உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலச்சினை

உலகம் முழுவதும் இருந்து தமிழில் வெளியிடப்பட்டு வரும் சிற்றிதழ்களை ஒருங்கிணைத்து அவற்றுடனான நட்புறவை வளர்த்துக் கொள்வதுடன் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தை வல்லிக்கண்ணன் தொடங்கி வைத்தார். "எழுதுகோள் எங்கள் கூர், சமூகப் பிணி அறுக்கும் வேர்" என்ற வாசகத்தை இச்சங்கத்திற்கான சிறப்பு வாசகமாகக் கொண்டுள்ளது. இச்சங்கத்தின் தலைவராக திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்த வதிலை பிரபா என்பவர் இருந்து வருகிறார். இந்தச் சங்கத்திற்கு இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வெளியிடப்படும் தமிழ்ச் சிற்றிதழ்களின் வெளியீட்டாளர்கள், இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் சிற்றிதழ்களின் வெளியீட்டாளர்கள்/ஆசிரியர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நோக்கம்[தொகு]

சிற்றிதழாளர்களை ஒருங்கிணைத்து, சிறப்பாக இதழ் நடத்த ஆலோசனைகள் வழங்குவது, தொடர்ந்து இயங்குவதற்காக உற்சாகப்படுத்துவது போன்றவைகளை நோக்கமாகக் கோண்டு இச்சங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மாநாடுகள்[தொகு]

உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்கம் இதுவரை ஆறு மாநாடுகளை நடத்தியுள்ளது.