டியூரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டியூரோன்
Central processing unit

ஏஎம்டி டியூரோன் "Spitfire" CPU
உருவாக்கப்பட்டது: From 2000 நடுப்பகுதி to 2006
உற்பத்தியாளர்: ஏஎம்டி
அதிகூடிய சீபியு துடிப்பு: 600 MHz இருந்து 1.8 GHz வரை
FSB speeds: 200 MT/s இருந்து 266 MT/s வரை
Min feature size: 0.18 µm to 0.13 µm
Instruction set: x86
Socket: சாக்கட் A
Core names:
  • Spitfire
  • Morgan
  • Applebred

ஏஎம்டி டியூரோன் கணினியின் x86 அறிவுறுத்தல்களுக்கு ஒத்திசைவான ஏஎம்டியினால் உற்பத்திசெய்யப்பட்ட புரோசசர்கள் ஆகும். 19 ஜூன் 2000 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புரோசர்கள் ஏஎம்டி அத்லோன் ரக புரோசசர்கள் மற்றும் இதன் போட்டியாளர்களான இண்டெல் பெண்டியம், செலிரோன் ரக புரோசர்களுக்கு ஓர் மாற்றீடாக அறிமுகம் செய்யப்பட்டது. டியூரோன் புரோசசரின் உற்பத்தியானது 2004 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செம்ப்ரோன் புரோசர்கள் அறிமுகம் ஆனது.

வரலாறு[தொகு]

டியூரோன் புரோசர்கள் அத்லோன் புரோசர்களுடன் பின் ஒத்திசைவானது (pin-compatible) அதாவது அத்லோன் புரோசசர் போடும் மதர்போட்டிலேயே டியூரோன் ரக புரோசசரையும் போட்டுக் கொள்ளலாம். ஆரம்பத்தில் அறிமுகமாக டியூரோன் FSB புரோசசர் நொடிக்கு 100 மெகாஹேட்ஸ் வேகத்திலேயே வேலைசெய்தது. பின்னர் வந்த 133 மெகாஹேட்ஸ் வேகத்தை ஆதரித்தாலும் அத்லோன் புரோசர்கள் FSB இல் நொடிக்கு 166 மற்றும் 200 வேகத்தில் இயங்கின. ஆரம்பத்தில் வந்த டியூரோன் புரோசசர் ஸ்பிட்பயர் கோர் இல் இயங்கியது அது நொடிக்கு 600 மெகாஹேட்ஸ் வேகத்தில் இருந்து 950 மெகாஹேட்ஸ் வரை இயங்கியது.

டியூரோனுக்கும் அத்லோன் புரோசருக்கும் பிரதான வேறுபாடாக அதிவேக காஷ் நினைவகம் ஆகும். டியூரோன் புரோசரில் 64 கிலோபைட் ஆக இருந்த நினைவகம் அத்லோனில் 256 கிலோபைட் ஆகவோ அல்லது 512 கிலோபைட் ஆகவோ இருந்தது. இது இண்டெல் செலிரோன் புரோசரின் 128 கிலோபைட் காஷ் நினைவகத்தை விடக் குறைவாக இருந்தாலும் இப்புரோசரும் பிரபலமாகவே விளங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டியூரோன்&oldid=1827760" இலிருந்து மீள்விக்கப்பட்டது