத்தத்தன்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தத்தன்மை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
புத்தத்தன்மை பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


  • புத்தநிலை
  • புத்தபாவம்
  • புத்தத்துவம்
  • புத்தத்தன்மை



இவற்றுள் எந்த சொல் பயன்பாடு Perfectஆக படுகிறது ? βινόδ  வினோத் 10:22, 25 பெப்ரவரி 2008 (UTC)

Buddhahood என்பதற்கு புத்தத்தன்மை பொருந்துகிறது.--Kanags \பேச்சு 10:45, 25 பெப்ரவரி 2008 (UTC)
இது ஆங்கிலபதத்தின் நேரடி மொழிப்பெயர்ப்பாக எனக்கு படுகிறது. கூடுமானவரை ஆங்கிலத்தில் இருந்து நேரடியாக மொழிப்பெயர்க்காமல், மூல மொழியில் இருந்து மொழிப்பெயர்த்தல் நலம் என்பது என கருத்து. பாளி,வடமொழி மூலத்தை ஒட்டி இதை புத்தபாவம் என அழைக்கலாமா ? βινόδ  வினோத் 10:49, 25 பெப்ரவரி 2008 (UTC)

இளமை, முதுமை என்பது போல் புத்தமை என்று சொல்லலாமா?--ரவி 12:09, 3 மார்ச் 2008 (UTC)

நல்ல சிந்தனை ரவி. தாய்-->தாய்மை என்பது போல் புத்தமை எனலாம், ஆனால் இங்கு உள்ள கருத்துக்கு புத்தநிலை என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். புத்தமை என்பது புதிதாக அமைக்கப்பட்டது என்னும் பொருளும் சுட்டும் போல் தெரிகின்றது. மேலும் புத்தநிலை என்பது "மை" என்று கூறும் பண்பு ஒட்டு பெறுமா என்பதை சிந்திக்க வேண்டும். புத்தத்தன்மை என்பதைவிட புத்தநிலை என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.--செல்வா 15:26, 3 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புத்தத்தன்மை&oldid=810994" இலிருந்து மீள்விக்கப்பட்டது