நூலகவியல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலகவியல் ஐக்கிய இராச்சியத்தின் லூட்டன் எனுமிடத்திலிருந்து 2005 இல் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். அதன் முதலிதழ் 1985ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளிவந்தது.

பணிக்கூற்று[தொகு]

  • வாசிப்பை நேசிப்போம்.

நிர்வாகம்[தொகு]

பிரதம ஆசிரியர்[தொகு]

  • என். செல்வராஜா

இவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகின்றார். இவர் இலங்கையில் பிரபல நூலகவியலாளர்களுள் ஒருவராக இருந்தவர். நூல்தேட்டம் எனும் பெயரில் இதுவரை 07 தொகுதிகளில் 7000 இலங்கைத் தமிழ் நூல்களை பதிவாக்கியுள்ளார்.

நிர்வாக ஆசிரியர்[தொகு]

  • திருமதி கல்பனா சந்திரசேகர்

வெளியீடு[தொகு]

  • அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம்

தனிப்பிரதி[தொகு]

  • 100 ரூபாய்

சிறப்பு[தொகு]

நூலகவியல் 1985ம் ஆண்டில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தமிழ் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கிடையிலும் தமிழ் நூலகங்களுக்கிடையேயும் ஒரு உறவு பாலத்தை 1991 வரை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையிலிருந்து வெளிவந்த போது ஆசிரியர்[தொகு]

  • என். செல்வராஜா

இலங்கையிலிருந்து வெளிவந்த போது ஆசிரியர்குழு[தொகு]

  • சி. யோகவேல்
  • (அமரர்) கலாநிதி ஜே. இ. பாக்கியவான்
  • கலாநிதி இ. பாலசுந்தரம்
  • திருமதி ரூபா நடராஜா
  • திருமதி ரோ. பரராஜசிங்கம்
  • எஸ். எல். கமால்தீன்
  • சே. கிருஸ்ணராஜா

இதன் ஆசிரியர் என்.செல்வராஜா புலம்பெயர்ந்து 1991ம் ஆண்டில் லண்டனுக்கு செல்லும்வரை தொடர்ச்சியாக ஏழாண்டுகள் வெளிவந்துள்ளது. மீண்டும் 2005 முதல் புதுப்பொழிவுடன் லண்டனிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

நூலகவியல் சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் இது தாங்கி வெளி வந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலகவியல்_(சிற்றிதழ்)&oldid=789220" இலிருந்து மீள்விக்கப்பட்டது