வேஸோவேகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேஸோவேகல் (vasovagal) என்பது இரத்த ஓட்டத்தின் கட்டுப்பாட்டில் ஏற்படும் தற்காலிக தடுமாற்றத்தால் ஏற்படும் உடல் கோளாறு. இதனால் மயக்கம் போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒருவர் சற்றுநேரம் உட்கார்ந்திருந்த பிறகு திடீர் என்று எழுந்திருக்கையில் ஏற்படுகிற இரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதில் ஏற்படும் கோளாற்றால் அவருக்கும் மயக்கம் முதலியன ஏற்படலாம்.

சில சமயங்களில், சிலருக்கு இரத்தத்தை பார்க்கையிலோ அவர்கள் கண்கள் பரிசோதிக்கப்படுகையிலோ அவர்களுடைய தானியங்கு நரம்பு மண்டலம் அவர்கள் படுத்திருக்கையில் செயல்படுவது போல செயல்படுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோதான் இருப்பார்கள். பயத்தின் காரணமாக அவர்களுடைய இருதயத் துடிப்பு படு வேகமாக ஏறுகிறது. பிறகு, அவர்களுடைய நாடித்துடிப்பு திடீரென சரிகிறது. அவர்கள் கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் விரிந்துவிடுகின்றன. அதன் விளைவாக, அவர்கள் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி தலையில் இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது. அதனால் அவர்கள் மூளைக்குப் போதுமான உயிர்வளி கிடைக்காமல் அவர்கள் மயக்கம் அடைகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேஸோவேகல்&oldid=2740820" இலிருந்து மீள்விக்கப்பட்டது