வெப்ப மாசுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப மாசுபாடு (Thermal pollution) (சில நேரங்களில் வெப்ப உயர்வு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது சூழ்நிலையில் உள்ள நீரின் வெப்பநிலையில் ஏதாவது ஒரு செயல்முறையின் காரணமாக உயர்வு ஏற்பட்டு அதனால் நீர்த் தரத்தில் உருவாகும் தரக்குறைபாடாகும். வெப்ப மாசுபாடு என்பது மனித நடவடிக்கைகளின தாக்கத்தினால் இயற்கையான நீரின் வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு அல்லது வீழ்ச்சியாகும்.[1] வெப்ப மாசுபாடானது, வேதி மாசுபாடு போலல்லாமல், நீரின் இயற்பியல் பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.[2] மின் நிலையங்கள் மற்றும் தொழில் முறை உற்பத்தியாளர்களால் குளிர்விப்பானாகப் பயன்படுத்தும் நீரே வெப்ப மாசுபாட்டிற்கான ஒரு பொதுவான காரணமாகத் திகழ்கிறது.[3] சாலைகள் மற்றும் ஊர்திகள் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றிலிருந்து வருகின்ற நகர்சார்ந்த ஓடுநீரான மழைநீர் மேற்பரப்பு நீருடன் இணைக்கப்படுவதும் வெப்ப மாசுபாட்டிற்கான காரணமாக அமையலாம்.[4] நீர்த்தேக்கங்களின் அடிப்பகுதியில் இருந்து மிகவும் குளிர்ந்த நீரானது வெப்பமான ஆறுகளில் கலப்பதாலும் வெப்ப மாசுபாடு ஏற்படலாம்.

குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படும் நீர் அதிக வெப்பநிலையில் இயற்கைச் சூழலுக்குத் திரும்பும்போது, வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் ஆக்சிசன் விநியோகத்தைக் குறைத்து, சூழலியல் அமைப்பின் இயல்பைப் பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட இயல்பான வெப்பநிலையில் வாழப் பழகிய மீன்கள் மற்றும் இதர உயிரினங்கள் திடீரென ஏற்படும் வெப்பநிலை மாறுபாட்டால் (திடீர் வெப்பநிலை உயர்வு அல்லது திடீர் வெப்பநிலை தாழ்வு) கொல்லப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாறுபாடு வெப்ப அதிர்வு எனவும் அழைக்கப்படுகிறது. சூடான குளிரூட்டி நீர் நீரின் வெப்பநிலையில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும், ஆழமான நீர்நிலைகள் உட்பட நீர்நிலைகளின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கும். இந்த வெப்பநிலை அதிகரிப்பு நீர்க்கலம்  முழுவதும் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பருவநிலையே தீர்மானிக்கிறது. நீரின் வெப்ப நிலை உயர்வு மற்றும் அதன் விளைவாக ஆக்சிசன் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவை மீன்கள் போன்ற உயிரினங்களைக் கொன்று உணவுச் சங்கிலியின் இயல்பையே சீர்குலைத்து, உயிரியற் பல்வகைமைக்கும் கேடு விளைவிக்கிறது. இத்தகு சூழலானது வெப்பநிலை உயர்வை அல்லது மாற்றத்தை விரும்பக்கூடிய உயிரினங்களின் படையெடுப்பை ஊக்குவிக்கிறது.[5][6]:375

வெப்ப மாசுபாட்டினை ஏற்படுத்தும் மூலங்களும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்[தொகு]

ஜெர்மனி, டோர்ட்மன்ட், குத்சவ் நீப்பர் மின் நிலையகுளிர்விப்பு கோபுரம்

தொழிற்துறை கழிவுநீர்[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஏற்படும் வெப்ப மாசுபாட்டில் 75 முதல் 80 விழுக்காடானது மின் உற்பத்தி நிலையங்களின் கழிவு நீரால் ஏற்படுவதாகும்.[6]:376 இது தவிர மீதமுள்ள வெப்ப மாசுபாடானது, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், காகித ஆலைகள், எஃகு ஆலைகள், வேதி ஆலைகள் மற்றும் உலைகளினால் ஏற்படுபவையாகும்.[7]:4-2 [8]

இவ்வகை ஆலைகள் மற்றும் நிலையங்களிலிருந்து வரப்படும் வெப்ப நீரானது பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி குளிர்விக்கப்படலாம்.

வெப்ப மாசுபாட்டிற்கான மிகப்பெரும் காரணியாக இருக்கக்கூடியது ஓடிசி என அழைக்கப்படும் ஒரே முறை குளிர்விப்பு என்ற முறையாகும். இந்த முறையானது மேலே குறிப்பிடப்பட்ட முறைகளைப் போன்று வெப்பநிலையைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு திறன் மிக்க முறையில் குறைப்பதில்லை. ஒரு மிகப்பெரிய அதாவது 500 மில்லியன் காலன்கள் அளவிற்கு நீரை வெளியேற்றும்மின் உற்பத்தி ஆலையானது இந்த அமைப்பிலிருந்து வெளிவரலாம்.[10] இந்த ஓடிசி வகை குளிர்விப்பான்கள் இதர வகை குளிர்விப்பான்களை விட சராசரியாக 10°செல்சியசு அளவிற்கு நீரை அதிக வெப்பமாக வெளியேற்றுகின்றன.[11] உதாரணமாக, சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருந்த போட்ரிரோ மின் உற்பத்தி நிலையம் (2011-இல் மூடப்பட்டது) ஓடிசி வகை குளிர்விப்பானைப் பயன்படுத்தி நீரைக் குளிர்வித்து வெளியேற்றியது. இந்த நிலையத்திலிருந்து வெளிவந்த நீரானது சான் பிரான்சிஸ்கோ விரிகுடா சூழலியல் வெப்பநிலையை விட 10 °செல்சியசு (20 °பாரன்ஹீட்டு) அதிக வெப்பநிலையைக் கொண்டிருந்தது.[12] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்த 1200-இற்கும் அதிகமான நிறுவனங்கள் ஓடிசி வகை குளிர்விப்பான்களைப் பயன்படுத்தி வந்தன.[7]:4-4

நீர்த்தேக்கங்கள்[தொகு]

மனிதனால் உருவாக்கப்பட்ட அணைகளில் நீர் அடுக்குகள் உருவாகும் போது, கீழே உள்ள அடுக்குகளில் வெப்பநிலை வியத்தகு அளவில் குறைகிறது. இந்த குளிர்ந்த நீரை அடியில் இருந்து இயற்கையான வடிகால்களில் வெளியிடும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன.[13] நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெப்பமான மேற்பரப்பு நீரை வெளியிடும் வகையில் அணையை வடிவமைப்பதன் மூலம் இது குறைக்கப்படலாம்.[14]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. US EPA, REG 10 (2016-08-19). "Brayton Point Station Power Plant, Somerset, MA: Final NPDES Permit". www.epa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "King County's West Point Treatment Plant A 90-Day Recovery to NPDES Permit Compliance Following Catastrophic Flooding and Plant Shutdown Due to Effluent Pump Station and Equipment Failures". Proceedings of the Water Environment Federation. 2018-01-01. pp. 3392–3407. doi:10.2175/193864718825135603. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  4. "Protecting Water Quality from Urban Runoff". Washington, D.C.: EPA. February 2003. Fact Sheet. EPA 841-F-03-003.
  5. Goel, P.K. (2006). Water Pollution - Causes, Effects and Control. New Delhi: New Age International. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-224-1839-2. 
  6. 6.0 6.1 Laws, Edward A. (2017). Aquatic Pollution: An Introductory Text (4th ). Hoboken, NJ: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781119304500. https://books.google.com/books?id=V5D2DQAAQBAJ. 
  7. 7.0 7.1 Technical Development Document for the Final Section 316(b) Existing Facilities Rule (PDF) (Report). ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம். May 2014. EPA 821-R-14-002.
  8. Technical Development Document for the Final Section 316(b) Phase III Rule (PDF) (Report). ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம். June 2006. EPA 821-R-06-003. Chapter 2.
  9. Profile of the Fossil Fuel Electric Power Generation Industry (PDF) (Report). Office of Compliance, Sector Notebook Project. ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம். 1997. p. 24. EPA 310-R-97-007. Archived from the original on 2011-02-03.
  10. "Freshwater Use by U.S. Power Plants". Cambridge, MA: Union of Concerned Scientists. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  11. Madden, N.; Lewis, A.; Davis, M. (2013). "Thermal effluent from the power sector: an analysis of once-through cooling system impacts on surface water temperature". Environmental Research Letters 8 (3): 035006. doi:10.1088/1748-9326/8/3/035006. Bibcode: 2013ERL.....8c5006M. 
  12. California Environmental Protection Agency. San Francisco Bay Regional Water Quality Control Board. "Waste Discharge Requirements for Mirant Potrero, LLC, Potrero Power Plant." பரணிடப்பட்டது 2011-06-16 at the வந்தவழி இயந்திரம் Order No. R2-2006-0032; NPDES Permit No. CA0005657. May 10, 2006.
  13. "Cold water pollution". Fishing/Habitat management. Parramatta NSW: Department of Primary Industries, New South Wales Government. 27 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  14. Mollyo, Fran (15 September 2015). "A happier environment for fish". Phys.org. ScienceX.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_மாசுபாடு&oldid=3641680" இலிருந்து மீள்விக்கப்பட்டது