கோ. புண்ணியவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோ. புண்ணியவான் (ஆங்கிலம்: K. Punniyavaan; பிறப்பு: மே 14 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • "நிஜம்" (1999)
  • "சிறை" (2005)
  • "நிறம்" (சிறுகதைகள், தொகுப்பாசிரியர்).

பரிசுகளும், விருதுகளும்[தொகு]

  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2001)
  • மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக் கதைகள் போட்டியில் பலமுறை பரிசுகள்
  • மலேசிய அஸ்ட்ரோ நிறுவனத்தின் வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப் போட்டியில் ரிங்கிட் 25,000.00 மதிப்புள்ள முதல் பரிசு (2002).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._புண்ணியவான்&oldid=3242042" இலிருந்து மீள்விக்கப்பட்டது