பேச்சு:தமிழியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழியல் கட்டுரை ஒழுங்கமைப்பு[தொகு]

  • தமிழியல் வரலாறு
  • தமிழியல் - கல்வித் துறை
  • தமிழியலின் பயன்பாடு
  • தமிழியல் ஆய்வுப் புலம்
  • தமிழியல் ஆய்வு முறைகள்
  • தமிழியல் அறிஞர்கள்
  • தமிழியல் (மொழி-நாடு ரீதியாக)
  • தமிழியல் ஆய்வு அமைப்புகள்
  • தமிழியல் மாநாடுகள்
  • தமிழியலும் புகலிடத் தமிழரும்
  • தமிழியலின் அரசியல் பரிணாமம்
  • தமிழியல் நோக்கி விமர்சனங்கள்


--Natkeeran 06:49, 27 பெப்ரவரி 2007 (UTC)


குறிப்புகள்[தொகு]

ச. வையாபுரிப்பிள்ளை[தொகு]

"இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா.ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. அவர் 65 ஆண்டுகள் வாழ்ந்தார். அவற்றில் 45 ஆண்டுகள் தமிழியல் ஆய்வில் கலந்தன. பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலுத்திலுமாக எழுதிய கட்டுரைகள் சுமார் 250. பதிப்பித்த நூல்கள் 40, தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) 7 தொகுதிகள் (இணைப்புத் தொகுதி உட்பட), ஆங்கிலத்தில் ஒரு இலக்கிய வரலாற்று நூல் History of Tamil Language and Literature சிறுகதைத் தொகுப்பு ஒன்று, அவரது தமிழ்க் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட பின்னர் பல நூற் தொகுதிகளாக (ஏழு) வெளிவந்துள்ளன. "

"தமிழியல் ஆராய்ச்சியில் அறிவியல் நிலை நின்ற ஆராய்ச்சி அணுகுமுறையைத் கையாண்டு அறிவியல் அணுகுமுறைக்கு அடித்தளம் அமைத்துச் சென்றவர் பேராசிரியர் வையாபுரிபிள்ளை. இவரது பன்முக அருமைத் திறன்கள் தமிழியலில் புதுப்பரிமாணங்களை வழங்கிச் சென்றுள்ளன."

"தமிழ் இலக்கியத்தையும் அதன் நூல்களையும் ஆராய்வதற்கான இறுக்கமுள்ள கட்டுத்தளர்வற்ற ஓர் ஆய்வு முறையை வளர்த்தெடுத்தவராவார். ஐயந்திரிபற ஒரு கூற்றைக் கூறுவதற்கு உதவும் சான்றையே ஆதாரமாகக் கொள்ளும், பட்டறிவு அளவைக் கொண்ட ஆராய்ச்சி முறைமை வழி நின்று அவரால் கூறப்பட்டவை. இன உணர்வுடன் தொழிற்பட்ட புலமையாளரின் மனங்களைப் புண்படுத்துபனவாக, அதிருப்தியளிப்பனவாக அமைந்தன. ஆனால் அவர் கையாண்ட ஆய்வு முறைமைக்குத் தக்க பதில் இவர்களிடத்தில் இருக்கவில் லை. அத்தகைய உண்மைகளை அவர் கூறியதனால் தமிழ்த்துரோகி எனத் தாக்கப்பட்டார்."

http://archives.aaraamthinai.com/6mthinaithoguppu/special/vaiyapuri.asp

பெ. சு. மணி[தொகு]

"வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயங்கியல் விஞ்ஞான ஆய்வுநெறிகள் தமிழியல் ஆராய்ச்சிப் பரப்பை ஆழமாகவும், அகலமாகவும் விரிவாக்கம் செய்துள்ளன.

வெறும் உணர்ச்சி மய நோக்குகள் வழியே 'ஆய்வுகள்' நிகழ்த்தப்பட்டு வந்த சூழலில் விஞ்ஞானபூர்வமாக அறிவுத்தடத்திலே தமிழியல் ஆய்வைத் திருப்பிவிட்ட சாதனை மார்க்சிய ஆய்வாளர்களுக்குரியது. "

"'கலை கலைக்காகவே' எனும் கோட்பாட்டு மயக்கத்திலிருந்து 'கலை மக்களுக்காகவே' எனும் கோட்பாட்டை உணர்ந்து தெளிவு பெற எனக்கு வழிகாட்டியவர்கள் மார்க்சிய ஆய்வாளர்கள். குறிப்பாகப் பேராசிரியர் கைலாசபதியின் தமிழியல் ஆய்வுநெறி என்னை மிகவும் ஈர்த்தது."

http://archives.aaraamthinai.com/nerkaanal/june2000/june11a.asp

தமிழியல் ஆராய்ச்சியாளர்கள்[தொகு]

  • கைலாசபதி
  • கா. சிவத்தம்பி
  • தொ.மு.சி ரகுநாதன்
  • எஸ். இராமகிருஸ்ணன்
  • நா. வானமாமலை

சுட்டிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழியல்&oldid=214336" இலிருந்து மீள்விக்கப்பட்டது