கச்சான் (காற்று)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று கச்சான் என அழைக்கப்படுகின்றது.

இலங்கையில் கச்சான் காற்று[தொகு]

இலங்கையில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று தெற்கு, மேற்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றாக வீசி மழையைப் பொழிந்த பின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வறண்ட கச்சான் காற்றாக வீசுகின்றது.

கச்சான் காற்று பற்றிய நம்பிக்கைகள்[தொகு]

கச்சான் காற்று வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசுவதாக நம்பப்படுகின்றது. வைகாசிக் கச்சான் பொய்யாமல் வீசும், ஆடிக்கச்சான் பாடி அடிக்கும், ஆவணிக் கச்சான் புரட்டி அடிக்கும்" என்பர்.

  • கச்சான் பற்றிய நாட்டார் பாடல்:
கச்சான் அடித்த பின்பு
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியில நாலு மயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சான்_(காற்று)&oldid=3452264" இலிருந்து மீள்விக்கப்பட்டது