பிளெண்டர் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளெண்டர்
Blender
உருவாக்குனர்பிளெண்டர் தொண்டு நிறுவனம்
அண்மை வெளியீடு4.1.0[1] Edit this on Wikidata / 26 மார்ச்சு 2024
மொழிசி, சி++, மற்றும் பைத்தோன்
இயக்கு முறைமைCross-platform
மென்பொருள் வகைமைமுப்பரிமாண வரைகலை
உரிமம்குனு ஜிபிஎல்
இணையத்தளம்www.blender.org
ஃப்ரெ ஃபிரெ
டமில்

பிளெண்டர் (Blender) என்பது ஒரு சுதந்திரமான முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருள். இது Microsoft Windows, Mac OS X, Linux, IRIX, Solaris, NetBSD, FreeBSD, OpenBSD போன்ற இயக்கத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்டு ஜிஎன்யு உரிமத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மேலே குறிப்பிட்ட அனிமேஷன் மென்பொருட்கள் கொண்டுள்ள வசதிகள் அனைத்தையும் பெரும்பாலும் கொண்டிருக்கிறது.

வரலாறு[தொகு]

ஒவ்வொரு மென்பொருள் உருவாக்கத்திற்கு ஒரு வரலாறு இருப்பது போல பிளெண்டர் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

பிளெண்டர் முதலில் ஒரு டச்சு அனிமேஷன் ஸ்டுடியோவான NeoGeo மற்றும் Not a Number Technologies (NaN) ஆகியவற்றுக்கு அதன் உள்வேலைகளை செய்ய பயன்படும் மென்பொருளாக உருபெற்றது. இது ஆரம்பத்தில் டன் ரொசான்டால் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது. “ப்ளண்டர்” என்ற பெயர் பேபி என்ற ஆல்பத்திலுள்ள ஒரு பாடலின் மூலம் வைக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு ரொசான்டால் NaN என்ற நிறுவனம் நிறுவப்பட்டு இந்த மென்பொருள் விநியோகிக்கப்பட்டது. 2002 வரை இந்த மென்பொருள் ஷேர்வேர் மூலம் விநியோகிக்கப்பட்டது. அதன் பின் 2002இல் இது ஜிஎன்யு பொது உரிமத்தின் கீழ் வெளியிட அறிவுறுத்தப்பட்டது. எனவே அதற்காக நிதி திரட்டும் பணி தொடங்கப்பட்டு 2002 செப்டம்பர் 2 ஆம் தேதியில் போதிய நிதி திரட்டப்பட்டு, அதன் மூலக்குறியீடு பொது பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இப்போது ப்ளெண்டர் ஒரு திறந்த நிரல் இலவச மென்பொருளாகும். இது ப்ளிண்டர் அமைப்பு என்பதின் கீழ் கண்காணிக்கப்பட்டு, வழிநடத்தப்படுகிறது.

ஆரம்பித்தில் ப்ளிண்டர் இரட்டை உரிமத்தில் பதிவு செய்யப்பட்டது. அதாவது இதில் மூலக்குறியீடுகளை கொடுக்க வேண்டும் என்று தேவையில்லை, ஆனால் ப்ளிண்டர் அமைப்புக்கு பணம் செலுத்தி அதனை பெற்று கொள்ளும்படி இருந்தது. ஆனால் 2005இல் கைவிடப்பட்டு, இப்போது ஜிஎன்யு ஜிபிஎல் உரிமத்தின் கீழ் மட்டும் கிடைக்கிறது.

சேவை[தொகு]

பிளெண்டரின் 2.44 பதிப்பு மட்டும் 8 லட்சம் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்துவதற்கு இதன் கம்யூனிட்டி கையேடுகள் மூலம் பல பயனர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் தங்களுக்கான சந்தேகங்களை ஃபோரம்களிலும் விவாதித்து அறிந்து கொள்கிறார்கள்.

மேலும் பல இணைய தளங்களும் இதற்கான உதவிகளை வழங்கி வருகின்றன. ப்ளெண்டர் ஆர்ட் இதழ் தன் இணையதளத்தில் இதற்கான கட்டுரைகளை வழங்குகிறது. இந்த இதழை (www.blenderart.org) இலவசமாகவே நாம் பதிவிறக்கிக்கொள்ளலாம். உங்களுக்கு மேலும் இதனை பற்றிய தகவலை மேலே குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் சென்று பார்த்து பயனடையுங்கள்.

ஊடங்களில் ப்ளிண்டரின் பயன்[தொகு]

ப்ளிண்டர் மென்பொருளை பற்றி தொழில்நுட்ப வாயிலாக பார்ப்பதை விட முதலில் அது பொது பயனில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ரீதியில் பார்த்தால் இன்னும் சில விஷயங்களை அதில் நாம் கற்றுக் கொள்ளலாம்.

NeoGeo என்ற நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கருவியே இந்த ப்ளிண்டர் ஆகும். இங்கு அது வேலை செய்ததோ இல்லையோ அந்த மென்பொருள் மூலம் முதலில் பயன்படுத்தப்பட்டது ஸ்பைடர்மேன் 2 படத்தில் தான். இந்த படத்தில் சில சிறிய அனிமேஷன்கள் மற்றும் படத்திற்கு தேவையான ஸ்டோரிபோர்ட்டிலும் இது பயன்படுத்தப்பட்டது.

இந்த படத்தில் பணியாற்றிய ஆண்டனி என்ற அனிமேஷன் வித்துவான் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஸ்டோரி போர்டை மிகவும் கவர்ச்சிகரமாக உருவாக்கி, சில மோஷன் ஷாட்களை இந்த மென்பொருளை பயன்படுத்தியே பயன்படுத்தியதாக கூறினார்.

அடுத்து Friday or Another day என்ற படம் இதில் பல சிறப்பு எஃபைக்ட்டுகளை ப்ளிண்டர் மூலம் செய்தனர் மேலும் இந்த படம் முழுவதும் லினக்ஸ் இயக்கத்தளத்திலேயே முழுவதும் தயாரிக்கப்பட்டது. (இதுபோல லினக்ஸ் இயக்கத்தளத்திலேயே முழுவதும் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியான படம் Ku fu panda ஆகும்) இந்த படம் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு பரிசு பெற்றது.

இதுபோல ஹிஸ்டரி சேனல் என்ற தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் இந்த ப்ளிண்டர் மூலம் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு சிறப்பு செய்தியாகும்.

திரைப்படங்கள்[தொகு]

2005 ஆம் ஆண்டு சில ப்ளிண்டர் கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் ஒரு குறும்பட தயாரிக்க எண்ணி அதில் மூழ்கினர். இந்த திட்டத்தின் பெயர் ஆரஞ்சு மூவி திட்டமாகும். அதன் விளைவாக 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Elephant dream என்ற குறும்படம் தயாரானது. 10.54 நிமிடங்கள் அளவில் இந்த படம் உருவானது. இந்த படம் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் என்னவெனில் சுதந்திர மென்பொருட்கள் மூலமும் நல்ல அனிமேஷன் படங்களை நம்மால் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்கே ஆகும்.

இந்த படம் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதனை ஆரஞ்சு திட்ட இணையத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் சில படங்கள் ப்ளிண்டர் மென்பொருள் மூலம் உருவாகி கொண்டிருக்கின்றன. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • Plumíferos – இது தற்போது அர்ஜென்டினாவிலுள்ள மனோஸ் டிஜிட்டல்ஸ் அனிமேஷன் ஸ்டூடியோவில் தயாராகி வருகிறது.
  • Big Buck Bunny – பீச் திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2007 துவக்கப்பட்ட இந்த திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • Yo Frankie! - அப்ரிகோட் திட்டம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த படம், இந்த வருடம் ஆகஸ்ட் மாதமே வர வேண்டியது ஆனால் சில பல காரணங்களால் இதன் பணி முடித்தல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு அடிப்படையான கேரக்டர்களை கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Blender 4.1 Release Notes". 26 மார்ச்சு 2024. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளெண்டர்_(மென்பொருள்)&oldid=3305156" இலிருந்து மீள்விக்கப்பட்டது