வி. எஸ். நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவர் வி. எஸ். நடராசன் (Dr.V.S.Natarajan) சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவ நிபுணர். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு முதியோர் நலத் துறையை உருவாக்கினார். இங்கு இந்தப் படிப்பில் முதுநிலைப் படிப்பை 1996ஆம் ஆண்டில் ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதல்முறை அத்தகைய படிப்பை வழங்கிய பெருமையை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கச் செய்தார்.

இத்துறையில் தொடர்ந்து இவர் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டும் வண்ணம் இந்திய அரசு 2012ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.[1]

கல்வித் தகுதி[தொகு]

  • 1965ஆம் ஆண்டில் மருத்துவத்தில் இளநிலை பட்டமும் 1968ஆம் ஆண்டில் மருத்துவ முதுநிலைப் பட்டமும்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றார்.

  • 1974ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்று மூப்பியல் மருத்துவப் பயிற்சிப் பெற்றார். எம்.ஆர்.சி.பி.

பட்டமும் இவருக்குக் கிடைத்தது.

  • 1987இல் எடின்பரோவில் எப்.ஆர்.சி.பி. பட்டம் பெற்றார்.

சாதனைகள்[தொகு]

மூப்பியல் மருத்துவத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளைச் இவர் செய்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் வெளிவரும் மருத்துவ நூல்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1986-ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மூப்பியல் மருத்துவப் பேராசிரியர் என முதன் முதலாக பணியில் அமர்த்தப்பட்டார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மூப்பியல் முதுநிலைப் படிப்பைத் தொடங்குவதில் முனைந்து வெற்றிபெற்றார். வயதான முதியோர்களுக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1981ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்படப்பிரிவினர் ’மூத்தக்குடிமகன்’என்னும் தலைப்பில்ர் ஆவணப் படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். இந்த முயற்சியில் மருத்துவர் நடராசனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது ஆகும். ’அந்திமக் காலம்’ என்னும் பொருளில் ஆங்கிலத்தில் தொலைக்காட்சி படம் வரச்செய்தார். மூத்தக்குடிமக்கள் அமைப்புக்குத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். முதியோர் மருத்துவம் தொடர்பாக 25 நூல்களுக்கு மேல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

  • 1994ஆம் ஆண்டில் மருத்துவர் பி.சி. ராய் தேசிய விருது
  • 1997ஆம் ஆண்டில் முதியோர் மருத்துவ சங்கம் விருது
  • 2007ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ‘சிறந்த சமூக சேவகர்’ விருது.
  • 2010ஆம் ஆண்டில் உலக முதியோர் தினத்தன்று ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது இந்திய நடுவணரசு
  • 2012ஆம் ஆண்டில் ’பத்மசிறீ’ விருதும் ‘முதியோர் மருத்துவத் தந்தை’என்னும் பட்டமும் வழங்கி மத்திய அரசு வழங்கி இவரைக் கவுரவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

http://geriatricsdrvsn.com/about.html பரணிடப்பட்டது 2014-05-11 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._நடராஜன்&oldid=3451858" இலிருந்து மீள்விக்கப்பட்டது