போச்சம்பள்ளி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போச்சம்பள்ளி வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக போச்சம்பள்ளி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 37 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

போச்சம்பள்ளி சந்தை புகழ்பெற்றது. போச்சம்பள்ளியில் அரசு பள்ளிகள் மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு உள்ளன

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 182,310 ஆகும். அதில் 93,602 ஆண்களும், 88,708 பெண்களும் உள்ளனர். 45,413 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 94.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 72.55% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19953 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 881 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 23,156 முறையே மற்றும் 622 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.44% , இசுலாமியர்கள் 3.18%, கிறித்தவர்கள் 0.25% மற்றும் பிறர் 0.04% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போச்சம்பள்ளி_வட்டம்&oldid=3657594" இலிருந்து மீள்விக்கப்பட்டது