சாஹ்ரியர் நஃபீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஹ்ரியர் நஃபீஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாஹ்ரியர் நஃபீஸ் அகமட்
பட்டப்பெயர்அபீர்
மட்டையாட்ட நடைஇடதுகை
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 43)செப்டம்பர் 12 2005 எ. இலங்கை
கடைசித் தேர்வுசனவரி 21 2010 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 76)சூன் 21 2005 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபஅக்டோபர் 17 2010 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்42
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005-இன்றுபாரிசல் கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 16 64 47 86
ஓட்டங்கள் 835 1,976 2,772 2,467
மட்டையாட்ட சராசரி 26.09 33.49 31.14 30.83
100கள்/50கள் 1/4 4/11 3/19 5/11
அதியுயர் ஓட்டம் 138 123* 138 147
வீசிய பந்துகள் 48
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 11/– 28/– 19/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்
cricketarchive.com
, பிப்ரவரி 21 2010

சாஹ்ரியர் நஃபீஸ் அகமட் (Shahriar Nafees Ahmed, வங்காள மொழி: শাহিরয়ার নাফীস আহেমদ பிறப்பு: அக்டோபர் 30, 1987) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார் .வங்காளதேச டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, டாக்கா அணி,வங்காளதேச 19 இன் கீழ், வங்காளதேச 23 இன் கீழ், பாரிசல் கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . செப்டம்பர், 12 இல் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து லசித் மலிங்காவின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில்24 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார்.[2] 2013 ஆம் ஆண்டில் வங்ல்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .ஏப்ரல் 17 இல் ஹராரேயில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 39 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து ஜார்வீசின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 11 ஒட்டங்கள் எடுத்து மீண்டும் ஜார்வீசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[3]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சூன் 21 இல் நாட்டின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்து டிரெமியர்டின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியிலில் இங்கிலாந்து அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்

2011 ஆம் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணாம் செய்து விளையாடியது. டிசம்பர் 5, சிட்டகொங்கில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். .[1] இந்தப் போட்டியில் 52 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து சயீத் அஜ்மலின் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.

பன்னாட்டுஇருபது20[தொகு]

2006 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையடியது. நவமபர் 28 இல் குல்னாவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 17 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்துசிகும்பராவின் பந்துவீச்சில் ஆடமிழந்தார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

தலைவராக[தொகு]

வக்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முதல் பன்னாட்டு இருபது20 போட்டிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] அப்போது இவருக்கு வயது 21 ஆண்டுகள் 211 நாட்கள் ஆகும். இதன்மூலம் மிக குறைந்த வயதில் தலைவர் ஆனவர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். முட்க்ஹல் இடத்தில் ரோட்னி டிராட் உள்ளார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Shahriar Nafees", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  2. "1st Test, Bangladesh tour of Sri Lanka at Colombo, Sep 12-14 2005 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  3. "1st Test, Bangladesh tour of Zimbabwe at Harare, Apr 17-20 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  4. "Only T20I, Zimbabwe tour of Bangladesh at Khulna, Nov 28 2006 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
  5. "Cricket Records | Records | Bangladesh | Twenty20 Internationals | List of captains | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/individual/list_captains.html?class=3;id=25;type=team. 
  6. "Records | Twenty20 Internationals | Individual records (captains, players, umpires) | Youngest captains | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283414.html. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஹ்ரியர்_நஃபீஸ்&oldid=3316275" இலிருந்து மீள்விக்கப்பட்டது