விக்கிப்பீடியா பேச்சு:குறுங்கட்டுரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்காட்டி, வழிகாட்டி என்பது போல Tagம் ஒரு தன்மையைக் காட்டிக் கொடுப்பதால் Tagக்கு இணையான மொழி பெயர்ப்பாக "காட்டி" என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன். If you have any other suggestion for the word, please tell me.--ரவி (பேச்சு) 15:58, 30 மார் 2005 (UTC)

குறுங்கட்டுரை என்பதற்கு சற்று விளக்கம் கொடுக்கலாமா? ஒரு பந்தி என்பது ஒரு வரி முதல் 100 வரி வரைய அமையலாம் அல்லவா? ஆகவே குறுங்கட்டுரை எத்தனை வரிகளுக்கு உட்பட்டது என்றோ அல்லது எத்தனை KB உட்பட்டது என்றோ இருந்தால் என்ன? --Anton (பேச்சு) 17:40, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அன்டன், இந்த முக்கியமான கேள்விக்கு இப்பொழு தான் என்னால் விடை கூற முடிகிறது. பார்க்க: http://shijualex.wordpress.com/2013/01/27/analysis-of-the-indic-language-statistical-report-2012/ . எடுத்துக்காட்டுக்கு, மூன்று கட்டுரைகளை எடுத்துக்கொள்வோம்.

மூன்று கட்டுரைகளிலுமே தேவைப்படும் அளவு குறைந்தபட்ச தகவல் உள்ளன. நாம் வலியுறுத்தும் மூன்று வரி கட்டுரையளவைத் தாண்டி உள்ளன. இருந்தாலும், byte அளவில் மிகக் குறைவாகவே உள்ளன. எல்லா கட்டுரைகளையும் 10 kbஐத் தாண்டி எழுதுவது இயலாத காரியம். தற்போதைய வளர்ச்சி நிலையில் பயனர்களை அயரச் செய்வதாகவும் இருக்கலாம். ஆனால், ஓரளவு அனுபவம் பெற்ற பயனர்களேனும் எடுத்த எடுப்பிலேயே 5 kb அளவுக்குக் கூடுதலாக எழுதுவது உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும். தற்போது 33% கட்டுரைகள் மட்டுமே 5 kb அளவைத் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் சேகரிக்க இயலாத கட்டுரைகளுக்கும் புதிய பயனர்களுக்கும் மட்டும் 3 வரியளவு பரிந்துரையைத் தரலாம். மற்ற கட்டுரைகள் அனைத்தையும் 2 kb அளவையாவது தாண்ட வைக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், 5 kbக்கு குறைவானவற்றை குறுங்கட்டுரையாக கருதலாம். 5 kb அளவில் ஒரு நல்ல கட்டுரையைத் தரலாம் என்பதற்கு நரம்பணு கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. இது குறித்து மற்றவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 17:23, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

kb அளவைக் காட்டிலும் வார்த்தை எண்ணிக்கை பொருத்தமான வரையறையாக இருக்குமென நினைக்கிறேன். விக்கியிடை இணைப்புகள், வார்ப்புருக்கள், தகவல்பெட்டிகள், சான்றுகள் போன்றவை பைட் அளவை பெரிதாகக் காட்டும். எனவே கட்டுரை உரையின் வார்த்தை எண்ணிக்கை அதை விட கொஞ்சம் தேவலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:11, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]
கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் கட்டுரையின் பைட் அளவை இலகுவாக காண முடிகிறது. அது போல் சொற்களின் எண்ணிக்கையை இலகுவாக அளப்பதற்கும் வழி இருந்தால், அதனையும் ஒரு வரையறையாகக் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 18:25, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மறுமொழிக்கு நன்றி! கட்டுரை அடிப்படையான விடயங்களை மட்டும் கொண்டிருப்பின் குறுங்கட்டுரையெனவும், அடிப்படை விடயங்கள் உட்பட்ட மேலதிக விடயங்கள் இருப்பின் குறுங்கட்டுரை இல்லையென்று கருதலாமென நினைக்கின்றேன். அவ்வாறு இருப்பின் பல குறுங்கட்டுரை வார்ப்புருக்கள் நீக்கப்பட்டு, குறுங்கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவடையலாம்.

தகவல் சேகரிக்க இயலாத கட்டுரைகளை குறுங்கட்டுரைகளுக்குள் உட்படுத்துவதா? --Anton (பேச்சு) 07:11, 5 பெப்ரவரி 2013 (UTC)

என்னைக்கேட்டால் உட்படுத்துவதே நலம். நான் சில கட்டுரைகளை குறுங்கட்டுரைகளின் பகுப்புக்குள் சென்று விரிவாக்கியதுண்டு. கட்டுரை ஆசிரியரோ, ஆர்வலரோ அதிகத்தகவல்கள் தேவைபடுமாயின் அதை போடுவதே நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:30, 5 பெப்ரவரி 2013 (UTC)

👍 விருப்பம். 5 கி.பை கட்டுரைகளுக்குக் கீழ் உள்ளவற்றை குறுங்கட்டுரை என வரையறை எனக் கொண்டுவருவது குறுங்கட்டுரை எண்ணிக்கையை கூட்டுமென்றாலும், திருத்தி விரிவாக்க உதவியாயிருக்கும். தரம் அதிகரிக்கும். சமசுகிருத பாரதி என்ற நான் எழுதிய கட்டுரை உருப்படியாக உள்ளது எனக் கூறியது கண்டு மகிழ்ச்சி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 7 பெப்ரவரி 2013 (UTC)

பராமரிப்பு[தொகு]

குறுங்கட்டுரைகள் பற்றிய தீர்மானம் தேவைப்படுகிறது. புதுப் பயனர்களால் உருவாக்கப்படும் 3 வரிக்குக் குறைவான கட்டுரைகள் குறித்தகால நீக்கல் வார்ப்புரு இடப்பட்டு நீக்கப்படுகிறன்றது. ஆனால், பல ஆண்டுகளாக 3 வரிக்குக் குறைவாக கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் தேங்கிக்கிடக்கின்றன. பலவற்றுக்கு சான்று இல்லை. சிலவற்றை வார்ப்புருக்களே அலங்கரிக்கின்றன. அடிப்படைத் தகவல்கள் தராத குறுங்கட்டுரைகளால் என்ன பயன். அவை விக்சனரியில் இடம்பெறக்கூடியவையே. தமிழ் விக்சனரியில் இடம் பெறத்தக்க சொல்லுக்கு பொருள் மட்டும் கூறுவது போன்ற கட்டுரைகள் என்பது துரித நீக்கல் தகுதிகளில் ஒன்று. எனவே 3 வரிக்குக் குறைவான உள்ளடக்கம் உள்ள கட்டுரைகளை குறித்தகால நீக்கல் வார்ப்புரு இட்டு நீக்கலாம் என்பது எனது கருத்து. அல்லது புதுப் பயனர்களால் உருவாக்கப்படும் 3 வரிக்குக் குறைவான கட்டுரைகள் நீக்காது விடுவதோடு, துரித நீக்கல் தகுதிகள் கொள்கையினையும் மாற்ற வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:01, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

//3 வரிக்குக் குறைவான உள்ளடக்கம் உள்ள கட்டுரைகளை குறித்தகால நீக்கல் வார்ப்புரு இட்டு நீக்கலாம்// 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:55, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
மூன்று வரிக்கு குறைவான பழைய கட்டுரைகளை வார்ப்புரு இட்டு நீக்குவதால் பயனொன்றுமில்லை என்றே கருதுகிறேன். நீக்குவதாயின் நேரடியாக நீக்கலாம், ஏனெனில் பெரும்பாலான புதிய கட்டுரைகளே வார்ப்புரு இடப்பட்டு மேம்படுத்தப்படாமல் நீக்கப்படுகின்றன. பழைய கட்டுரைகளில் வார்ப்புரு இட்டால் மேம்படுத்தப்படும் என்பது சந்தேகமே. என்னைப் பொறுத்தவரை பழைய கட்டுரைகள் எனினும் முக்கிய கட்டுரைகள், மேம்படுத்தப்பட வாய்ப்புள்ள கட்டுரைகளை மூன்று வரிக்கு குறைவாய் இருந்தாலும் நீக்கத் தேவையில்லை எனக் கருதுகிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 09:44, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
வார்ப்புரு இடுவதனால் மேம்படுத்தப்படலாம் அல்லது விடப்படலாம். குறித்தகால நீக்கல் வார்ப்புரு பயனர்கள் (1)ஏற்கெனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தத் தூண்டலாம் (2) மூன்று வரிக்கு குறைவான புதிய கட்டுரைகளை உருவாக்கி அப்படியே விட்டுவிடும் போக்கை மாற்றலாம். மூன்று வரிக்கு குறைவான கட்டுரைகள் வருடக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், கலைக்களஞ்சியத்திற்கு என்ன பயன்? மேசாமல், விக்சனரியில் தொகுத்து விடலாமே. முக்கிய கட்டுரைகள் என்பதன் வரையறை என்ன? மூன்று வரிக்கு குறைவான பழைய கட்டுரைகள் எந்தவிதத்தில் முக்கிய கட்டுரைகள் ஆகலாம்? நான் சில கட்டுரைகளை எடுத்துக்காட்டுக்கு எடுத்து விளக்க முடியும். ஆனால் குறித்த கட்டுரையினை உருவாக்கியவரை நோகடிக்கச் செய்யலாம் என்பதால் தவிர்க்கிறேன். மேலும், "துரித நீக்கல் தகுதிகள்" பழைய, புதிய என்ற பாகுபாடு இல்லாமல் செயற்படுத்தப்பட வேண்டும். விதி/கொள்கை பொதுவாக இருக்க வேண்டும். கட்டுரையின் எண்ணிக்கையை விடுத்து, தரத்திலும் கவனம் செலுத்துவோம். --Anton·٠•●♥Talk♥●•٠· 11:26, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
//(2) மூன்று வரிக்கு குறைவான புதிய கட்டுரைகளை உருவாக்கி அப்படியே விட்டுவிடும் போக்கை மாற்றலாம்.// புதிதாக உருவாக்கப்பட்ட குறுங்கட்டுரைகளை வார்ப்புரு இட்டு நீக்குவதை வேண்டாம் எனச் சொல்லவில்லை. பழைய கட்டுரைகளை நீக்குவதால் பயனொன்றுமில்லை என்றே கூறுகிறேன். மேலும் இந்த மூன்று வரிக் கொள்கை எப்போது எதற்காக வந்தது எனக் கூற முடியுமா? அதற்கு முன்னால் எழுதப் பட்ட கட்டுரைகளை நீங்கள் எப்படி இந்தக் கொள்கையைப் பின்பற்றி எழுதியிருக்கப்பட வேண்டும் எனக் கூற இயலும். நீங்கள் கூறியது போல ஒரு வரிக் கட்டுரைகளாகவே தேங்கி விடக் கூடாது என்பதற்காகவே இக்கொள்கை வந்திருக்கலாம் (இதுபற்றி விவரம் அறிந்தவர்கள் கூறவும் kanags, Ravidreams). எனவே இனி எழுதப்படும் கட்டுரைகளை எப்போதும் போல வார்ப்புரு இட்டு நீக்கலாம், பழைய கட்டுரைகளை நீக்க வேண்டாம்(நீக்க அனைத்து பயனர்களின் ஒருமித்த முடிவை பெற்றால் எனக்கு பிரச்சனையில்லை). --சண்முகம்ப7 (பேச்சு) 12:06, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
முன்னால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு தற்போதைய கொள்கைகள் பொருந்தாதா? அப்படியாயின் {{சான்றில்லை}}, {{Refimprove}} போன்ற பிற வார்ப்புருக்ககளை முன்னால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு இட முடியாதா? மூன்று வரிக்கு குறைவான பழைய கட்டுரைகளின் தொடர்பில் த.வி.யின் அணுகுமுறை என்ன? பழைய, புதிய கட்டுரைகள் என்பதை எவ்விதம் அளவிடுவது? எ.கா: புரதச் சிறு நீர் கட்டுரை 16 திசம்பர் 2013‎ அன்று உருவாக்கப்பட்டது. இதை என்ன செய்வது? --Anton·٠•●♥Talk♥●•٠· 14:38, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
அன்டன் அதெப்படி சான்றில்லை போன்ற வார்ப்புருக்களையும், குறுங்கட்டுரையும் ஒன்றாக கருத முடியும். மன்னிக்கவும், உங்கள் உரையாடல் வாதத்திற்காக உரையாடுவது போல் உள்ளது :) . என்னுடைய நிலைப்பாட்டை நான் கூறிவிட்டேன். மற்ற பயனர்கள் சரி எனில் பழைய கட்டுரைகளிலும் வார்ப்புரு இட்டு நீக்குவதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. புதிய கட்டுரைகளில் வார்ப்புரு இடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது என்றே கருதுகிறேன், சில கட்டுரைகள் வேண்டுமென்றோ, கவனிப்பார் இல்லாமலோ வார்ப்புரு இடப்படாமல் இருந்திருக்கலாம், அதில் வார்ப்புரு இடுவதில் பிரச்சினையில்லை. மொத்தத்தில் சொல்லப் போனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் வார்ப்புரு இடுவதை நான் ஆதரிக்க மாட்டேன், வார்ப்புரு இடுவதே கட்டுரை மேம்படுத்தப்படும் என்பதற்காகத்தான், நம்மிடம் இருக்கும் வளத்தைக் கொண்டு அவ்வளவு கட்டுரைகளை ஓரிரு மாதங்களில் மேம்படுத்துவது என்பது நடவாத காரியம்--சண்முகம்ப7 (பேச்சு) 15:31, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் மூன்று வரிக் கொள்கை எப்போது எதற்காக வந்தது எனக் கூற முடியுமா எனக் கேட்டிருந்தீர்கள். ஆகவே கொள்கை அடிப்படையில், வார்ப்புருவின் நோக்கம் அடிப்படையில் உரையாடுவதாயின் எனக்கு மேலதிக விளக்கத்திற்கான விபரம் கேட்டேன். அதெப்படி உங்களுக்கு நான் வாதத்திற்காக உரையாடுவது போல் தெரிந்ததோ அறியேன். மேலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் வார்ப்புரு இட வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. துப்புரவு செயற்பாட்டில் ஈடுபடும்போது பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய மூன்று வரிக்கு குறைவான கட்டுரைகளைப் பார்க்க வேண்டி ஏற்படுகிறது. எனவே அவை மட்டில் என்ன செய்யலாம் என்பதும், த.வி இதை எவ்வாறு அணுகலாம் என்பதும் எனது கேள்வி. இதற்குப் பதில் பெற வேண்டிய கட்டாயம் துப்புரவு பணியில் ஈடுபடும் பயனாகளுக்கு ஏற்படுவது இயல்பு. என்னைப் பொறுத்தவரை குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். கண்டும் காணாமல் போக முடியாது, எனவே கேட்டேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:16, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
// ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் வார்ப்புரு இட வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. // // பல ஆண்டுகளாக 3 வரிக்குக் குறைவாக கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் தேங்கிக்கிடக்கின்றன. // விக்கி துவக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் கட்டுரைகள் வரும் (குறைந்த பட்சம் நூற்றுக் கணக்கில் ஆவது). //நீங்கள் மூன்று வரிக் கொள்கை எப்போது எதற்காக வந்தது எனக் கூற முடியுமா எனக் கேட்டிருந்தீர்கள். // மூன்று வரிக் கொள்கை பற்றி எங்கேயோ உரையாடியதாக நினைவு. இக்கொள்கை பல குறுங்கட்டுரைகளை ஒரே நேரத்தில் உருவாக்கி மேம்படுத்தாமல் இருப்பதை தடுப்பதற்காக வந்தது எனக் நினைக்கிறேன். Ravi தான் இதைப் பற்றி எங்கேயோ உரையாடியிருக்கிறார், அவரா, எங்கே போன்றவை சரியாக நினைவில் இல்லை. எனவே இந்த மூன்று வரிக் கொள்கையை அவ்வளவு இறுக்கமாக பார்க்கலாமா எனத் தெரியவில்லை. கொள்கை உரையாடலில் கலந்து கொண்டவர்கள் பதிலளித்தால் நல்லது. //துப்புரவு செயற்பாட்டில் ஈடுபடும்போது பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய மூன்று வரிக்கு குறைவான கட்டுரைகளைப் பார்க்க வேண்டி ஏற்படுகிறது. எனவே அவை மட்டில் என்ன செய்யலாம் என்பதும், த.வி இதை எவ்வாறு அணுகலாம் என்பதும் எனது கேள்வி// என்னைப் பொறுத்த மட்டில் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய கட்டுரைகளை ஒட்டு மொத்தமாக வார்ப்புரு இட வேண்டாம். இங்கு யாரும் குறையை கண்டும் காணாமல் போவதில்லை அன்டன் :). ,இயன்றளவு சரி செய்யவே அனைவரும் முயல்கிறோம்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:07, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
எனது கருத்து பற்றி உங்களுக்கு புரிதல் இல்லையென நினைக்கிறேன். மூன்று வரிக் கொள்கை/உரையாடல் பற்றி நான் கேட்கவில்லை. மேலும், பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய கட்டுரைகளுக்கு ஒட்டு மொத்தமாக வார்ப்புரு இட வேண்டும் என்பதல்ல என் கருத்து. தமிழ் விக்சனரியில் இடம் பெறத்தக்க சொல்லுக்கு பொருள் மட்டும் கூறுவது போன்ற கட்டுரைகள் நீக்கப்படலாம் என்பது துரித நீக்கல் தகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.--Anton·٠•●♥Talk♥●•٠· 17:56, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
1KB அளவிற்கு குறைவான கட்டுரைகள் 3000 உள்ளன(இவற்றில் 500+ பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்). சிலவற்றினைத் தவிர அனைத்தும் ஒன்று இரண்டு வரிகளையே கொண்டுள்ளன. இவற்றில் முக்கியமானவற்றை அறிந்து மேம்படுத்துதல் வேண்டும். --அஸ்வின் (பேச்சு) 17:36, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
கட்டுரைகள் மூன்று வரிக்குக் குறையாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கைக்குக் குறிப்பான அடிப்படைகள் எதுவும் இல்லை. ஆனால், ஏதாவது ஒரு வரையறை இருக்கவேண்டும் என்பதற்காகவே குறைந்தது மூன்று வரியாவது இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்திலேயே பயனர் கோபியின் இது தொடர்பான முன்மொழிவில் கலந்துரையாடி இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்காலத்திலேயே பல கட்டுரைகள் மூன்று வரிக்கு மேலாக இருக்கும்படி விரிவாக்கப்பட்டன, வேறு பல கட்டுரைகள் நீக்கப்பட்டன. அத்துடன், மூன்று வரிக்குக் குறைவான பல கட்டுரைகள் நீக்கப்படாமலும், விரிவாக்கப்படாமலும் தொடர்ந்து இருந்தன. இவ்வாறான கட்டுரைகளைப் பல பயனர்கள் எழுதியிருக்கிறார்கள் (நானும் அடங்கலாக). பயனர்கள் மிகவும் குறைவாக இருந்த அக்காலத்தில் இந்த விதியை இறுக்கமாகக் கடைப்பிடித்தால் ஏராளமான கட்டுரைகளை நீக்க வேண்டியிருக்கும் என்பதனாலேயே இது இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அத்தோடு, அச்சில் வெளிவந்த பெரிய கலைக்களஞ்சியங்களில் கூடச் சில தலைப்புக்களுக்கு மூன்று வரிகளுக்குக் குறைந்த விளக்கங்கள் இருப்பதும் சில பயனர்களால் எடுத்துக் காட்டப்பட்டது. ஆனாலும், அவ்வப்போது இந்தப் பிரச்சினை தலைதூக்கி வந்தது. அந்த நேரங்களில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறித்த கட்டுரைகளை எழுதிய பயனர் பக்கங்களில் அறிவித்தல் கொடுக்கப்பட்டதும் உண்டு. இவ்வாறு சில கட்டுரைகளை நானும் விரிவுபடுத்தியுள்ளேன்.
கொள்கையளவில் அன்டனுடைய நிலைப்பாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த விதியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதானால் ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை நீக்கவேண்டி வரும். இவ்வாறான ஒரு நிலையைத் தவிர்ப்பது நல்லது. குறுங்கட்டுரைகள் பல விரிவாக்கக் கூடிய தலைப்புக்களிலானவை. அவற்றை இனங்கண்டு விரிவாக்குவதற்குத் திட்டமிட்ட முறையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறான புதிய கட்டுரைகள் உருவாவதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது நல்லது. குறிப்பாக, குறுங்கட்டுரைகளைப் பெருமளவில் ஒரு பயனர் எழுதுவதைத் தடுக்க வேண்டும். புதிய பயனர்கள் விடயத்தில் சற்று நிதானமாக அணுகுவதே உகந்தது.
ஒவ்வொரு பயனரும் தொடங்கிய கட்டுரைகளில் இவ்வாறு மூன்று வரிக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளை தன்னியக்கமாகப் பட்டியலிட முடியுமா? அவ்வாறு செய்ய முடிந்தால் அந்தப் பட்டியலுக்கு இணைப்புக் கொடுத்துப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவித்தல் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல கட்டுரைகளை விரிவாக்க வாய்ப்பு ஏற்படும். ---மயூரநாதன் (பேச்சு) 18:48, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்நான் உட்பட பலரும் மூன்று வரிக்குக் குறைந்த கட்டுரைகளைக் கொண்டிருக்கிறோம். ஒரு பொறிமுறை இல்லாவிட்டால் இது பாரிய தேக்கமாகிவிடும். ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை நீக்க வேண்டாம் ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்ற கணக்கில் வார்ப்பு இடலாம். ஆம் புதிய பயனர்கள் விடயத்தில் சற்று நிதானமாக அணுகலாம். பல முறை நானே குறித்த கால நீக்கல் வார்ப்புரு இட்டு, குறித்த காலம் முடிவடையும்போது குறைந்தது ஐந்து வரிகளுக்கு மேம்படுத்தியுள்ளேன். ஆனால், குறித்த விடயத்தில் அறிவு இல்லாதவிடத்து இது சாத்தியமற்றுப் போகிறது. சமூக அறிவியல் என்ற இக்கட்டுரை முக்கியத்துவம் மிக்கது. பல்கலைக்கழக பாடங்களில் முக்கியமானவற்றில் ஒன்று. ஆனால் 7 வருடங்களாக ஒரு வரியுடனேயே இருக்கிறது. வார்ப்புருவும், பட்டியலும் அதற்குத் தோற்றப் பொலிவை ஏற்படுத்துகிறது. இவ்விடயத்தைத் தேடி வருபவர்களுக்கு இதன் பயன் கேள்விக்குறியே (This article ranked 1243 in traffic on ta.wikipedia.org). --Anton·٠•●♥Talk♥●•٠· 03:11, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியில் (நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் போது) மொத்தம் 58,711 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் 2,609 கட்டுரைகள் (4.45%) 1000 பைட்டிலும் பார்க்கக் குறைவாகவும், 18,161 கட்டுரைகள் (30.93%) 2000 பைட்டிலும் பார்க்கக் குறைவாகவும், 40,856 கட்டுரைகள் (69.59%) 5000 பைட்டிலும் பார்க்கக் குறைவாகவும் உள்ளன. இவற்றை விரிவாக்க ஒரு தனித்திட்டம் கொண்டுவரலாமே! நான் முன்னமே இதைப்பற்றி யோசித்திருந்த போதிலும் கட்டுரைப்போட்டியின் காரணமாக செயற்படுத்தமுடியவில்லை. கட்டுரைப்போட்டி முடிந்தவுடன் சூட்டோடு சூடாக இத்திட்டத்தையும் கொண்டுவந்துவிடலாம்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 22:30, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதனின் கருத்தை ஏற்கிறேன். இப்பக்கத்தில் பைட்டு அளவுகளில் குறுங்கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சிறீகர்சன் கூறிய 2,609 (<1000 பைட்டு) கட்டுரைகளில் பெரும்பாலானவை பக்கவழிமாற்றக் கட்டுரைகள் என நினைக்கிறேன். ஒன்று, இரண்டு கட்டுரைகளுக்கும் பக்கவழிமாற்றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை இனங்கண்டு நீக்க வேண்டும். (இரண்டு கட்டுரைகளிலும் dablink மூலம் மற்றைய கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம்). பக்கவழிமாற்றுகளில் (சிவப்பு இணைப்புகளைத் தவிர்த்து) குறைந்தது மூன்று கட்டுரைகளாவது பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும் என்ற வழிமுறை அவசியம்.--Kanags \உரையாடுக 22:41, 28 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:முதல் கட்டுரை என்ற பக்கத்திலும் உங்கள் கட்டுரையை ஆரம்பித்த பின்னர் இயன்றவரை மூன்று வரிகளுக்கு மேல்/1000 பைட்டுக்கு மேல் விரிவுபடுத்துங்கள். என்ற வரியை உபயோகிக்காலாமா? இதன் மூலம் இப்படியான கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை குறைக்கலாம் என நினைக்கின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:19, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:25, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மூன்று வசனங்கள், முறையான பகுப்புகள், வெளி இணைப்புகள், இடையிணைப்புகள் உள்ள குறுங்கட்டுரைகள்[தொகு]

மூன்று வசனங்கள், முறையான பகுப்புகள், வெளி இணைப்புகள், இடையிணைப்புகள் உள்ள குறுங்கட்டுரைகளை நீக்கவும் என்று வார்ப்புரு இடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த விக்கி கொள்கைகளுக்கு ஏற்றமாதிரியே இக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொள்கைகள் மாற்றுவது ஆயின், இக் கட்டுரைகளைத் தவிர்த்துச் செய்யவும். மேலும், போதிய அவகாசம் கொடுத்துச் செய்ய வேண்டும். மேலும், புதுப்பயனர்களின் குறுங்கட்டுரைகளை தயந்து உடனடியாக நீக்க வேண்டாம். --Natkeeran (பேச்சு) 16:32, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தற்போது உள்ள விதிகளுக்கு உட்படாத நான் தொடங்கிய குறுங்கட்டுரைகளின் பட்டியலைப் எப்படிப் பார்ப்பது. இவ்வாறான வசதியை எல்லாப் பயனர்களுக்கும் தெளிவுபடுத்தி, அவர்கள் அக் கட்டுரைகளை மேம்படுத்த போதிய அவகாசம் தரவும். --Natkeeran (பேச்சு) 16:35, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நற்கீரன் கருத்தை வழிமொழிகிறேன். ஒரே மாதத்தில் மேம்படுத்தாவிடில் நீக்கக் கோருவது மன உளச்சலை அதிகப்படுத்தும் செயல். மேலும், சில கட்டுரைகளுக்கு அதிக தகவல்கள் கிடைக்காமல் இருக்கலாம். புதிய தொழில்நுட்பத்திற்கு சொற்கள், தகவல்கள் இல்லாமையாலும், போதிய அறிவு இல்லாமையாலும் கட்டுரை குறுங்கட்டுரையாக எழுதப்பட்டிருக்கலாம். இவற்றை நீக்கவது சரியல்ல. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:49, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நான் எழுதிய சுமார் 10 வரையான குறுங்கட்டுரைகளுக்கு நீக்கல் வார்ப்புரு இடப்பட்டு இருந்தது. அவற்றுள் பாரதி கிருஷ்ணகுமார் என்ற ஒரு கட்டுரையைத் தவிர எல்லாம் மூன்று வசனங்கள், பொருத்தமான பகுப்பு, வெளி இணைப்புகள் (இருந்தால்), மேற்கோள்கள் (இருந்தால்) தரப்பட்டு இருந்தன. ஆகவே பிற பல கட்டுரைகளில் இவ்வாறு தவறாக சேர்க்கப்பட்டு இருக்கலாம். விதிகளை மாற்றுவது என்றால், தெளிவாக, கூட்டாக முடிவெடுத்து, அறிவித்து, போதிய கால அவகாசம் கொடுத்துச் செய்ய வேண்டும். புதுப் பயனர்கள் உருவாக்கும் குறுங்கட்டுரைகள் தொடர்பாக மேலும் நெளிவான ஒரு அணுகுமுறை தேவை. --Natkeeran (பேச்சு) 17:06, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஏன் தொழிற்றுறைச் சனநாயகம் கட்டுரைக்கு நீக்கல் வார்ப்புரு இடப்பட்டது. மூன்று வசனங்கள், 1750 மேற்பட்ட பைட்டுக்கள். என்ன விதியை வைத்து இந்த வார்ப்புருக்கள் சேர்க்கப்பட்டது என்று முற்றாக விளங்கவில்லை? --Natkeeran (பேச்சு) 17:10, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தவறான நீக்கல் வாருப்புர்க்களை நீக்கவும் - அன்ரன்/பிறருக்கான வேண்டுகோள்[தொகு]

நீங்கள் அண்மையில் சேர்த்த நீக்கள் வார்ப்புருக்கள் பல தவறான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

  • ஆலமரத்தடி உரையாடல் இணக்க முடிவு ஒன்று எடுக்க முதல் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.
  • தற்போதிய விதிகளுக்கு ஏற்ற கட்டுரைகள் பலவற்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன.
  • என்ன விதிகள் என்று தெளிவில்லாமலே இணைக்கப்பட்டுள்ளன.
  • புதிய பயனர்களை நெளிவாகக் கையாழ வேண்டும் கருத்து எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கருதுகிறேன்.

மேலும் "ஒவ்வொரு பயனரும் தொடங்கிய கட்டுரைகளில் இவ்வாறு மூன்று வரிக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளை தன்னியக்கமாகப் பட்டியலிட முடியுமா? அவ்வாறு செய்ய முடிந்தால் அந்தப் பட்டியலுக்கு இணைப்புக் கொடுத்துப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவித்தல் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல கட்டுரைகளை விரிவாக்க வாய்ப்பு ஏற்படும்". மேலும், போதிய அவகாசம் தரப்பட வேண்டும்.

ஆகவே, மேற்கூறிய காரணங்களுக்காக அந்த வார்ப்புருக்களை நீக்கவும். மிகத் தெளிவான ஒருவரிக் கட்டுரைகளைத் தவிர்த்து. மேலும் தகவல்களுக்கு ஆலமரத்தடியைப் பார்க்கவும். --Natkeeran (பேச்சு) 17:17, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

எல்லா கேள்விகளுக்கு ஒரே இடத்தில் இங்கே பதில்கள்:

  1. கட்டுரைகளுக்கு குறித்தகால நீக்கல் வார்ப்புரு இடப்பட்டு நீக்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. தமிழ் விக்சனரியில் இடம் பெறத்தக்க சொல்லுக்கு பொருள் மட்டும் கூறுவது போன்ற கட்டுரைகள் நீக்கப்படலாம் என்ற துரித நீக்கல் தகுதியும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஆகவே புதிதாக நான் எதனையும் செய்ய முற்படவில்லை.
  2. புதுப்பயனர்களின் குறுங்கட்டுரைகளை உடனடியாக நீக்கப்படுவதில்லை. அவர்களை அணுகுவதில் வேறான நடைமுறை உள்ளது. புதுப்பயனர்கள் விடயத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், குறிப்பிடுங்கள் அது பற்றி வேறாக உரையாடலாம்.
  3. 19 - 29 திசம்பருக்குள் (ஒரு சில தவிர்த்து) உருவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கே குறித்தகால நீக்கல் வார்ப்புரு இட்டுள்ளேன். முன்னைய கட்டுரைகளுக்கு என்ன செய்யலாம் என்பது இன்னும் உரையாடலில் உள்ளது.
  4. சில கட்டுரைகளுக்கு அதிக தகவல்கள் கிடைக்காமல் இருந்தால் "வேலை நடக்கிறது" வார்ப்புருவை இட்டு குறிப்பிட்ட காலத்தில் மேம்படுத்தலாம். தவறும் பட்சத்தில் குறித்தகால நீக்கல் வார்ப்புரு இடப்படும். அல்லது உங்கள் மணல் தொட்டியில் வைத்து தொகுத்து பதிவேற்றலாம். விக்கி யாரையும் குறித்த காலத்தில் இந்தளவு கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையினை வைக்கவில்லை.
  5. நான் உருவாக்கிய கட்டுரைகள் மூன்று வரிக்கட்டுரையாக இருந்தால் தயங்காது யாராவது குறித்தகால நீக்கல் வார்ப்புருவை இட்டுவிடுங்கள். நான் உருவாக்கிய கட்டுரை என்பதைவிட த.வி.யில் நல்ல கட்டுரை இருக்க வேண்டும் என்பதையே பார்க்க விரும்புகிறேன்.
  6. எனக்கு இங்கு ஓர் ஐயம் உள்ளது. மூன்று வரிக்கட்டுரை என்பது, மூன்று வரிக்கும் குறைவான கட்டுரையா அல்லது மூன்று வரிக்கு உட்பட்ட கட்டுரையா? நீங்கள் குறிப்பிடுவதுபோல் மூன்று வரிக்கும் குறைவான கட்டுரை என்றால் மூன்று வரிக்கு கொண்ட கட்டுரைகளுக்கு குறித்தகால நீக்கல் வார்ப்புரு தேவையில்லையா? விக்சனரியில் இடம் பெறத்தக்க சொல்லுக்கு பொருள் மட்டும் கூறுவது போன்ற மூன்று வரிக்கு கொண்ட கட்டுரைகளை என்ன செய்யலாம்? மேலும் இதில் வார்ப்புரு, பிற இணைப்புக்கள் என்பன இருந்தால், என்ன செய்யலாம்.
  7. தொழிற்றுறைச் சனநாயகம் "விக்கியாக்கம்" வார்ப்புரு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தவறுதலாக குறித்தகால நீக்கல் வார்ப்புரு தொடுப்பிணைப்பி மூலமாக இட்டுவிட்டேன். அத்தவறுக்கு என் வருத்தங்கள். வார்ப்புருவை நீக்கியதற்கு நன்றி. ஆனால், அது விக்கியாக்கத்திற்கு உட்படாமல் இருப்பது முறையல்ல.
  8. நக்கீரன், சில இடங்களில் "விக்கியாக்கம்" ஏன் இடப்பட்டது என்ற கேள்வி எழுப்பியிருந்தீர்கள். en:Template:Wikify இவ்வாறான இடங்களில் "விக்கியாக்கம்" இடப்படலாம். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் "சான்றில்லை" கூடுதலாக இடப்படலாம்.
  9. விக்கி யாருக்கும் சொந்தமல்ல. அதுபோல் யாரும் விக்கியில் எக்காலத்திற்கும் இருக்கப்போவதில்லை. இன்று நாம் முறையாகச் செய்யும் செயற்பாடுகள்தான் நாளை வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அதைவிடுத்து 2 வரி, 3 வரி கட்டுரைகள்தான் உருவாக்கலாம் என்றால் அதை முறையாக கொள்கையாக்குங்கள், அதற்குக் கட்டுப்படுவோம். எனக்கும் 3 வரிக் கட்டுரைகள் உருவாக்குவது இலகுவே. விரைவில் 1000, 2000 கட்டுரைகளை எட்டிவிடுவேன்!

--Anton·٠•●♥Talk♥●•٠· 03:42, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

குறைந்தது மூன்று வரிகள் (வசனங்கள்) இருக்க வேண்டும் என்பது தான் நடைமுறை. மேலும் தொழிற்றுறைச் சனநாயகம் விக்கிநடையிலேயே எழுதப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 03:59, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
தொழிற்றுறைச் சனநாயகம் கட்டுரைக்கு "தரமுயர்த்து" வார்ப்புருவா இடப்பட வேண்டும்? 6வது வரிக்கு விபரமான விளக்கம் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும். உமா பத்மநாபன், விஜி சந்தரசேகர் ஆகிய கட்டுரைகள் மூன்று வரிகளுக்கு உட்படுகின்றனவா? --Anton·٠•●♥Talk♥●•٠· 04:10, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு (நடிகைகள் பற்றிய) கட்டுரைகளுக்கும் நிறையத் தகவல்கள் ஆங்கில விக்கியில் உள்ளன. speed-dlete வார்ப்புரு சேர்த்துவிட்டு பயனருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். மயூரநாதன் கூறியவாறு, //இவ்வாறான புதிய கட்டுரைகள் உருவாவதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது நல்லது.// தொழிற்றுறைச் சனநாயகம் போன்ற கட்டுரைகளை அப்படியே விட்டு விடுவது நல்லது. துறைசார் அனுபவம் உள்ளவர்கள், அல்லது துறைசார் மொழிபெயர்ப்பாளர்களே இதைப் போன்ற கட்டுரைகளை மேம்படுத்த முடியும் என நினைக்கிறேன். மற்றும் படி இக்கட்டுரையில் குறைந்தது ஒரு மேற்கோளும், வெளியிணைப்புகள் ஒன்றிரண்டும் தந்தால் போதுமானது.--Kanags \உரையாடுக 04:30, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி, இதைத்தான் நான் செய்ய முற்பட்டபோது மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் இரண்டாம் கருத்தினை என்னால் ஏற்றுக் கொள்ளவதில் சிக்கல் உள்ளது. யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற அடிப்படைக் கொள்கையினையே இது கேள்விக்குட்படுத்துகிறது. எக்கட்டுரையாயினும் சான்று இல்லாவிட்டால், தரமுயர்த்த வேண்டுமாயின், விக்கிப்படுத்த வேண்டுமாயின் யாரும், யார் உருவாக்கிய கட்டுரையினை நோக்கியும் கேள்வி எழுப்பலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:12, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
கட்டுரைத் தகவலில் தவறிருந்தால் கேள்வி எழுப்பலாம். ஒரு குறிப்பிட்ட கேள்விக்குட்பட்ட ஒரு தகவலுக்கு சான்று கோரலாம். தரமுயர்த்துவது என்பது இப்போதுள்ள (3 வரிக் கட்டுரைகள் மட்டுமல்லாது) அனைத்துக் குறுங்கட்டுரைகளுக்கும் பொருந்தும். மற்றது, விக்கிப்படுத்துவது என்றால் என்ன? கட்டுரையில் தரப்பட்டுள்ள வரிகள் அனைத்தும் விக்கிநடையில் உள்ளனவா என்பது மட்டுமே. எனவே, குறிப்பிட்ட கட்டுரையில், எனது அறிவுக்கு எட்டிய வரையில் தகவல் எதுவும் கேள்விக்குட்படுத்தப்பட வில்லை. இரண்டு வரிக் கட்டுரையுமல்ல. மேற்கோள் மட்டுமே தேவையாயுள்ளது.--Kanags \உரையாடுக 05:28, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
அன்ரன், தற்போது உள்ள விதி ஒரு குறுங் கட்டுரை மூன்று வரிகளாவது கொண்டு இருக்க வேண்டும். அவற்றை நீக்கவும் என்று வார்ய்ப்புரு இட்டது தவறு. இதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மேலும் புஷ்பம் ராமலிங்கம் அமுதன் விக்கியாக்கம் இட்டது தவறு என்று கருதுகிறேன். நீங்கள் அதற்கு சான்றில்லை என்று சேர்த்து இருக்கலாம். எ.கா தமிழ் ஆவணப்படங்கள் பற்றி எழுதிய பல கட்டுரைகளை நான் கவனமாக 3 வரிகளாகவது அமையும் படியே எழுதி இருந்தேன். அவற்றில் பலவற்றுக்கு நீக்கல் வார்ப்புரு இட்டுள்ளீர்கள். நான் எழுதியவற்றில் 3 வரிக்கு குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. அந்தப் பட்டியலைத் தந்தால் மேம்படுத்தி விடுவேன். மேலும், விக்கியாக்கம் என்ற வார்ய்ப்புருவை விடுத்து, குறிப்பாக என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். யார் கட்டுரை, யார் கட்டுரை எழுதுகிறார்கள் என்பது ஒரு சிக்கலே இல்லை. ஆர்வம் இருப்பின் நிச்சியமாக 3 வரிக் கட்டுரைகள் எழுதுங்கள். 3 வரிக் கட்டுரைகள் தான் ஆக்க வேண்டும் என்று யாரும் கோரவில்லை, ஆனால் அதற்கான சுதந்திரம் பறிக்கப்படல் ஆகாது. --Natkeeran

பொதுவான கருத்துகள்[தொகு]

கடந்த இரு மாதங்களாக முனைப்பாக துப்புரவு பணியாற்றி வரும் நந்தகுமார், செயரத்தினா, ஆன்டன் ஆகியோருக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவில் பல துப்புரவுப் பணிகள் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை இப்போதாவதும் தகுந்த இடைவெளிகளிலும் சீராக்குவதற்குப் போதிய கவனமும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதே வேளை, நீக்கத்தை மட்டுமே தீர்வாக கொள்ளாமல் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை நல்கும் வகையில் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

எவ்வளவு பெரிய (ஆங்கில) விக்கிப்பீடியா கட்டுரையாக இருந்தாலும் கூட, முதல் சில வரிகளை மட்டும் படித்து பொருள் புரிந்து கொண்டு நகர்வோர் பலர் உள்ளனர். அச்சிடப்பட்ட தமிழ் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் உள்ளிட்டவற்றில் ஒரு சில வரிகளே ஒவ்வொரு தலைப்புக்கும் தரப்பட்டுள்ளன. எனவே, குறைவான வரிகள் உள்ளதால் பயனற்றது அன்றோ நிறைய வரிகள் இருந்தால் அதனால் மட்டும் அழிக்காமல் விட்டு விடலாம் என்றோ இல்லை. மயூரநாதன் மேலே விளக்கியபடி, பயனர்கள் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கருத்தாகக் கொண்டு சகட்டு மேனிக்கு ஒற்றை வரிக் கட்டுரைகளை உருவாக்கிச் செல்லக்கூடாது என்னும் நோக்கிலேயே குறைந்தது மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்ற வழிகாட்டல் உருவானது.

2012 நிலவரப்படி தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்றில் இரு பங்கு கட்டுரைகள் 5 kbக்கு குறைவானவையே. (நான் உட்பட) பலரும் தாங்கள் ஏற்கனவே உருவாக்கிய கட்டுரைகளை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக ஏற்கனவே சில முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் போதிய பயனைத் தரவில்லை. பெரும்பாலும், தாங்கள் உருவாக்கும் கட்டுரைகள் தவிர மற்ற கட்டுரைகளைக் கவனித்து மேம்படுத்துவோர் மிகச் சிலரே உள்ளனர். முக்கிய கட்டுரைகளை விரிவாக்குவதற்காக தொடர் கட்டுரைப் போட்டி, பரிசு என்று அறிவித்தாலும் அதன் விளைவும் மட்டுப்படுத்தப்பட்டதே. எனவே, ஏற்கனவே உள்ள (மூன்று வரிக்கு மேற்பட்ட ) கட்டுரைகளின் தரத்தை உயர்த்துவது குறித்தும் நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

துப்புரவுப் பணியாற்றுவோருக்கான வழிகாட்டலாக பின்வரும் முறையைப் பரிந்துரைக்கிறேன்:

  • விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரை, பழைய கட்டுரை, ஒரு விதி உருவாவதற்கு முன்பே உருவான கட்டுரை என்றெல்லாம் பாகுபாடுகள் இல்லை. விதிகள் எல்லா கட்டுரைகளுக்கும் பொருந்தும். புதிய பயனர்களை அரவணைக்கும் பொருட்டு மட்டும் சில இடங்களில் இளகிப் போகலாம்.
  • தெளிவாக பிரச்சினைகளை முன்வைத்துப் பேசினால் மட்டுமே தீர்வை நோக்கி நகர முடியும். இன்னார் / சிலர் மனம் நோவார்கள் என்று விதிகளைக் கண்டு கொள்ளாமல் விடுவதோ பூடகமாகப் பேசுவது நல்ல போக்கு அன்று.
  • ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள் சரியே. விக்சனரிக்கு நகர்த்தக்கூடிய தலைப்புகளை நீக்குவதோடு நில்லாமல் விக்சனரியிலும் அப்பக்கத்தை உருவாக்கி தகவலைச் சேமிக்க வேண்டும். விக்சனரியில் இருக்க வேண்டிய தலைப்பு என்பது வேறு. விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய தலைப்புக்கு விக்சனரி போல் பொருள் மட்டும் தந்திருப்பது வேறு பிரச்சினை. இவற்றை உடனடியாக நீக்காமல் ஒரு மாத கால அறிவிப்பு மட்டுமே இட வேண்டும்.
  • ஒரு நாளைக்குப் புதிதாக 30 கட்டுரைகள் எழுதுகிறோம் என்று கொள்வோம். அவற்றில் பத்தில் ஒரு பங்காவது ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதற்கான முனைப்பைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு நாளைக்கு மூன்று கட்டுரைகளை மேம்படுத்துதல் என்று கொண்டால் மாதம் 90 கட்டுரைகள். பகுப்பு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை எந்தக் கட்டத்திலும் 200ஐ மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு மேற்பட்டு கட்டுரைகள் அங்கு குவியுமானால், ஒரு மாத காலத்துக்குள் யாராவது அவற்றைக் கவனித்து மேம்படுத்தும் வாய்ப்பு குறைவே. தரத்தை மேம்படுத்தல், தேவையற்ற கட்டுரைகளை நீக்கல் ஆகியன நன்றே. ஆனால், அனைத்தையும் மிகக் குறுகிய காலத்துக்குள் செய்து முடிப்பது பயனை விட இழப்பையே தரும். சிறுகச் சிறுகவும் தொடர் செயற்பாடாகவும் இருப்பது நன்று.
  • பொருளுள்ள மூன்று வரிகள் இருந்தால் போதுமானது. மூன்று வரிகளுக்குக் கூடுதலாக இருக்க வேண்டும் என்று தேவையில்லை. மூன்று வரிக் கட்டுரைகளை நீக்க வேண்டாம்.
  • மூன்று வரிக்குக் குறைவாக இருந்தாலும் பயனுடைய தகவல் என்றால் ஒத்த துறையைச் சேர்ந்த பட்டியல் பக்கத்துக்கு நகர்த்த முடியுமா என்று பார்க்கலாம். தேவைப்பட்டால், அத்தகைய புதிய பட்டியல் பக்கத்தை உருவாக்கலாம்.
  • குறிப்பிட்ட துறை குறித்து மேம்படுத்துவதற்கான துறையறிவு உள்ளோர் எவரும் இல்லையெனில், அவற்றைப் பயனர் வெளியின் துணைப்பக்கம் ஒன்றில் சேகரித்து வைப்பதும் விரும்பத்தக்கது. பல புதியவர்களும் தங்கள் கட்டுரைகள் ஏன் காணாமல் போகின்றன என்று புரியாமல், தங்கள் உழைப்பு வீணாவதாக எண்ணி பங்களிப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.
  • குறிப்பிட்ட நீக்கல் அறிவிப்பு உள்ள கட்டுரைகளைத் தொடங்கியவர்களின் பேச்சுப் பக்கத்தில் ஒரு கவன ஈர்ப்பு இடுவது நல்லது. ஒவ்வொரு கட்டுரைக்கும் செய்யத் தேவை இல்லை. எனினும், மாதம் ஒரு முறையாவது பகுப்பு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பக்கத்தைப் பார்த்து தாங்கள் உருவாக்கிய கட்டுரைகள் / தாங்கள் மேம்படுத்தக்கூடிய துறை சார் கட்டுரைகள் உள்ளனவா என்று பார்க்கலாம். நீக்கல் வார்ப்புருவில் தேதி இடுவது போல், குறிப்பிட்ட பயனரின் பக்கத்தையும் குறிப்பிடுமாறு மாற்ற முடிந்தால் நன்று. இதன் மூதல் ஒருவர் புகுபதியும் போது அவரது அறிவிப்புகள் பகுதியில் இது தோன்றும்.
  • போபொசு (துணைக்கோள்) போன்ற கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. இது போன்றவற்றில் நீக்கல் வார்ப்புரு இடுவதைத் தவிர்க்கலாம். அதே வேளை, இலகுவாக தகவல் கிடைக்கக்கூடிய இது போன்ற கட்டுரைகளைத் தொடங்கும் பயனர்கள், மூன்று வரிகளோடு நிறுத்தாமல் எடுத்த எடுப்பிலேயே சற்றேனும் விரிவாக எழுத முனைவது நல்லது. ஏனெனில், பெரும்பாலான கட்டுரைகள் தொடக்க நிலையிலேயே தேங்கி விடுவதைக் காண முடிகிறது. ஒரு வேளை, ஆயிரவர் / ஈராயிவர் போன்ற பட்டங்கள், அதனை முன்வைத்து இதழ்களில் எழுதப்படும் கட்டுரைகள் போன்றவை, கட்டுரை எண்ணிக்கை அடிப்படையிலான ஒரு உந்துதலை ஏற்படுத்தியிருக்கிறதா என்று தெரியவில்லை.
  • மூன்று வரிகளுக்கு மேல் எழுதுவதற்கு தகவலே இல்லை என்ற நிலையில் உள்ள கட்டுரைகளை அப்படியே விட்டு விடலாம். இயன்றால், ஒத்த துறை சார்ந்த கட்டுரைகளைப் பட்டியல் பக்கத்துக்கு நகர்த்துவது பயன் தருமா என்று பார்க்கலாம்.--இரவி (பேச்சு) 07:33, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]