தமிழ் இஸ்லாம் இணையத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோற்றம்[தொகு]

2000ம் ஆண்டில், சவுதி அரேபியா ரியாத் மாநகரில் தகவல், மற்றும் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் ஒன்று கூடி ஆலோசித்து தமிழ் முஸ்லீம் மக்களுக்காக குர்ஆன், சுன்னா,ஹதீஸ்களை தெளிவாக தமிழில் தரவேண்டும் என்ற நோக்குடன் துவங்கப்பட்டதே இந்த தமிழர்களுக்கான இஸ்லாமிய வலைமணை.

இணையத்தின் செயல்பாடுகள்[தொகு]

துவங்கிய காலங்களில் ஏஓன்ரியலிஸம்.காம் என்று பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தமிழ் வலைமணை பின்னர் தமிழ்இஸ்லாம்.காம் என்று பெயரிடப்பட்டு உலக வலம் வந்தது. ஆயிரக்கணக்கில் நேயர்களை பெற்றிருந்த இணையத்தளம் என்ற புகழும் இதற்கு உண்டு. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா,துபாய்,குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், போன்ற நாடுகளிலிருந்தும் வாசகர்களைப் பெற்றிருக்கும் வலைமணை இது என்றும் சொல்லலாம்.

வெளி இணைப்புக்கள்[தொகு]